Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:

கார்த்திகேயன், பெரம்பூர்.

##~##
 சிறிய பெட்ரோல் ஹேட்ச்பேக் கார் வாங்க வேண்டும் என்பது என் ஆசை. என்னுடைய பட்ஜெட் 4-5 லட்சம். நான் வாங்குகிற கார் நல்ல மைலேஜ் தர வேண்டும் என்பதுதான் கண்டிஷன். மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10, ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களில் எந்த காரை வாங்கலாம்?

ஸ்விஃப்ட்தான் உங்கள் பட்ஜெட் மற்றும் மைலேஜ் தேவைகளை நிவர்த்தி செய்யும் கார். ஹூண்டாய் ஐ10-ஐவிட இது அதிக இடவசதியுடன் சிறப்பம்சங்கள் அதிகம் கொண்ட கார். ஆனால், நீங்கள் ஸ்விஃப்ட்டை வாங்குவது இந்த நேரத்தில் சரியானதாக இருக்காது. ஏனெனில், 2011-ம் ஆண்டு துவக்கத்தில் புதிய ஸ்விஃப்ட் வெளிவர இருக்கிறது. புது ஸ்விஃப்ட் வந்துவிட்டால் இப்போது மார்க்கெட்டில் இருக்கும் ஸ்விஃப்ட்டின் ரீ-சேல் மதிப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், புது ஸ்விஃப்ட் வரும் வரை காத்திருங்கள்.

அருள் பிரகாசம், கோயம்புத்தூர்

ஹோண்டா சிவிக் வாங்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். இந்த நேரத்தில் புது சிவிக் அல்லது வேறு ஏதாவது கார்களை ஹோண்டா அறிமுகப்படுத்திவிடுமா என பயமாக இருக்கிறது. ஹோண்டாவின் திட்டம் என்ன?

மோட்டார் கிளினிக்

புதிய சிவிக் 2011 இறுதியில் அல்லது 2012 துவக்கத்தில்தான் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் வேறு புதிய கார்களை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் இப்போதைக்கு ஹோண்டாவுக்கு இல்லை. அதனால், நீங்கள் தாராளமாக ஹோண்டா சிவிக்கை வாங்கலாம்.

ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை.

என்னுடைய பட்ஜெட் 5 லட்சம். புதிதாக ஹேட்ச்பேக் கார் வாங்குவதா அல்லது இதே விலைக்கு பழைய கார் மார்க்கெட்டில் பெரிய செடான் கார் வாங்குவதா எனக் குழப்பமாக இருக்கிறது?

கையில் பணம் இருக்கும்போது எப்போதுமே புதிய கார்களை வாங்குவதுதான் நல்லது. பெரிய கார் வாங்கினால், அதிக இடவசதி இருக்கும் என்கிற நிலை இப்போது இல்லை. புதிதாக வெளிவரும் எல்லா ஹேட்ச்பேக் கார்களுமே பெரிய கார்களுக்கு இணையாக நல்ல இடவசதியுடன் வருகின்றன. அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல வேண்டும்; டிக்கியில் பொருட்கள் அதிகம் வைக்க வேண்டியிருக்கும் என்றால், நீங்கள் செடான் காரை வாங்கலாம். நீங்கள் சொல்கிற பட்ஜெட்டில் பழைய மாருதி ஸ்விஃப்ட் டிசையரை வாங்குவது நல்லது. இதன் பாகங்கள் நீடித்து உழைக்கும் என்பதோடு செலவும் அதிகம் வைக்காத கார்.

சந்துரு, திருச்சி.

மோட்டார் கிளினிக்

1 லட்ச ரூபாய்க்கு பட்ஜெட் இருக்கிறது.   ஹீரோ ஹோண்டா கரீஸ்மா ZMR அல்லது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு ட்வின் ஸ்பார்க் - இரண்டில் எதை வாங்கலாம்?

கரீஸ்மா ZMR பைக்கை வாங்குவதே நல்ல முடிவாக இருக்கும். ராயல் என்ஃபீல்டை விட சிறப்பான பில்டு குவாலிட்டியுடன் தயாரிக்கப்படும் பைக் கரீஸ்மா. 223 சிசி, ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்ஜின்... ராயல் என்ஃபீல்டின் 350 சிசி இன்ஜினைவிட தரமானது. நம்பகத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த தரத்திலும் கரீஸ்மாவே சிறந்த பைக்!

செல்வகுமார், மானாமதுரை.

புதிதாக 150 சிசி பைக் வாங்கலாமெனத் திட்டமிட்டிருக்கிறேன். 'ஹோண்டா யூனிகார்ன் டேஸ்லர் வாங்கலாம். இல்லையில்லை சுஸ¨கி ஜிஎஸ் 150 ஆர் பைக் வாங்கலாம்’ என முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறேன். சுஸ¨கி, ஜிஎஸ் 150 ஆர் பைக்கின் விற்பனையை நிறுத்தப்போகிறது என்று சிலர் பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா? இல்லையென்றால் எந்த பைக்கை வாங்கலாம்?

சுஸ¨கி ஜிஎஸ் 150ஆர் பைக்கைவிட ஹோண்டா டேஸ்லர் சிறந்த பைக். டேஸ்லர் பவர்ஃபுல்லான பைக்கும்கூட. 0-60 கி.மீ வேகத்தைக் கடக்க ஜிஎஸ் 150ஆர் 5.19 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. இதே வேகத்தை டேஸ்லர் 6.33 விநாடிகளில் கடந்து விடுகிறது. இது தவிர கையாளுமை, கியர் ஷிஃப்ட், இன்ஜின் தரம், ஸ்டெபிளிட்டி ஆகியவற்றிலும் சுஸ¨கியைவிட ஹோண்டாவே சிறப்பாக இருக்கிறது. மைலேஜைப் பொறுத்தவரை இரண்டு பைக்குகளுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. சுஸ¨கி, ஜிஎஸ் 150ஆர் பைக்கின் விற்பனையை நிறுத்தப்போவதாக எந்தத் தகவலும் இல்லை.

சுப்பிரமணியம், தஞ்சாவூர்.

ஹுண்டாய் ஆக்ஸென்ட் கார் வாங்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், ஹூண்டாய் ஆக்ஸென்ட்டை சீக்கிரத்தில் நிறுத்திவிட்டு வெர்னாவை மட்டுமே விற்பனை செய்ய இருக்கிறது என்று நண்பர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மை என்பதுபோல் ஆக்ஸென்ட்டில் ஒரே ஒரு பெட்ரோல் மாடலை மட்டுமே வெளியிடுகிறது ஹூண்டாய். ஆக்ஸென்ட் வாங்கலாமா?

குழப்பமே வேண்டாம். நீங்கள் தாராளமாக ஆக்ஸென்ட்டை வாங்கலாம். ஆனால், இன்னும் 3-4 மாதங்கள் பொறுத்திருங்கள். ஹூண்டாய் புத்தம் புது ஆக்ஸென்ட் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. இது, இப்போதிருக்கும் ஆக்ஸென்ட்டைவிட கூடுதல் வசதிகளுடன் வெளிவர இருக்கிறது. பம்பர், க்ரில், பானெட், ஹெட் லைட்ஸ் ஆகியவை மாற்றப்பட இருக்கின்றன. இது தவிர, ஹூண்டாயின் 1.4 மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் இந்த கார் வெளிவர இருக்கிறது. இதில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலையும் ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருக்கிறது!

எஸ்.முரளிதரன், கல்பாக்கம்.

மோட்டார் கிளினிக்

நான் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிகிறேன். நான் ஒரு மாற்றுத் திறனாளி. இப்போது டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் (2007 மாடல்) ஸ்கூட்டரில், இரண்டு பக்கமும் எக்ஸ்ட்ரவாக இரண்டு சக்கரங்கள் இணைத்துப் பயன்படுத்து வருகிறேன். ஸ்கூட்டியின் ரோடு கிரிப்பும், பிக்-அப்பும் எனக்குத் திருப்திகரமாக இல்லை. நான் தினமும் 15-20 கி.மீ தூரம் பயணம் செய்வேன். எப்போதாவது கிழக்குக் கடற்கரைச் சாலை அல்லது ஜிஎஸ்டி சாலையில் 150-200 கி.மீ தூரம் பயணம் செய்வேன். ஹோண்டா ஆக்டிவா, சுஸ¨கி ஆக்ஸஸ், ஹீரோ ஹோண்டா மூன்று ஸ்கூட்டர்களில் ரெட்ரோஃபிட்மென்ட்டோடு (மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கேற்ப) பயன்படுத்த எந்த ஸ்கூட்டர் சிறப்பானதாக இருக்கும்? சிறப்பான ரோடு கிரிப், வசதியான இருக்கை, குறைந்த பராமரிப்புச் செலவு கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மூன்றும் இருந்தால் மைலேஜில் சமரசம் செய்து கொள்ள நான் தயார்.

மூன்று ஸ்கூட்டர்களில் பெஸ்ட் சாய்ஸ் ஹோண்டா ஆக்டிவாதான். ரோடு கிரிப், பிக்-அப், பராமரிப்பு மூன்றிலுமே ஆக்டிவா சிறந்த ஸ்கூட்டர். ரெட்ரோஃபிட்மென்ட் பொருத்தி ஓட்டுவதற்கு ஆக்டிவா மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் சரியான இடைவெளிகளில் சர்வீஸ் செய்து சரியாகப் பராமரித்து வந்தால், ஆக்டிவா 80,000 கி.மீ வரைகூட அதிகமாகச் செலவு வைக்காது!  

எஸ்.முரளிதரன், கல்பாக்கம்.