Published:Updated:

மாருதியை வீழ்த்துமா ரெனோ - நிஸான்?

மார்க்கெட் பிளான்

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, டொயோட்டா எல்லாம் கொஞ்சம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க... மாருதிக்கு நேருக்கு நேர் நின்று சவால்விடுகிறது ரெனோ-நிஸான் கூட்டணி. தன் விற்பனையை இரட்டிப்பாக்கும் மிகப் பெரிய திட்டத்துடன் களம் இறங்கியிருக்கிறது ரெனோ - நிஸான். 

உலகின் ஏதாவது ஒரு மூலையில் ரெனோ - நிஸான், ஆறு வாரங்களுக்கு ஒரு புத்தம் புது காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். அடுத்த நான்கு ஆண்டுகளின் முடிவில், ரெனோ-

மாருதியை வீழ்த்துமா ரெனோ - நிஸான்?

நிஸானின் 66 புதிய கார்கள் உலகம் முழுக்க விற்பனைக்கு வந்திருக்கும். தவிர, 90 புதிய தொழில்நுட்பங்களை, தங்களது கார்களில் அறிமுகப்படுத்த இருக்கிறது ரெனோ-நிஸான். இதுதான் மாஸ்டர் பிளான்!

இந்தியாவில்?

2008-ம் ஆண்டு 4,500 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை ஒரகடத்தில் தன் தொழிற்சாலையைத் துவக்கியது ரெனோ-நிஸான். ரெனோ நிறுவனம் - ஃப்ளூயன்ஸ், பல்ஸ் என இரண்டு கார்களையும், நிஸான் நிறுவனம் - மைக்ரா, சன்னி என இரண்டு கார்களையும் சென்னைத் தொழிற்சாலையில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இன்னும் மூன்று மாதங்களில் ரெனோ டஸ்ட்டர் காரையும், நிஸான் எவாலியா காரையும் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது. தவிர, ரெனோ நிறுவனம் கோலியோஸையும், நிஸான் டீனா, 370 Z, எக்ஸ்-ட்ரெய்ல் ஆகிய கார்களையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன.  

மாருதியை வீழ்த்துமா ரெனோ - நிஸான்?

நிஸான், அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்தும் இந்தியாவில் வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நிஸான் - அசோக் லேலண்ட் கூட்டணியில், விற்பனைக்கு வந்திருக்கும் 'தோஸ்த்’ எல்சிவி செம ஹிட். அடுத்த அதிரடியாக, இந்தியாவில் டட்சன் பிராண்டு கார்களை விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக அறிவித்திருக்கிறார் ரெனோ-நிஸான் நிறுவனத் தலைவர் கார்லோஸ் கோன். டட்ஸன் பிராண்டு கார்களை 1986-ம் ஆண்டே நிறுத்திவிட்டது நிஸான். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து டட்ஸன் பிராண்டுக்கு உயிர் கொடுக்க இருக்கிறது நிஸான். காரணம், நான்கு லட்ச ரூபாய்க்கும் குறைவாக இந்தியாவில் கார்களை விற்பனைக்குக் கொண்டு வந்தால்தான், மாருதியின் மார்க்கெட்டைப் பிடிக்க முடியும். ஆனால், இந்தியாவில் நிஸான் பெயரிலேயே குறைந்த விலை கார்களை விற்பனை செய்தால், அது பிராண்ட் இமேஜைப் பாதிக்கும் எனக் கருதுகிறது நிஸான், அதற்காகத்தான் அடக்கம் செய்யப்பட்ட டட்ஸனுக்கு உயிரூட்டுகிறது நிஸான்.

மாருதியை வீழ்த்துமா ரெனோ - நிஸான்?

முதலில், இரண்டு சின்ன ஹேட்ச்பேக் கார்களை டட்ஸன் பெயரில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது நிஸான். இதில் முதல் காராக விற்பனைக்கு வர இருக்கும் கார், நிஸான் மைக்ராவின் இரண்டு தலைமுறை பழைய காரான 'மைக்ரா கே-11.’ இதனைத் தொடர்ந்து 'கே-2’ என்ற குறியீட்டில் அழைக்கப்படும் 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்ட காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. இது, விலையில் டாடா நானோவுடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை நிஸானின் இந்தியக் கூட்டாளியான அசோக் லேலண்ட் தயாரிக்க இருக்கிறது!

 - சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு