Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

காற்றில் இயங்கும் டாடா கார்!

மோட்டார் நியூஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காற்றில் இயங்கும் நவீன தொழில்நுட்பம்கொண்ட காரை வெற்றிகரமாகச் சோதனை செய்திருக்கிறது டாடா. பெட்ரோல், டீசல் இல்லாமல் மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைக்க, கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் டாடா நிறுவனம் லக்ஸம்பர்க் நாட்டில் உள்ள 'மோட்டார் டெவலப்மென்ட் இன்டர்நேஷனல்’ நிறுவனத்துடன் இணைந்து, காற்றில் இயங்கும் கார் தயாரிப்பை 2007-ம் ஆண்டு துவங்கியது. காற்றைச் சக்தியாகக்கொண்டு இயங்கும் இந்த கார், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்லுமாம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு இருக்கிறது டாடா.

டிசையரின் விலை மீண்டும் உயர்ந்தது!

மோட்டார் நியூஸ்

பிப்ரவரி மாதம் முதல் விற்பனைக்கு வந்த புதிய ஸ்விஃப்ட் டிசையரின் விலையை 8,000 முதல் 12,000 ரூபாய் வரை உயர்த்திருக்கிறது மாருதி. ஏற்கெனவே ஏப்ரல் மாதவாக்கில் 11,000 முதல் 17,000 ரூபாய் உயர்த்தியது. இப்போது மறுபடியும் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு டீசல் கார்களுக்கு மட்டுமே! பெட்ரோல் கார்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

சென்னையில் யமஹா தொழிற்சாலை!

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

ஏற்கெனவே மோட்டார் விகடன் சொன்னதுபோலவே, சென்னையில் தொழிற்சாலை அமைப்பதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருக்கிறது யமஹா. சென்னையை அடுத்திருக்கும் வல்லம் - வடகல் தொழில் பூங்காவில் யமஹா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை அமைய இருக்கிறது. 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், 4,44,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய இருக்கும் இந்தத் தொழிற்சாலையில், ஆண்டுக்கு 4 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கப்படும். இந்தத் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2018-ம் ஆண்டில் 18 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் என்ற இலக்கை எட்டும். உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் சர்ஜாப்பூரில், யமஹாவுக்கு ஏற்கெனவே மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை இருக்கிறது. ஆனாலும், சென்னையில் அமைய இருக்கும் தொழிற்சாலை சர்ஜாப்பூரில் இருக்கும் தொழிற்சாலையைவிட உற்பத்தித் திறனில் பெரிதாக இருக்கும். நேரடியாக 1,800 பேருக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்க இருக்கும் இந்தத் தொழிற்சாலையில், தயாரிப்புப் பணிகள் 2014, ஜனவரியில் துவங்கும்.

வருகிறது புதிய ஸ்பார்க்!

மோட்டார் நியூஸ்

தீபாவளி நெருக்கத்தில் புதிய ஸ்பார்க்கை வெளியிட இருக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ். மாற்றி அமைக்கப்பட்ட கிரில், ஹெட் லைட்ஸ், பனி விளக்குகள் என ஸ்டைலிங் மாற்றங்கள் மட்டுமே! புதிய ஸ்பார்க் இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது.

இனி லாரிகளுக்கும் பிராண்ட் அம்பாசிடர் டோனிதான்!

மோட்டார் நியூஸ்

அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.டோனி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளாக கமர்ஷியல் வாகனங்களைத் தயாரித்து வரும் அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு, இதுவரை எந்த பிராண்ட் அம்பாசிடரும் இருந்தது இல்லை. தற்போது, பாரத்பென்ஸ் நிறுவனம் சென்னையில் தொழிற்சாலை ஆரம்பித்து, அதிரடி விலையில் வாகனங்களை வெளியிட்டு இருப்பதால், கொஞ்சம் கலங்கிப்போய் இருக்கிறது அசோக் லேலாண்ட். போட்டியைச் சமாளிக்க டோனியின் ராசியை நம்புகிறது அசோக் லேலாண்ட்.

மினி ரேஸ் டிராக்!

மோட்டார் நியூஸ்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் உத்தண்டி அருகே புதிதாகப் பிறந்திருக்கிறது கோ-கார்ட் ரேஸ் ட்ராக். ரேஸ் வீரராக விரும்பும் ஒவ்வொருவருக்கும் கோ - கார்ட்தான் பயிற்சிக் களம். மைக்கேல் ஷூமேக்கர் முதல் செபாஸ்ட்டியன் வெட்டல் வரை எல்லோருமே கோ-கார்ட்டில் பயிற்சி எடுத்தவர்கள்தான். 'இ.சி.ஆர் ஸ்பீட்வே’ எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ரேஸ் டிராக், ரேஸ் வீரர் அர்மான் இப்ராஹிமின் மீக்கோ மோட்டார் ஸ்போர்ட்ஸுக்குச் சொந்தமானது. 600 அடி நீளமும் 6 அடி அகலமும்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த டிராக், வெறும் சிமென்ட் தரையாக இல்லாமல், முறையான ரேஸ் டிராக் போன்று நல்ல கிரிப் உடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முதல் ஆளாக இந்த மினி டிராக்கில் சீறிப் பாய்ந்து த்ரில்லைக் கூட்டினார் ரேஸ் வீராங்கனை அலீஷா அப்துல்லா.

ஐடிஐ மாணவர்களுக்கு வேலை - மாருதியின் தேடல்!

மோட்டார் நியூஸ்

பாலிடெக்னிக், பொறியியல் துறைகளைத் தாண்டி ஐ.டி.ஐ மாணவர்களை நோக்கிப் படை எடுக்கிறது மாருதி. கார்களின் எண்ணிக்கை கூடும் அதே நேரத்தில், திறமை வாய்ந்த மெக்கானிக்குகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அதனால்தானோ என்னவோ, மாருதி ஐ.டி.ஐ பயிற்சி மையங்களைத் தத்தெடுக்கும் வேலையில் இறங்கி உள்ளது. முதல்கட்டமாக திருக்குவளை, அம்பத்தூர் ஐடிஐ-க்களை தத்தெடுத்து மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது மாருதி. ''எங்களிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் மாருதி தொழிற்சாலை, மாருதி டீலர்ஷிப்களில் வேலைக்கு எடுத்துக்கொள்வோம். இங்கே படித்துவிட்டு வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களில் அவர்கள் வேலைக்குச் சேர்வதற்கும் இந்தப் பயிற்சி கை கொடுக்கும்'' என்கிறது மாருதி!

ஹோண்டாவின் என்ட்ரி லெவல் பைக்!

மோட்டார் நியூஸ்

ஹீரோ ஸ்ப்ளெண்டர், பேஷன் ப்ளஸ் பைக்குகளுக்கு நேரடிப் போட்டியாக 110 சிசி ட்ரீம் யுகா பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்து இருக்கிறது ஹோண்டா. 8.5 bhp சக்தி கொண்ட இந்த பைக்கில் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, 100 சிசி பைக் வரிசையில் முதன்முறையாக இதில் ட்யூப்லெஸ் டயர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஹோண்டா. ஆனால், டிஸ்க் பிரேக் இல்லை. பட்டர் ஸ்மூத் இன்ஜின் என அழைக்கப்படும் ஹோண்டாவின் இந்த சின்ன இன்ஜின், லிட்டருக்கு 60 கி.மீ வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கலாம்.

சென்னையில் போலி உதிரி பாகங்கள்!

மோட்டார் நியூஸ்

ஆட்டோமொபைல் துறையில் போலி உதிரி பாகங்கள் புழங்குவது சர்வசாதாரணம். பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக பேக்கிங் தயாரித்து, 10 ரூபாய்கூட பெறாத பொருளை 50 ரூபாய்க்கு விற்பார்கள். சாதாரணமாகப் பார்க்கும்போது ஒரிஜினலுக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால், கவனமாக ஆராய்ந்தால் முத்திரை, லோகோ போன்றவற்றில் இருக்கும் வித்தியாசத்தை வைத்துக் கண்டுபிடித்துவிட முடியும். சமீபத்தில், சென்னையில் நடந்த திடீர் சோதனையில், சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான போலி உதிரி பாகங்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு உள்ளன. பஜாஜ் நிறுவனத்தின் ஒரிஜினல் உதிரி பாகங்களைப் போன்று முத்திரையுடன் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர் காவல்துறையினர். உதிரி பாகங்களை அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் வாங்குங்கள். அல்லது வாங்கும்போது ஒரிஜினல்தானா என்பதை உறுதி செய்து பில் வாங்குவது அவசியம்.

டாடாவுக்கு டாட்டா!

மோட்டார் நியூஸ்

'இனியும் பொறுக்க முடியாது’ என டாடாவின் பிடியில் இருந்து வெளியே வந்திருக்கிறது ஃபியட். இத்தாலிய கார் தயாரிப்பு நிறுவனமான ஃபியட், இந்தியாவில் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியது. 50:50 என்ற விகிதத்தில் இரு நிறுவனங்களும் பங்குகளைப் பிரித்துக்கொண்டன. டாடா டீலர்ஷிப்களிலேயே ஃபியட் கார்களும் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், 'ஃபியட் புன்ட்டோ, ஃபியட் லீனியா கார்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் இண்டிகா, இண்டிகோ கார்களை டீலர்கள் விற்றுவிடுகிறார்கள்’ என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. ஃபியட் கார்களின் விற்பனையும் தொடர்ந்து மந்தமாக, இப்போது அதிரடியாக டாடாவைவிட்டு வெளியே வருவதாக அறிவித்திருக்கிறது ஃபியட். இன்னும் சில மாதங்களில் ஃபியட் டீலர்ஷிப்கள் தனியாகத் துவங்கப்பட இருக்கின்றன. ஆனால், தயாரிப்பைப் பொறுத்தவரை டாடாவின் ரஞ்சன்கவுன் தொழிற்சாலையிலேயே ஃபியட் கார்கள் தொடர்ந்து தயாரிக்கப்படும்.

டிசைன் - சிம்போஸியம்!

மோட்டார் நியூஸ்

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை, சமீபத்தில் 'ஃப்யூட்சரிஸ்டிக் கான்செப்ட் டிசைன்’ (Futuristic Concept Design Symposium) என்ற பெயரில் சிம்போஸியம் நடத்தியது. ஆட்டோமொபைல் வடிவமைப்பு மற்றும் அது தொட்டு இயங்கும் முன்னணி நிறுவனங்கள் சிலவும் இதில் பங்கேற்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆட்டோமோட்டிவ் வெளிப்புற வடிவமைப்பு, உள்புற வடிவமைப்பு, கான்செப்ட் ஸ்கெட்சிங் மற்றும் டிசைன் உள்பட மொத்தம் பதினைந்து விஷயங்களைப் பற்றி வல்லுனர்களின் விளக்க உரைகள், பவர் பாயின்ட் பிரசன்டேஷன், டிசைனிங் பற்றிய நேரடி விளக்கங்கள் என்று ஆக்கப்பூர்வமாக அமர்க்களப்படுத்தி இருந்தனர்.

பேராசிரியர் நீலகிருஷ்ணன் சிம்போஸியம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, ''வேறெந்த துறையையும்விட ஆட்டோமொபைல் துறையில் ஸ்டைலிங், டிசைன் விஷயத்தில் தினமும் புதுப் புது மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. ஆட்டோமொபைல் மாணவர்கள் அதை அப்டேட் செய்து கொள்வது அவர்களுக்கும், ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலத்துக்கும் நல்லது'' என்றார்.

சுஸ¨கியின் பரிசுத்தமான காற்று!

மோட்டார் நியூஸ்

சென்னையில் கடந்த வாரம், தனது புத்தம் புதிய 110 சிசி பைக்கான 'ஹயாட்டே’ மோட்டார் பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்தது சுஸ¨கி. ஹயாட்டே என்றால், ஜப்பானிய மொழியில் 'பரிசுத்தமான தென்றல்’ என்று அர்த்தமாம். 110 சிசி திறன்கொண்ட ஹயாட்டே, சுஸ¨கியின் 125 சிசி பைக்கான ஸ்லிங்ஷாட் போலவே இருக்கிறது. 48 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருக்கும் ஹயாட்டே, லிட்டருக்கு 60-70 கி.மீ வரை மைலேஜ் தரும் என்கிறது சுஸ¨கி.

வருகிறது புதிய ஸ்கார்ப்பியோ!

மோட்டார் நியூஸ்

ஸ்கார்ப்பியோவை மாற்றத் தயாராகிவிட்டது மஹிந்திரா. சென்னை மஹிந்திரா சிட்டியில் உள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் புதிய ஸ்கார்ப்பியோ தயாரிப்புக்கான முதல் கட்டப் பணிகள் துவங்கிவிட்டன. W105 என்ற குறியீட்டு எண்ணுடன் அழைக்கப்படும் புதிய ஸ்கார்ப்பியோ, தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கார்ப்பியோவைவிட பெரிதாகவும், பவர்ஃபுல் இன்ஜினுடனும் தயாரிக்கப்பட இருக்கிறது. 2014-ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸ்கார்ப்பியோ காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.

ஆல்ட்டோவை வீழ்த்திய ஸ்விஃப்ட்!

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துவரும் ஆல்ட்டோவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது ஸ்விஃப்ட். கடந்த ஏப்ரல் மாத விற்பனைப் பட்டியலில் 19,484 கார்களுடன் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது மாருதி ஸ்விஃப்ட். 17,842 கார்களுடன் மாருதி ஆல்ட்டோ இரண்டாவது இடத்திலும், ஸ்விஃப்ட் டிசையர் 15,510 கார்களுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. வேகன்-ஆர் 10,247 கார்களுடன் நான்காவது இடம் பிடிக்க, ஹூண்டாய் இயான் 8,541 கார்களுடன் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறது. டாடாவைப் பொறுத்தவரை இண்டிகா, இண்டிகோ கார்களின் விற்பனை குறைந்து, நானோ மட்டும் 8,028 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. மிட் சைஸ் கார்களில் நிஸான் சன்னி 2,012 கார்களும், ஸ்கோடா ரேபிட் 2,060 கார்களும் விற்பனையாகி இருக்கின்றன. சொகுசு கார்களில் ஆடி நிறுவனம் 562 கார்களை விற்பனை செய்திருக்கிறது.

மோட்டார் நியூஸ்