Published:Updated:

வருகிறது ஹோண்டாவின் டீசல் கார்!

வருகிறது ஹோண்டாவின் டீசல் கார்!

பிரீமியம் ஸ்டோரி

கார்களுக்கான டேஸ்ட் மாறிக்கொண்டே இருக்கிறது. 'டிக்கி இருந்தால்தான் கார்’ என செடான் கார்கள் மேல் மோகம்கொண்டு இருந்த இந்தியர்களின் ரசனை, கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஹேட்ச்பேக் மீது மாறியது. ஸ்விஃப்ட், ஐ-20, புன்ட்டோ, ஃபிகோ என விலை உயர்ந்த ஹேட்ச்பேக் கார்கள் செம ஹிட். இப்போது மீண்டும் ட்ரெண்ட் மாறிவிட்டது. குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என கூட்டமாகப் பயணிக்க உதவும் எம்பிவி கார்கள்தான் இந்த ஆண்டின் சூப்பர் ஸ்டார்ஸ். மாருதி எர்டிகா, நிஸான் எவாலியா, செவர்லே என்ஜாய் என இந்த ஆண்டு எம்பிவி கார்கள்தான் வரிசை கட்டி வர இருக்கின்றன. இந்த ரேஸில், லேட்டஸ்ட் என்ட்ரி ஹோண்டா.

வருகிறது ஹோண்டாவின் டீசல் கார்!

டிசைன்

'ஃபிரீட்’ எனும் எம்பிவி காரை, நம் நாட்டில் அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது ஹோண்டா. தற்போது மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் விற்பனையாகும் இந்த காரை, இந்தியாவில் பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின்களுடன் அறிமுகப்படுத்த இருக்கிறது. 4.2 மீட்டர் நீளம், 1.7 மீட்டர் அகலம், 1.7 மீட்டர் உயரம் என அளவுகளில் மாருதி எர்டிகா காருடன் போட்டி போடுகிறது ஃபிரீட். இது அகலம் மற்றும் உயரத்தில் எர்டிகாவைவிடப் பெரிய கார். ஆனால், வீல் பேஸில் எர்டிகா, ஃப்ரீட் ஆகிய இரண்டு கார்களுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. அதே சமயம், எடையில் எர்டிகாவைவிட ஃபிரீட் 120 கிலோ அதிகம்.

வருகிறது ஹோண்டாவின் டீசல் கார்!

ஏழு பேர் உட்காரக்கூடிய இட வசதிகொண்ட ஹோண்டா ஃபிரீடில், பொருட்கள் வைக்க இடம் அதிகம். ஆனால், மூன்றாவது வரிசை இருக்கைகளில் பெரியவர்கள் உட்காரும் அளவுக்கு இடம் இல்லை. மாருதி ஆம்னி காரில் இருப்பதுபோன்று, ஹோண்டா ஃபிரீடில் ஸ்லைடிங் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கதவுகளை இயக்க, ரிமோட் கன்ட்ரோல் வசதி உண்டு. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் காரில், ஸ்லைடிங் கதவுகளை எடுத்துவிட்டு கார்களுக்குரிய முறையான கதவுகளைப் பொருத்தத் திட்டமிட்டு இருக்கிறது ஹோண்டா.

இன்ஜின்

 ##~##

ஹோண்டா சிட்டியில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் ஹோண்டா ஃபிரீடிலும் பொருத்தப்பட இருக்கிறது. 118 bhp சக்திகொண்ட இன்ஜின் இந்த சின்ன எம்பிவி காருக்குப் போதுமானதே! சிட்டியில் இருக்கும் அதே 5-ஸ்பீடு கியர் பாக்ஸ் ஃபிரீடிலும் இருக்கும். பெட்ரோல் இன்ஜின் தவிர, ஹோண்டா இந்தியாவுக்காக ஸ்பெஷலாகத் தயாரித்துவரும் முதல் டீசல் இன்ஜின் ஃபிரீடில் பொருத்தப்பட இருக்கிறது. ஹோண்டாவின் டீசல் இன்ஜின் 1.4 லிட்டர் அல்லது 1.6 லிட்டர் இன்ஜினாக இருக்கும். பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 16 கி.மீ-யும், டீசல் இன்ஜின் லிட்டருக்கு 18-20 கி.மீ-யும் மைலேஜ் தரும் என எதிர்பார்க்கலாம்.

விலை

எப்போதுமே விலை விஷயத்தில்தான் ஹோண்டா சொதப்பும். எர்டிகாவை மாருதி 8-10 லட்ச  ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. எர்டிகாவை முந்த வேண்டும் என்றால், ஹோண்டா இதே விலைக்குக் கொண்டுவந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஹோண்டா என்கிற பெயருக்காகவே கூடுதல் விலை கொடுத்து வாங்குவார்கள் என்று எதிர்பார்த்தால், 'ஜாஸ்’ கதைதான்! 

சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு