ஸ்பெஷல்
Published:Updated:

டோனியின் லவ்வர்ஸ்!

சார்லஸ்

 ##~##

ந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு, கிரிக்கெட்- பைக்ஸ் இவை இரண்டும்தான் முதல் காதலிகள்! யமஹா, ஹார்லி டேவிட்சன், டுகாட்டி எனப் பல சூப்பர் பைக்குகளை வைத்திருக்கும் டோனி, அமெரிக்காவின் புகழ்பெற்ற 'ஹெல்கேட் எக்ஸ் - 132’ பைக்கை 27.55 லட்ச ரூபாய் கொடுத்து சமீபத்தில் இறக்குமதி செய்திருக்கிறார். தெற்கு ஆசியாவிலேயே இந்த மாடல் பைக் இருப்பது டோனியிடம் மட்டுமே! 

டோனி வாங்கியிருக்கும் இரண்டாவது நேக்கட் பைக் இது. ஏற்கெனவே அவரிடம் யமஹா திஞீ1 இருக்கிறது. இதை சென்னை வரும்போது மட்டும் பயன்படுத்துவதற்காக, சென்னையிலேயே வைத்திருக்கிறார். ஆனால், யமஹாவைப் போல் இல்லை ஹெல்கேட். இது, 100 சதவிகித நேக்கட் க்ரூஸர் பைக்.  

டோனியின் லவ்வர்ஸ்!

அமெரிக்காவின் கான்ஃபெடரேட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு இது. ஹெல்கேட் எக்ஸ்-132 மாடல் பைக், கடந்த ஆண்டுதான் அறிமுகமானது. பாயும் சிறுத்தை போல டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. கிளாஸிக் பைக்குகள் போன்று பவர்ஃபுல் வட்ட வடிவ ஹெட்லைட்டுகள்தான் ஹெல்கேட் பைக்கின் தனி அடையாளம். இதில் எல்.இ.டி விளக்குகளும் உண்டு. மேலும், ஆடி கார்களில் இருப்பதுபோல 'டே டைம் ரன்னிங் லைட்ஸ்’ கொண்டது. இதனால், நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, முன்னால் செல்லும் வாகனங்களுக்கு, பின்னால் பைக் வருவது மிகத் தெளிவாக கண்ணாடியில் தெரியும். ஒருவர் மட்டுமே பயணிக்க முடிகிற அந்த ஒற்றை சீட்டுக்குப் பின் பக்கமும், சிவப்பு நிற ரன்னிங் லைட்ஸ் பொருத்தப்பட்டு இருப்பது கூடுதல் அட்ராக்ஷன். பிரம்மாண்டமான இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 18 லிட்டர். இது தவிர, நமது விருப்பத்துக்கு ஏற்ப சிறப்பம்சங்களை 'கஸ்டமைசேஷன்’ செய்யும் வசதியும் உண்டு.

டோனியின் லவ்வர்ஸ்!

விமானத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மிகவும் ஸ்ட்ராங்கான 'பில்லெட்’ அலுமினியத்தில் இன்ஜின் கேஸிங் தயாரிக்கப்படுகிறது. 2163 சிசி திறன்கொண்ட இந்த பைக்கின் அதிகபட்ச சக்தி 132 தீலீஜீ. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கி.மீ. ஆஃப் ரோடு, ஆன் ரோடு சாலைகளுக்கு ஏற்றவாறு சஸ்பென்ஷனை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன்கள் இதில் உள்ளன. வீல்கள், அதிக உறுதிகொண்ட கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டவை. இரண்டு வீல்களிலும் ரேடியல் கேலிப்பர் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

கான்ஃபெடரேட் மோட்டார்ஸ், தனது தொழிற்சாலையில் வாரம் இரண்டு எக்ஸ்-132 ஹெல்கேட் பைக்குகளை மட்டுமே தயாரிக்கிறது.

ஹெல்கேட் இருக்கட்டும். டோனியின் அடுத்த பைக் என்னவாக இருக்கும்?

 டோனி கராஜ்!

டோனியிடம் மொத்தம் 16 பைக்குகள் உள்ளன. இதில், யமஹா திஞீ1 மற்றும் டுகாட்டி 1198 பைக்குகள் சென்னையில் இருக்கின்றன. இரண்டு பைக்குகள் மும்பையிலும், மற்ற 12 பைக்குகள் டோனியின் ராஞ்சி இல்லத்திலும் இருக்கின்றன. பைக்குகளைத் தவிர, ஹம்மர் உள்பட 9 கார்கள் வைத்திருக்கிறார். டோனி வாங்கும் எந்த வாகனத்தையும் விற்க மாட்டார். முதன்முதலில் வாங்கிய யமஹா ஆர்எக்ஸ்-100 பைக்கை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்!

-சார்லஸ்