ஸ்பெஷல்
Published:Updated:

ரேஸா? ஸ்டன்ட்டா?

ரேஸா? ஸ்டன்ட்டா?

 ##~##

ரி மோட்டார் ஸ்பீடு வே ரேஸ் டிராக்கில், தீப்பொறி பறக்க நடந்து முடிந்தது நேஷனல் பைக் ரேஸ். ஜூன் 3-ம் தேதி கோவையில் நடந்த இந்த ரேஸில் அனல் பறந்தது. வெறி பிடித்ததுபோல் பைக் ஓட்டிய வீரர்கள் பலரும் அந்தரத்தில் பறந்து... டிராக் ரேஸை ஸ்டன்ட் ரேஸாக மாற்றிவிட்டார்கள்.

 மொத்தம் 10 விதமான பிரிவுகளில் 23 ரேஸ் போட்டிகள் நடந்தன. ரேஸ் வீரர்கள், நடுவர்கள், டாக்டர்கள் என ரேஸ் டிராக்கில் இருந்த அனைவருமே பிஸி. காரணம், கிட்டத்தட்ட 20 முதல் 30 வீரர்கள் ரேஸ் டிராக்கில் விபத்தில் சிக்கியதுதான். ஃபேக்டரி அணியான டிவிஎஸ் ரேஸிங் அணியைத் தவிர, மோட்டோ ரெவ் இந்தியா, டென் டென் ரேஸிங், ஸ்பார்க்ஸ் ரேஸிங் என, பல்வேறு தனியார் ரேஸிங் அணிகள் களத்தில் இறங்கின. இதனால், டிவிஎஸ் அணியைவிட தனியார் அணிகளுக்கு இடையேதான் வின்னர் யார் என்ற போட்டா போட்டி அதிகம்.

ரேஸா? ஸ்டன்ட்டா?

இதில், 2011-ம் ஆண்டுக்கான 'மோட்டார் விகடன் - சிறந்த ரேஸ் வீரர்’ விருதை வென்ற ஷியாம் ஷங்கர் 165 சிசி பிரிவில் டபுள் பட்டம் வென்றார். மோட்டோ ரெவ் இந்தியா அணியைச் சேர்ந்தவரான இவர், இரண்டு ரேஸ்களிலும் வெற்றி பெற்றார். பெர்ஃபாமென்ஸ் ரேஸிங் அணியின் டொபாஸ் லூக்காஸ் இரண்டாம் இடத்தையும், மோட்டோ ரெவ் இந்தியா அணியின் மற்றொரு வீரர் அபிஷேக் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

600 சிசி சூப்பர் பைக் ரேஸ் போட்டியில், மோட்டோ ரெவ் இந்தியா அணியின் கிருஷ்ணன் ரஜினிதான் ஹீரோ. 12 லேப்புகள்கொண்ட இந்த ரேஸ் போட்டியில், 13 நிமிடங்கள் 6 விநாடிகளில் வெற்றிக் கோட்டைத் தொட்டார் ரஜினி. ஹோண்டா நடத்திய, '250-ஆர் ஒன் மேக் ரேஸ்’ போட்டியில், கௌதம் மற்றும் பிரபு முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். சுதாகர் கேசவன் மூன்றாம் இடம் பிடித்தார். யமஹா ஆர்-15 ரேஸ் போட்டியிலும் மோட்டோ ரெவ் அணியின் ஷியாம் ஷங்கரே வெற்றி பெற்றார்.

குரூப் பி 165 சிசி ரேஸ் போட்டியின் முதல் சுற்றில், டிவிஎஸ் அணியின் ஹாரி சில்வஸ்டரும், இரண்டாவது ரேஸில் டிவிஎஸ் அணியின் மற்றொரு வீரர் ஜெகனும் வெற்றி பெற்றனர்.

ரேஸா? ஸ்டன்ட்டா?