Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

சுந்தர பாண்டியன், பெரியகுளம்.

மோட்டார் கிளினிக்

நான் ஹூண்டாய் ஐ20 கார் வாங்கலாம் என முடிவெடுத்து இருக்கிறேன். ஸ்டைலாக இருப்பதோடு, உட்கார்ந்து பயணிக்க வசதியான காராகவும் இருக்கிறது என்பதால், இந்த காரை வாங்க முடிவெடுத்தேன். ஆனால், ஹூண்டாய் ஐ20 காரின் ஏ.சி மற்றும் சஸ்பென்ஷனில் சில பிரச்னைகள் வருவதாக என் நண்பர் சொல்கிறார். இது உண்மையா?

மோட்டார் கிளினிக்

நீங்கள் சொல்லும் பிரச்னைகள் எல்லாம் 2008-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த முதல் தலைமுறை ஐ20 காரில் இருந்தவை. ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவது, சில சமயம் பவர் ஸ்டீயரிங் வேலை செய்யாமல்போவது என நீங்கள் சொல்லும் பிரச்னைகள் அனைத்தும் இப்போது சரிசெய்யப்பட்டுவிட்டன. தற்போது வெளிவந்திருக்கும் ஐ20 ஃப்ளூயிடிக் மாடலில், இந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லை.

சரவணன், ராமநாதபுரம்.

மோட்டார் கிளினிக்

டிவிஎஸ், ரேடியான் எனும் 125 சிசி பைக்கை விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக மோட்டார் விகடனில் படித்தேன். இது எப்போது விற்பனைக்கு வரும்?

மோட்டார் கிளினிக்

டிவிஎஸ் ரேடியான் ஜூலை - ஆகஸ்ட் மாதவாக்கில் விற்பனைக்கு வந்துவிடும். 125 சிசி திறன்கொண்ட ரேடியானில், டிவிஎஸ் ஃப்ளேமில் இருந்த அதே இன்ஜின்தான் சில மாற்றங்களுடன் பொருத்தப்பட இருக்கிறது. இதன் விலை அனேகமாக 60 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.

நந்தகுமார், திருப்பூர்.

மோட்டார் கிளினிக்

நான் புதிதாக பஜாஜ் பல்ஸர் 150 பைக் வாங்கி இருக்கிறேன். இதில் பவர்ஃபுல்லான HID விளக்குகளைப் பொருத்தலாம் என நினைக்கிறேன். இதைப் பொருத்துவதால் பேட்டரி லைஃப் பாதிக்கப்படுமா?

நிச்சயமாகப் பாதிக்கப்படும். HID விளக்குகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால், இது பல்ஸரில் தற்போது இருக்கும் பேட்டரியின் ஆயுள் காலத்தை வெகுவாகக் குறைத்துவிடும். பேட்டரியின் ஆயுள் காலத்தை அதிகரிக்க, நீங்கள் அதிக கி.மீ பைக்கை ஓட்ட வேண்டும். அப்போதுதான் பேட்டரி சார்ஜ் ஆகும். தினமும் 8-10 கி.மீ மாட்டும் பைக்கை ஓட்டிவிட்டு நிறுத்திவிட்டால், பேட்டரியின் ஆயுள் காலம் குறையும். அதேபோல், பைக்கை ஆஃப் செய்வதற்கு முன்பு ஐடிலிங்கில் சில விநாடிகள் வைத்தபிறகே ஆஃப் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அடுத்தமுறை பட்டன் ஸ்டார்ட் செய்யும்போது பைக் உடனே ஸ்டார்ட் ஆகாது.

கௌதமன், சென்னை-62.

மோட்டார் கிளினிக்

நான் ஃபியட் பேலியோ 2001-ம் ஆண்டு மாடல், யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்கலாம் என நினைக்கிறேன். இந்த காரை வாங்கலாமா? சர்வீஸில் ஏதும் பிரச்னைகள் வருமா?

மோட்டார் கிளினிக்

பழைய ஃபியட் பேலியோ கார்கள் இப்போது குறைந்த விலைக்குக் கிடைப்பதால், பலரும் வாங்கிவிட்டு அவதிப்படுகிறார்கள். காரணம், உதிரி பாகங்கள் கிடைப்பதில்லை. மைலேஜும் மிகக் குறைவாகவே கிடைக்கிறது. அதனால், கூடுமானவரை மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக விற்பனையில் இல்லாத கார்களை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது!

சேவியர், கோவை.

மோட்டார் கிளினிக்

நான் நிஸான் மைக்ரா டீசல் கார் வாங்கலாம் என முடிவெடுத்திருந்தேன். ஆனால், இப்போது மைக்ராவைப் போலவே ரெனோ பல்ஸ் காரும் விற்பனைக்கு வந்திருப்பதால், இரண்டில் எந்த காரை வாங்குவது எனக் குழப்பமாக இருக்கிறது. இரண்டு கார்களுக்கும் என்ன வித்தியாசம்?

மைக்ரா, பல்ஸ் ஆகிய இரு கார்களுக்கும் தோற்றத்திலும், சிறப்பம்சங்களிலும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு கார்களின் இன்ஜின், சக்தி, டார்க், சஸ்பென்ஷன் அனைத்துமே ஒன்றுதான். இரண்டுமே சென்னையில் உள்ள ஒரே தொழிற்சாலையில்தான் தயாராகின்றன. நிஸான் மைக்ரா, ரெனோ பல்ஸ் என்ற பெயர் வித்தியாசத்தையும் வெளித் தோற்றத்தையும் தாண்டி, உண்மையிலேயே எந்த வித்தியாசமும் இல்லை. உங்கள் வீட்டின் அருகில் எந்த சர்வீஸ் சென்டர் இருக்கிறது என்பதை வைத்து நிஸான் மைக்ராவா, ரெனோ பல்ஸா என்பதை முடிவு செய்யுங்கள்.

மனோகரன், மதுரை.

மோட்டார் கிளினிக்

மிட்-சைஸ் பெட்ரோல் கார் வாங்க வேண்டும். டொயோட்டா எட்டியோஸ் அல்லது ஃபோர்டு ஃபியஸ்டா கிளாஸிக் ஆகிய இந்த இரண்டு கார்களில் எந்த காரை வாங்கலாம். ஃபோர்டு நிறுவனம் விரைவில் ஃபியஸ்டா கிளாஸிக் தயாரிப்பை நிறுத்தப்போவதாகச் சொல்கிறார்களே?

ஃபியஸ்டா கிளாஸிக் மாடலின் தயாரிப்பை இன்னும் 2-3 ஆண்டுகளில் நிறுத்த இருக்கிறது ஃபோர்டு. அதனால், ஃபியஸ்டா கிளாஸிக் உங்களுக்குப் பிடித்திருந்தால், வாங்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. மேலும், எட்டியோஸ் உடன் ஒப்பிடும்போது இன்ஜின் தரத்திலும், இட வசதியிலும் சிறந்த கார் ஃபோர்டு ஃபியஸ்டா.

இஸ்மாயில், திருநெல்வேலி.

மோட்டார் கிளினிக்

நான் ஹூண்டாய் வெர்னா வாங்கி இருக்கிறேன். 'ஆறு மாதங்களாவது குறைந்த வேகத்தில்தான் செல்ல வேண்டும். வேகமாக ஓட்டினால் இன்ஜின் சீக்கிரத்தில் ரிப்பேர் ஆகிவிடும்’ என்கிறார்களே... இது எந்த அளவுக்கு உண்மை?

'ரன்னிங் இன்’ பீரியட்டைச் சொல்கிறார்கள். பொதுவாக, இப்போது விற்பனைக்கு வரும் கார்கள் அனைத்துமே அதிகப்படியாக டெஸ்ட் செய்யப்பட்டு, இன்ஜின் பாகங்கள் அனைத்தும் மிக நுட்பமாகத் தயாரிக்கப்படுவதால், ஆறு மாதங்களுக்கு மெதுவாக ஓட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருந்தாலும், முதல் 2000 கி.மீ-க்கு கியர்களைக் கண்டபடி மாற்றாமல், சட் சட்டென பிரேக் அடிக்காமல் பதமாக ஓட்டுவது நல்லதுதான்.

மாதவன், பொள்ளாச்சி.

மோட்டார் கிளினிக்

பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே வருவதால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம் என யோசிக்கிறேன். எந்த இ-ஸ்கூட்டர் வாங்கலாம்?

நல்ல, தரமான நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர்கள் இப்போதைக்கு விற்பனையில் இல்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இறங்கிய டிவிஎஸ் நிறுவனம்கூட, போதுமான விற்பனை இல்லாததால் நிறுத்திக்கொண்டது. பெரும்பாலும், சீனாவில் இருந்து பேட்டரி, மோட்டார் போன்ற முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால், இந்த நிறுவனங்கள் தொடர்ந்து நல்ல சர்வீஸைத் தருவதில்லை. எல்லாம் சரி; இ-ஸ்கூட்டர் வாங்கி, அதை சார்ஜ் செய்யும் அளவுக்கு உங்கள் வீட்டில் மின்சாரம் இருக்கிறதா என்ன?