ஸ்பெஷல்
Published:Updated:

18 லட்ச ரூபாய்க்கு பென்ஸின் ஹேட்ச்பேக்!

தீபாவளி ரிலீஸ்!

 ##~##

ந்தாரை வாழ வைக்கும் பென்ஸ்’ என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்யத் துவங்கியது பென்ஸ். அதனால்தான் 'பென்ஸ்’ என்றாலே இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும், அது பணக்காரர்களின் கார் என்று பதிந்துவிட்டது. ஆனால், இப்போது பென்ஸுக்கு சொகுசு கார் மார்க்கெட்டில் கடைசி இடம். பிஎம்டபிள்யூ, அதன் பிறகு வந்த ஆடி ஆகிய நிறுவனங்கள், பென்ஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 

மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய கார் மார்க்கெட்டில், மீண்டும் உச்சத்தைப் பிடிக்க சின்ன ஹேட்ச்பேக் காரான 'பி’ கிளாஸை அறிமுகப்படுத்துகிறது பென்ஸ். ஜெர்மனியில் இருந்து உதிரி பாகங்களை வரவழைத்து, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்ய இருக்கிறது. தற்போது புனேவில் உள்ள பென்ஸ் தொழிற்சாலை அருகே, 'பி’ கிளாஸ் காரின் இறுதிக் கட்ட டெஸ்டிங்கை செய்து வருகிறது பென்ஸ். ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார் பிராண்டுகளில் 'பி’ கிளாஸ்தான் விலை குறைவான காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். பிஎம்டபிள்யூ, சமீபத்தில் மினி கூப்பர் ஹேட்ச்பேக் கார்களை அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில், அதைவிட கிட்டத்தட்ட 5-7 லட்சம் ரூபாய் விலை குறைவான காராக இருக்கும் 'பி’ கிளாஸ்.

18 லட்ச ரூபாய்க்கு பென்ஸின் ஹேட்ச்பேக்!

சின்ன கார்களில் உயரமான காராக இருக்கிறது பென்ஸ் 'பி’ கிளாஸ். சின்ன ஹெட் லைட், அதனுள்ளேயே 'டே டைம் ரன்னிங்’ விளக்குகள், அதன் அருகில் சிறிய கிரில் என அடக்கமாக இருக்கிறது 'பி’ கிளாஸின் டிசைன். கான்செப்ட் காரில் இருந்ததுபோல, இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் காரில் கிரில் பெரிதாக இல்லை. பக்கவாட்டுக் கண்ணாடிகளில் கீறல் போன்ற டிசைனைத் தாண்டி புதுமையாக இருக்கிறது என்று சொல்லவும் எதுவும் இல்லை. பல காலம் பார்த்துப் பழகிய கார் போலவே இருக்கிறது 'பி’ கிளாஸின் முன் பக்கம்.

18 லட்ச ரூபாய்க்கு பென்ஸின் ஹேட்ச்பேக்!

'பி’ கிளாஸ் காரின் நீளம் 4.3 மீட்டர். இதனால், சின்ன கார் என்ற இந்திய அரசின் வரையறைக்குள் வராது. அதே சமயம், இந்த காரின் நீளம் கிட்டத்தட்ட ரெனோ டஸ்ட்டரின் நீளம் என்பதால், காருக்குள் எந்த அளவுக்கு இட வசதி இருக்கும் என்பதை அளந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. 5 பேர் கால்களை நீட்டி, மடக்கி வசதியாக உட்கார்ந்து பயணிக்கலாம். காரைப் பின் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது, எர்டிகாவைப் போல எம்பிவி கார் தோற்றத்தில் இருக்கிறது. பட்டாம் பூச்சியின் இறக்கைகள் போல பின் பக்க டெயில் விளக்குகள் டிசைன் செய்யப்பட்டு இருக்கின்றன. கிரவுண்ட் கிளியரன்ஸைப் பொறுத்தவரை உயரமாக இருப்பதால், ஸ்பீடு பிரேக்கர்களைப் பார்த்ததும் அலற வேண்டிய அவசியம் இருக்காது.

லெதர் சீட், வுட் ஃபினிஷ் சென்டர் கன்ஸோல், கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, ஆட்டோமேட்டிக் சீட் அட்ஜஸ்ட், ஜிபிஎஸ், ப்ளூ-டூத், டிஸ்ப்ளே ஸ்கிரீன் என மெர்சிடீஸ் கார்களுக்கே உரிய வசதிகள் இதில் நிச்சயம் இருக்கும். இது தவிர, டிரைவர் தூங்கிவிடாமல் இருக்க அட்டென்ஷன் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் வார்னிங், லேன் கீப்பிங் அசிஸ்ட் (லேன் மாறினால் ஸ்டீயரிங் வீல் அதிரும்) உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் இருக்கின்றன. ஆனால், பட்டன் ஸ்டார்ட் அதாவது கீ-லெஸ் என்ட்ரி இதில் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.

இன்ஜின்

இன்ஜினைப் பொறுத்த வரை 1.8 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வர இருக்கிறது பென்ஸ் 'பி’ கிளாஸ். ரெனோ - நிஸானிடம் இருந்து 1.5 லிட்டர் 'கே9கே’ டீசல் இன்ஜினை வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது பென்ஸ். அதனால், காரின் விலையைக் குறைப்பதற்காக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மாடலையும் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்தியாவில் செப்டம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் பென்ஸ் 'பி’ கிளாஸின் விலை, 18 லட்ச ரூபாயில் இருந்து ஆரம்பிக்கும்!

-  சார்லஸ்