ஸ்பெஷல்
Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - FIAT GRANDE PUNTO

ரீடர்ஸ் ரிவியூ - FIAT GRANDE PUNTO

ரீடர்ஸ் ரிவியூ - FIAT GRANDE PUNTO
ரீடர்ஸ் ரிவியூ - FIAT GRANDE PUNTO

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்கிறது; டீசல் கார்களின் விலையும் ஏறப் போகிறது என்பதால், உடனடியாக டீசல் கார் வாங்க முடிவெடுத்தேன். நானும் என் மனைவியும் மட்டும்தான். எனவே, சின்ன ஹேட்ச்பேக் டீசல் கார் என்னுடைய சாய்ஸ்! 

எந்த கார்?

 ##~##

நான் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். தினமும் அலுவலகத்துக்குப் போய் வர 45 கி.மீ தூரம் ஆகிறது. மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ, ஃபோக்ஸ்வாகன் போலோ, ஹூண்டாய் ஐ20, ஃபியட் புன்ட்டோ ஆகிய கார்கள்தான் என்னுடைய லிஸ்ட்டில் இருந்தன. ஸ்விஃப்ட் காரின் வெயிட்டிங் பீரியட் அதிகம். மேலும், எங்கு பார்த்தாலும் ஸ்விஃப்ட்டாக இருப்பதால், என்னுடைய லிஸ்ட்டில் இருந்து முதலில் அதை எடுத்துவிட்டேன். ஹூண்டாயின் புதிய ஐ20 காரை என்னுடைய அண்ணண் வைத்திருக்கிறார். இதன் கையாளுமை சிறப்பாக இல்லை. மேலும், விலையும் அதிகம் என்பதால், அதையும் தவிர்த்துவிட்டேன். டிசைன் சூப்பராக இருக்க வேண்டும். அதே சமயம், பவரும் அதிகம் வேண்டும் என்பதால், ஃபோர்டு ஃபிகோவையும் லிஸ்ட்டில் இருந்து அடித்துவிட்டேன். போலோவின் டிசைனும், ஓட்டுதல் தரமும் பிடித்திருந்தது. ஆனால், இதன் 3 சிலிண்டர் இன்ஜின் சத்தமும் அதிகம்; விலையும் அதிகம். எனவே, எஞ்சியது ஃபியட் புன்ட்டோ மட்டும்தான்.

ஏன் புன்ட்டோ?

புன்ட்டோ அழகான க்யூட் கார். ஃபியட் கார்களில் சின்னச் சின்னப் பிரச்னைகள் அடிக்கடி வரும் என்று பலர் சொன்னபோதும், எனக்கு இதன் ஓட்டுதல் தரம் மிகவும் பிடித்திருந்தது. வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கு மிகவும் சூப்பராக இருந்தது புன்ட்டோ. முதலில், நகருக்குள் ஓட்டி டெஸ்ட் செய்தபோது, குறைந்த வேகத்தில் பவர் இல்லாதது குறையாகத் தெரிந்தது. அடுத்து, நெடுஞ்சாலையில் ஓட்டும்போது, அந்தக் குறை பெரிதாகத் தெரியவில்லை. எனவே, புன்ட்டோவை வாங்க முடிவெடுத்தேன்.

ரீடர்ஸ் ரிவியூ - FIAT GRANDE PUNTO

நான் காரை வாங்க முடிவு செய்த நேரத்தில்தான் டாடாவும், ஃபியட்டும் பிரிவதாகச் செய்திகள் வர ஆரம்பித்தன. என் அலுவலகத்தில் நண்பர்களும், 'இந்த நேரத்தில் ஃபியட்டை வாங்காதே’ என அலாரம் அடித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், இத்தாலியின் நம்பர் ஒன் நிறுவனமான ஃபியட், அப்படி ஒன்றும் ஏமாற்றிவிடாது என எனக்கு முழு நம்பிக்கை இருந்ததால், முடிவை மாற்றவில்லை.

ரீடர்ஸ் ரிவியூ - FIAT GRANDE PUNTO

ஷோ-ரூம் அனுபவம்!

மூன்று ஷோ-ரூம்கள் சுற்றிப் பார்த்துவிட்டு கடைசியில் சென்னை, அண்ணாசாலையில் உள்ள டாஃபே ஷோ-ரூமில்தான் வாங்கினேன். காரணம், அவர்களின் சர்வீஸ் பிடித்திருந்தது. நான் காரைப் பற்றி விசாரிக்கப்போனது ஞாயிற்றுக்கிழமை மாலை. மிகப் பொறுமையாக, காரின் எல்லா வசதிகளையும் சொல்லி, எது சிறந்த டீல், எக்ஸ்சேஞ்ச் ஆப்ஷன் எப்படி என எல்லாவற்றையும் விவரித்தார்கள். சொன்னது போலவே 10 நாட்களுக்குள் காரை டெலிவரி கொடுத்தனர். ஆனால், டெலிவரி செய்யும்போது காரைச் சுத்தம் செய்யாமல் சொதப்பிவிட்டார்கள். ஸ்டாக் இல்லை எனச் சொல்லி, புன்ட்டோவின் ஃப்ளோர் மேட்டுக்குப் பதில் டாடாவின் மேட்டுகளைத் தந்தா£ர்கள்.

ரீடர்ஸ் ரிவியூ - FIAT GRANDE PUNTO

குட்டிக் குட்டிக் குறைகள்!

கார் எனக்கு ஓட்ட செட் ஆவதற்கு 200 - 250 கி.மீ ஆனது. குறிப்பாக, கொஞ்சம் வித்தியாசமான இடத்தில் இருக்கும் இதன் கிளட்ச் பொசிஷன், பழகுவதற்கு நாள் பிடித்தது. அதுவும், இதற்கு முன்பு நான் வேகன்-ஆர் பெட்ரோல் காரைப் பயன்படுத்தி வந்தவன். அதனால், டீசல் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. வலது பக்கப் பின்புறக் கதவில் ஸ்பீக்கரின் ஜாரிங் சத்தம் அதிகமாகக் கேட்டது. பின் பக்க குவாட்டர் பேனல், வாங்கிய சில நாட்களில் கழன்றுவிட்டது. டாஃபேவில் சொன்னதும் அதை உடனடியாகச் சரிசெய்து கொடுத்தார்கள். ஆனால், காரைத் தொடர்ந்து 1600 கி.மீ ஓட்டிய பிறகும் பின் பக்கக் கதவில் இருந்து சத்தம் வருவதற்கான காரணம் புரியவில்லை.

பெர்ஃபாமென்ஸ்...

அதிரடியான வேகம் இல்லை. டர்போ சார்ஜர் 2000 ஆர்ம்பிஎம்-க்கு மேல்தான் தூக்கத்தில் இருந்து எழுகிறது. முதல் இரண்டு கியர்களுக்கான செட்டிங் மிகவும் நெருக்கத்தில் இருப்பதால், சட்டென இரண்டாவது கியரை மாற்ற வேண்டும். டேக்கோ மீட்டர் 2500 ஆர்பிஎம்-ல் இருக்கும்போதே அசால்ட்ட£க 120 கி.மீ வேகத்தைத் தொடுகிறது. ஆனால், சத்தம்தான் அதிகம் கேட்கிறது. அது, வெளிக்காற்று சத்தமா அல்லது டயர் சத்தமா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், 120 கி.மீ வேகத்தில் சென்றாலும், ஏதோ 40 - 50 கி.மீ வேகத்தில் செல்வதுபோன்ற பாதுகாப்பான உணர்வைத் தருகிறது புன்ட்டோ.

மைலேஜ்!

மைலேஜைப் பொறுத்தவரை புன்ட்டோ டீசல், லிட்டருக்கு 14 கி.மீ வரை தருகிறது. எப்போதுமே ஏ.சி ஆன் செய்துதான் இருக்கும்.

சொகுசு!

காரின் கம்ஃபோர்ட் ரொம்ப முக்கியம். சீட்டை அட்ஜஸ்ட் செய்து உட்கார்ந்துவிட்டால், டிரைவிங் பொசிஷன் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், பின் பக்க இருக்கைகளில் தொடைக்கான சப்போர்ட் இல்லை. இதனால், நீண்ட தூரம் உட்கார்ந்து பயணிக்கும்போது தொடைகள் வலிக்கிறது. சஸ்பென்ஷன் சூப்பர். நம்மூரின் எந்த மேடு பள்ளங்களில் கார் எகிறிக் குதித்தாலும் அலுங்கல் குலுங்கல்கள் காருக்குள் அதிகம் தெரியவில்லை. ஏ.சி-யின் பெர்ஃபாமென்ஸும் சூப்பர். காருக்குள் உட்கார்ந்துவிட்டால் சொர்க்கம்தான்.

காரில் இருக்கும் ஆடியோ சிஸ்டம் ரொம்ப சுமார். குறிப்பாக, ஸ்பீக்கர்கள் ரொம்ப மோசம். நீங்கள் இசைப் பிரியர் என்றால், முதலில் ஆடியோ சிஸ்டத்தை மாற்றிவிடுவது நல்லது. 'ப்ளூ அண்டு மீ’ எனும் ப்ளூ-டூத் சிஸ்டம், கார் ஓட்டிக்கொண்டே போன் பேச வசதியாக இருக்கிறது. பென் டிரைவ் மூலம் இணைத்துப் பாட்டுக் கேட்க, யுஎஸ்பி போர்ட் உண்டு. ஆனால், இதை க்ளோவ் பாக்ஸின் மூலையில் ஒளித்துவைத்திருக்கிறது ஃபியட். ஹெட்லைட் செம பவர்ஃபுல். மேலும், காரை ஆஃப் செய்துவிட்டாலும் இருட்டில் வீட்டுக்குள் செல்வதற்கு வசதியாக, கொஞ்ச நேரம் ஒளிர்ந்துவிட்டு அணையும் ஹெட்லைட்டின் 'ஃபாலோ மீ ஹோம்’ வசதி சூப்பர்! இரண்டு காற்றுப் பைகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி பிரேக்ஸ் இருப்பதால், என்ன ஆனாலும் கவலைப்பட வேண்டாம் என்ற பாதுகாப்பான உணர்வைத் தருகின்றன.

என் தீர்ப்பு!

ஃபியட் புன்ட்டோ, மிகக் குறைந்த கார்களே விற்பனையாலும், அதிகமாக விற்பனையாகும் ஐ20, ஸ்விஃப்ட் கார்களுக்கு இணையாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஓட்டுதல் தரம், கையாளுமை, பில்டு குவாலிட்டி, சொகுசு ஆகியவற்றில் ஸ்விஃப்ட், ஐ20 கார்களைவிட சிறப்பாகவே இருக்கிறது. டாடாவை விட்டு ஃபியட் தனியாக ஷோ-ரூம் திறக்கும் நிலையில், ஃபியட்டின் சர்வீஸ் தரம் நிச்சயம் உயரும் என்று நம்புகிறேன்!