ஸ்பெஷல்
Published:Updated:

மிஸ்டர் ஆட்டோ

மிஸ்டர் ஆட்டோ

 ##~##

து என்ன மிஸ்டர் ஆட்டோ? மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் சென்னை மாதிரியா என்றுகூட சிலருக்குச் சந்தேகம் வரலாம். ஆனால், இந்த மிஸ்டர் ஆட்டோ கொஞ்சம் வித்தியாசமானது. 

சென்னையில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆட்டோ ஓட்டுநர்களின் மீது வைக்கப்படும் விமரிசனங்களை விட்டுத் தள்ளுங்கள்!

பாதுகாப்போடும், சேவை மனப்பான்மையோடும், பயணிகள் மீது அக்கறையோடும் செயல்படும் ஆட்டோ ஓட்டுநர்களும் நிச்சயமாக நிறையவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்டோ டிரைவர்களில் சிறந்தவர் யார் என்பதை, பயணிகளை வைத்தே எஸ்எம்எஸ் வோட்டுப் போடவைத்துத் தேர்ந்தெடுக்கும் போட்டிதான்... மிஸ்டர் ஆட்டோ!  

மிஸ்டர் ஆட்டோ

இந்தப் போட்டியை ஒருங்கிணைத்த 104.8 எஃப்எம் ரேடியோவின் பிரேம்குமாரிடம் பேசினோம்... ''சென்னையின் சிறந்த ஆட்டோ ஓட்டுநரைத் தேர்ந்தெடுக்க, சென்னை போக்குவரத்துக் காவல் துறை உதவியுடன் ஒன்றரை மாதங்கள் இந்தத் 'தேர்தலை’ நடத்தினோம். ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகள் ஆட்டோ ஓட்டுநரைப் பற்றி, தங்களது மொபைல் போனில் இருந்து 'குட் / பேட்’ எனக் கருத்துகளை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பும்படி ஊடகங்கள் வழியாகப் பிரசாரம் செய்தோம். ஆட்டோக்களின் பின் பக்கத்திலும்கூட இந்தப் போட்டிக்கான விளம்பரத்தை வெளியிட்டு இருந்தோம்.  

இந்தப் போட்டிக்காக மொத்தம் 10,217 எஸ்எம்எஸ்கள் வந்தன. TN 05 AE 2794 பதிவு எண் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் விஸ்வநாதன், 456 பேரிடம் இருந்து 'குட்’ கருத்தைப் பெற்று முதல் இடம் பிடித்து பரிசை வென்றார். இரண்டாவது பரிசு TN 01 AJ 0994 பதிவு எண்கொண்ட பிரதீப் பெற்றார். மூன்றாவது பரிசை TN 04 Z 6148 பதிவு எண்கொண்ட ஆல்பர்ட் ஆபிரகாம் பெற்றார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மூன்று பேருக்கு முதல் பரிசாக 25,000, இரண்டாவது பரிசாக 15,000, மூன்றாவது பரிசாக 10,000 ரூபாயும் வழங்கப்பட்டன'' என்றார் பிரேம்குமார்.

சென்னை நகரக் காவல் துறை கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) சஞ்சய் அராரோ கையால் முதல் பரிசை வாங்கிய விஸ்வநாதனிடம் பேசினோம். 'வியாசர்பாடியிலதான் வீடு. 15 வருஷமா ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கேன். செய்யுற தொழிலை நேசிச்சுச் செய்வேன். அதுக்குக் கிடைச்ச பரிசுதான் இது. ரோட்ல அடிபட்டுக் கிடந்த பலபேரை நான் தூக்கிட்டுப் போய் ஆஸ்பத்திரியில சேத்திருக்கேன். என் ஆட்டோவுல பயணிகள் மறந்து விட்டுட்டுப் போன பல பொருட்களைத் திருப்பி எடுத்துட்டுப் போய் கொடுத்திருக்கேன். நான் செஞ்சதுக்கு பலன்தான் இப்படி பரிசு கிடைச்சுருக்கு. இது எங்க சக ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு முன் உதாரணமா இருக்கும்'' என்றார் விஸ்வநாதன் பெருமிதமாக!

மிஸ்டர் ஆட்டோ