Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் ஸ்விஃப்ட்(டீசல்) VDi மாடல் வாங்கலாமென முடிவெடுத்திருக்கிறேன். புதிய கார் வாங்க

##~##

பட்ஜெட் இல்லாததால், பழைய கார் மார்க்கெட்டில் ஸ்விஃப்ட் VDi 2008-ம் ஆண்டு மாடல் கார் பார்த்துள்ளேன். இது, 30,000 கி.மீ வரை ஓடிய கார். 5 லட்ச ரூபாய் விலை சொல்கிறார்கள். வாங்கலாமா?

நாஞ்சில் குமரன், நாகர்கோவில்.

நீங்கள் பழைய மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்குவதைவிட புதிய காரை வாங்குவதே நல்லது. 30,000 கி.மீ ஓடிய காருக்கு 5 லட்சம் ரூபாய் என்பது மிகவும் அதிகம். அதைவிட நீங்கள் கூடுதலாக 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், புதிய ஸ்விஃப்ட் VDi மாடலை வாங்கிவிடலாம்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ஹோண்டா ஷைன் அல்லது சூப்பர் ஸ்ப்ளெண்டர் - இரண்டில் எந்த பைக்கை வாங்கலாம்?

இகரமொழி (வாய்ஸ்நாப்)

ஹோண்டா ஷைன்தான் பெஸ்ட் சாய்ஸ். சூப்பர் ஸ்ப்ளெண்டர் இன்ஜினைவிட ஷைனில் இருப்பது 'பட்டர் ஸ்மூத்’ இன்ஜின் என்பதோடு, இதன் பர்ஃபாமென்ஸும் சிறப்பாக இருக்கும். ஹோண்டாவின் பில்டு குவாலிட்டியும், ஹீரோ ஹோண்டாவைவிட சிறப்பாக இருக்கிறது. மைலேஜைப் பொறுத்தவரை இரண்டு பைக்குகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க இருக்கிறேன். யமஹா ஆர்15, ஹீரோ ஹோண்டா கரீஸ்மா - இந்த இரண்டில் எதை வாங்கலாம்? பர்ஃபாமென்ஸ், மைலேஜ், டாப் ஸ்பீடு போன்றவற்றில் எது பெஸ்ட்? என் பட்ஜெட்

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

1.25 லட்சம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் புது பைக் ஏதேனும் வர இருக்கிறதா?

சரவணன், நாகர்கோவில்.

ஹோண்டா தனது 250 சிசி பைக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் விலை

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

1.25 லட்சத்தை தாண்டி விடும். கரீஸ்மாவை விட பர்ஃபாமென்ஸ், மைலேஜ், டாப் ஸ்பீட் ஆகியவற்றில் யமஹா ஆர்-15 தான் பெஸ்ட். அதனால் நீங்கள் யமஹா ஆர்-15 பைக்கையே வாங்கலாம்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

பிரீமியம் ஹேட்ச்பேக் கார் வாங்குவது என் திட்டம். ஃபோக்ஸ்வாகன் போலோ 1.6, ஸ்கோடா ஃபேபியா 1.6 - இதில் எதை வாங்குவது என குழப்பமாக இருக்கிறது. இரண்டிலும் இருப்பது ஒரே இன்ஜின்தானா?

அசோக், சென்னை.

இரண்டு கார்களில் இருப்பதும் ஒரே இன்ஜின்தான். இரண்டு கார்களின் சக்தியுமே 105 bhp. இந்த இரண்டு கார்களுமே ஒரே இன்ஜின் மற்றும் ஒரே bhpயை கொண்டு இருந்தாலும், ஃபேபியாவைவிட போலோவின் எடை குறைவு. புதிய டிசைன், ஃபோக்ஸ்வாகன் என்கிற பிராண்ட் இமேஜ் ஆகியவை போலோவின் பலம். இட வசதியைப் பொறுத்தவரை ஃபேபியாதான் டாப். இரண்டு கார்களின் விலையைப் பொறுத்தவரை பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், போலோ 1.6 வாங்க வேண்டுமென்றால் நீங்கள் குறைந்தது மூன்று மாதங்களாவது காத்திருக்க வேண்டும். ஃபேபியாவுக்குக் காத்திருப்பு காலம் மிகவும் குறைவு!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

பர்ஃபாமென்ஸ், ஸ்டைல் இரண்டும் கலந்த சூப்பர் பைக் வாங்க வேண்டும். மூன்று லட்ச ரூபாய் பட்ஜெட். என்ன பைக் வாங்கலாம்?

ஈஸ்வர், புதுக்கோட்டை.

3 லட்ச ரூபாய்க்கு சூப்பர் பைக்குகள் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை சூப்பர் பைக் வாங்க வேண்டுமென்றால் குறைந்தது பத்து லட்ச ரூபாயாவது வேண்டும். 3 லட்ச ரூபாய்தான் பட்ஜெட் என்றால், 250 சிசி திறன் கொண்ட கவாஸாகி நின்ஜா 250 ஆர் பைக் வாங்குங்கள்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

மிட்சுபிஷியின் புதிய லான்ஸர் எப்போது வெளிவரும்? இதன் பவர் என்ன?

கனகராஜ், திருப்பூர்.

இந்த ஆண்டு இறுதி அல்லது தீபாவளி சமயத்தில் புதிய லான்ஸரை விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு இருக்கிறது மிட்சுபிஷி. இது 2 லிட்டர் 150 bhp சக்தி கொண்ட இன்ஜினுடன் வெளிவர இருக்கிறது.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

டீசல் எம்யூவி கார் வாங்கலாமெனத் திட்டமிட்டிருக்கிறேன். டொயோட்டா இனோவா அல்லது மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என்னுடைய சாய்ஸ். என்னுடைய ஒரே தேவை, காரில் அலுங்கல் குலுங்கல்கள் எதுவும் இருக்கக் கூடாது. இந்த இரண்டு காரில் எதை வாங்கலாம். அல்லது வேறு சாய்ஸ் இருக்கிறதா?

சிவக்குமார், சோமனூர்

நீங்கள் சொல்லும் இரண்டு கார்களைத் தவிர, இந்த செக்மென்ட்டில் மஹிந்திரா ஸைலோ இருக்கிறது. ஆனால், நீங்கள் காருக்குள் அலுங்கல் குலுங்கல்கள் இருக்கக் கூடாது என்பதால், டொயோட்டா இனோவாவை வாங்குவதுதான் பெஸ்ட் சாய்ஸ்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

எனக்கு செவர்லே பீட் மிகவும் பிடித்திருக்கிறது. இதில் டீசல் இன்ஜின் கொண்ட மாடல் வெளிவர இருப்பதாக மோட்டார் விகடனில் படித்தேன். இது எப்போது வெளிவரும்? இதில் என்ன இன்ஜின் பொருத்தப்பட இருக்கிறது?

ஜான்சன், பாண்டிச்சேரி.

ஜெனரல் மோட்டார்ஸ், புனேவில் இன்ஜின் தொழிற்சாலையை நிர்மாணித்து வருகிறது. இந்தத் தொழிற்சாலை செயல்பட ஆரம்பித்தவுடன் டீசல் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டு புதிய பீட் வெளி வரும். இது 60 bhp சக்தியை வெளிப்படுத்தும் 3 சிலிண்டர், 936 சிசி இன்ஜினுடன் வெளிவர இருக்கிறது. இதன் பவர் குறைவாக இருப்பதுபோல் தோன்றினாலும், பீட்டின் குறைந்த எடை காரணமாக இது சிறப்பான பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும். மேலும், இது இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரும் டீசல் காராக இருக்கும். அனேகமாக செவர்லே பீட் டீசல், ஜூன் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் ஃபோர்டு ஃபிகோ டீசல் கார் வைத்திருக்கிறேன். இதில் எல்பிஜி பொருத்த முடியுமா? மேலும் ஃபிகோவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் ஸ்பீடு பிரேக்கர்களில் அதிகம் அடிபடுகிறது. கிரவுண்ட் கிளியரன்ஸை உயர்த்த ஏதும் வழி இருக்கிறதா?

பாலசுப்ரமணியம், ராமாபுரம், சென்னை.

டீசல் இன்ஜினுடன் எல்பிஜியை இணைக்க முடியாது. எல்பிஜி எரிபொருளை எரிக்க ஸ்பார்க் இக்னீஷன் கட்டாயம் தேவை. இது பெட்ரோல் இன்ஜினில் மட்டுமே சாத்தியம். கிரவுண்ட் கிளியரன்ஸை அதிகரிக்க பெரிய அளவு டயர்களையும், வீலையும் பொருத்தலாம். ஆனால், இது வீல் ஆர்ச்சுடன் உரசாமல் இருக்க வேண்டும். மேலும், பெரிய அளவு டயர்களைப் பொருத்தும்போது மைலேஜ் குறையும். சஸ்பென்ஷன்களில் ஸ்பேசரைப் பொருத்துவது இன்னொரு வழி. ஆனால், இதற்கு செலவு அதிகமாகும் என்பதோடு, திறமையான மெக்கானிக்குகளால் மட்டுமே இந்த வேலையைச் செய்ய முடியும்!