சார்லஸ்

ஷோ ரூமுக்குச் சென்று, 'இந்த காரில் என்ன வசதி இருக்கிறது?’ என்று கேட்டால்... 'ஏபிசிடி’யில் இருக்கும் அத்தனை எழுத்துகளையும் மாற்றி மாற்றிச் சொல்லி பயமுறுத்துவார்கள். அந்தப் பூச்சாண்டி வார்த்தைகளுக்கான விளக்கங்களைத் தெரிந்து கொண்டால், சேல்ஸ் ஆபீஸர்களை நாம் உண்டு இல்லை என்று ஒரு வழி செய்துவிடலாம்.

AWDஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார் என்பதைக் குறிக்கும். 2 WD, 4 WD என்று பின்னால் WD என்று வந்தால் இன்ஜினில் இருந்து நேரடியாக எத்தனை வீல்களுக்கு பவர் செல்கிறது என்பதைக் குறிக்கிறது.

ABS 'ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்’ என்பது திடீரென பிரேக் பிடிக்கும்போது வீல் லாக் ஆகாமல் தடுப்பதோடு, கார் ஸ்கிட் ஆகி விபத்து ஏற்படுவதையும் தடுக்கும். ஏபிஎஸ் சிஸ்டத்தில் உள்ள சென்ஸார்கள் எல்லா வீல்களுக்கும் சரியான அளவு பிரேக்கிங் பவரை அனுப்பும். இதனால் வீல் லாக் ஆகாது!

Attention Assist மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்களில் 'அட்டென்ஷன் அசிஸ்ட்’ சிஸ்டம் உள்ளது. அட்டென்ஷன் அசிஸ்ட், நாம் கார் ஓட்டும் விதத்தைத் தொடர்ந்து கவனிக்கும். ஸ்டீயரிங்கைத் தாறுமாறாக திருப்பினாலோ, நீண்ட நேரம் ஸ்டீயரிங்கில் கை இல்லை என்றாலோ, இது தொடர்ந்து ஒலி எழுப்பி ஓட்டுநரை எச்சரிக்கும். கார் ஓட்டும்போது தூங்கி விட்டாலோ அல்லது திடீரென மயக்கடைந்தாலோ இந்த எச்சரிக்கை ஒலி தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்!

ஆட்டோமேட்டிக் குரூஸ் கன்ட்ரோல் நெடுஞ்சாலையில் செல்லும்போது ஒரே வேகத்தில் தான் தொடர்ந்து செல்லப் போகிறோம் என்றால், ஆட்டோமேட்டிக் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உங்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும். உதாரணத்துக்கு, நெடுஞ்சாலையில் தொடர்ந்து 80 கி.மீ வேகத்தில் செல்லப் போகிறோம் என்றால், 80 கி.மீ வேகம் என்று செட் செய்து விட்டால் போதும்; அந்த வேகத்துக்கு மேல் கார் செல்லாது. இது குரூஸ் கன்ட்ரோல் வசதி கொண்ட எல்லா கார்களிலும் உண்டு. ஆனால், ஆட்டோமேட்டிக் குரூஸ் கன்ட்ரோலில் கூடுதலாக ரேடார் இருக்கும். இது முன்னால் செல்லும் காரின் வேகத்துக்கு ஏற்ப தொடர்ந்து நாம் ஓட்டுகிற காரின் வேகத்தைக்

கட்டுப்படுத்துவதோடு, சாலைக்கு ஏற்றபடி பிரேக் மற்றும் ஆக்ஸிலரேஷன் ஆகியவற்றைத் தானாகவே அட்ஜெஸ்ட் செய்யும்.

பிரேக் அசிஸ்ட் விபத்து ஏற்படும் நேரத்தில் நீங்கள் பதற்றத்தில் கொஞ்சமாக பிரேக்கை மிதித்தாலும் சரி, அதிகமாக மிதித்தாலும் சரி... சரியான அளவு பிரேக்கை ஆட்டோமேட்டிக்காகவே வீல்களுக்கு அனுப்புவதுதான் பிரேக் அசிஸ்ட்!

CVT (Continuously Variable Transmission) எண்ணில்லா கியரிங் ரேஷியோ கொண்ட கியர் பாக்ஸ். வேகம் மற்றும் டிரைவிங்குக்கு ஏற்றபடி கியரிங் ரேஷியோவை இந்த சிவிடி சிஸ்டம் மாற்றிக்கொண்டே இருக்கும்.

EBD (Electronic Brake Force Distribution) இது பெரும்பாலும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் இணைத்து செயல்படும். வீல்களுக்கு சரியான அளவு பிரேக்கிங்கை செலுத்தி கார் ஸ்கிட் ஆகாமலும், ஸ்பின் ஆகாமலும் தடுப்பதே எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் சிஸ்டம்.

. ECU. காரின் இக்னீஷன், வால்வு கன்ட்ரோல், இன்ஜின் செயல்பாடு, டர்போ சார்ஜர் என அனைத்தையும் 'எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்’ கட்டுப்படுத்தும்..
ரன் ஃப்ளாட் டயர் பிஎம்டபிள்யூ கார்களில் பெரும்பாலும் ரன் ஃபிளாட் டயர்கள் பொருத்தப்படுகின்றன. டயர் பஞ்சரானாலும் தொடர்ந்து 100 - 150 கி.மீ வரை (குறைந்த வேகத்தில்) பயணிக்க முடியும்.

ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வளைவுகளில் வேகமாக காரைத் திருப்பும்போது, ஓட்டுனரின் கன்ட்ரோலை மீறிப் போகாமல் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் கட்டுப்படுத்துவதோடு, காரை ஓட்டுனரின் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

வாய்ஸ் கன்ட்ரோல் வாய்மொழி உத்தரவுகள் மூலம் மியூசிக் சிஸ்டம், ஏ.ஸி போன்றவற்றை இயக்க உதவுகிறது.

கர்ட்டன் காற்றுப் பைகள் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற சொகுசு கார்களில் முன் பக்க காற்றுப் பைகள் மட்டுமல்லாமல், காருக்குள் சுற்றியும் 6 முதல் 8 காற்றுப் பைகள் பொருத்தப்படுகின்றன. இது போன்ற அதிக பாதுகாப்பு அம்சங்கள் வாய்ந்த காரில் விபத்து ஏற்பட்டால், விபத்து நடந்த 7 மில்லி செகண்டுக்குள் காற்றுப் பைகள் ஊதித் திறக்கும். அதே போல, சீட் பெல்ட்டை இறுக்குவது, கதவுகளை அன்லாக் செய்வது, ஆட்டோமேட்டிக்காக கண்ணாடிகளை இறக்குவது, எரிபொருள் சப்ளையை நிறுத்துவது என பாதுகாப்பு சம்பந்தமான அத்தனை வேலைகளும் ஆட்டோமேட்டிக்காக நடக்க ஆரம்பித்து விடும்!

மாறாக, மனித மூளை விபத்தை 300 மில்லி செகண்ட் கழித்துத்தான் உணரும்.

ட்வின் கிளட்ச் கியர் பாக்ஸ் இரண்டு கிளட்ச்சுகளைக் கொண்டதுதான் ட்வின் கிளட்ச் கியர் பாக்ஸ். ஒற்றைப் படை (1,3,5) கியர்களுக்கு ஒரு கிளட்சும், இரட்டைப் படை (2,4,6) கியர்களுக்கு இன்னொரு கிளட்சும் கொண்ட அமைப்பு தான் ட்வின் கிளட்ச் கியர் பாக்ஸ். இரட்டை கிளட்ச் மூலம் கியர் மாற்றம் ஸ்மூத்தாக இருக்கும் என்பதோடு, கியர்களை எந்தச் சிரமமும் இன்றி வேகமாகவும் மாற்ற முடியும். இந்த இரட்டை கிளட்ச் பாக்ஸ் ஃபோக்ஸ்வாகன் கார்களில்தான் (ஞிஷிநி) முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது.

சூப்பர் சார்ஜர் அதிகப்படியான காற்றை இன்ஜின் சிலிண்டர்களுக்குள் அனுப்பி இன்ஜினின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

கிளைமேட் கன்ட்ரோல் மேனுவலாக அட்ஜஸ்ட் செய்யாமல் ஏ.ஸி ஆன் செய்தவுடனேயே கேபினுக்குள் சரியான அளவு ஏ.ஸி-யைத் தொடர்ந்து மெயின்டெயின் செய்வதுதான் கிளைமேட் கன்ட்ரோலின் வேலை!

பார்ட்டிகுலேட் ஃபில்ட்டர் டீசல் இன்ஜின்கள் கார்பன் துகள்களை வெளியே அனுப்பும். இதை பார்ட்டிகுலேட் என்பார்கள். இதை சுவாசிப்பது நுரையீரலுக்குத் தீங்கை விளைவிக்கும். பார்ட்டிகுலேட் ஃபில்டர் இந்த கார்பன் துகள்களை வெளியே அனுப்பாமல் தடுக்கும். ஆனால், இது வேலை செய்ய டீசலில் கந்தக அளவு குறைவாக இருக்க வேண்டும்!

கீ-லெஸ் என்ட்ரி கீ-லெஸ் என்ட்ரி என்பது சென்ஸார் சிஸ்டத்தை உள்ளடக்கியது. அதாவது, காரைத் திறக்க சாவியைப் போட வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதில் 3 அடி தூரத்துக்குள் கார் சாவியை பாக்கெட்டிலோ, அல்லது பையிலோ வைத்திருந்தாலே போதும்! கார் கதவைத் திறக்க முடியும். அதேபோல, சாவி சட்டைப் பாக்கெட்டில் இருந்தாலே போதும்; இன்ஜினை ஸ்டார்ட் செய்ய சாவியை பயன்படுத்தத் தேவையில்லை.

பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார்களில் இந்த பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் சிஸ்டம் உள்ளது. இண்டிகேட்டர் சுவிட்சை அழுத்தும் போது, இந்த பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் சிஸ்டமும் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். நம் கண் மறைவில் யாராவது ஆட்கள் வந்தாலோ அல்லது வாகனங்கள் வந்தாலோ இது ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும்.

நைட் விஷன் அசிஸ்ட் டேஷ் போர்டில் இருக்கும் டிஸ்ப்ளே ஸ்கிரினீல் ஆயிரம் அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்கள் அல்லது குறுக்கே ஓடும் விலங்குகள் என அனைத்தையும் இது பெரிதுபடுத்தி அதைத் துல்லியமாகக் திரையில் காட்டிவிடும்!