ஆட்டோமொபைல் தலைநகரான டெட்ராய்ட், கடந்த மாதம் திருவிழா உற்சாகத்தில் மிதந்தது. ஜனவரி மாதம் 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற்ற உலகின் மிகப் பெரிய ஆட்டோ ஷோவான டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில், நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மொத்தம் 14 நாட்கள் நடைபெற்ற இந்த ஆட்டோ ஷோவை லட்சக்கணக்கான மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்! டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் ரசிகர்களை அசத்திய டாப் கார்கள் இங்கே...

பிஎம்டபிள்யூ எம்-1

சின்ன... ஆனால் பவர்ஃபுல் 'எம்-1’ காரை காட்சிக்கு வைத்திருந்தது பிஎம்டபிள்யூ. ட்வின் டர்போ, இன்-லைன் 6 சிலிண்டர் இன்ஜினைக் கொண்ட பிஎம்டபிள்யூ எம்-1, 335 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4 விநாடிகளில் கடந்துவிடும் என்கிறது பிஎம்டபிள்யூ. இந்த காரில் பிஎம்டபிள்யூ எம்-3 காரில் இருக்கும் பவர்ஃபுல் பிரேக்ஸ், சஸ்பென்ஷன் என அனைத்து சிறப்பம்சங்களும் இதில் 'பிரஸெண்ட் சார்!’ தோற்றத்தைப் பொறுத்தவரை அகலமான ஃபெண்டர்களைப் பொருத்தி வித்தியாசம் காட்டியிருக்கிறது பிஎம்டபிள்யூ!

ஹோண்டா சிவிக் கான்செப்ட்

2012-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹோண்டா சிவிக்-ஐ, டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்தது ஹோண்டா. இப்போது விற்பனையில் இருக்கும் சிவிக்கைவிட எடை குறைந்த காராக இதைத் தயாரித்திருக்கிறது ஹோண்டா. பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டும் கலந்த ஹைபிரிட் காராகவும் வெளிவர இருக்கிறது சிவிக்!

ஃபோக்ஸ்வாகன் பஸாத்

உலகிலேயே நீளமான பஸாத் காரை முதன் முறையாக டெட்ராய்ட்டில் அறிமுகம் செய்தது ஃபோக்ஸ்வாகன். 4.9 மீட்டர் நீளமும் 1.83 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பஸாத் கார்தான், இதுவரை வந்த பஸாத் கார்களிலேயே மிகப் பெரிய கார். அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த கார், டொயோட்டா கேம்ரி மற்றும் ஹோண்டா அக்கார்டு கார்களுடன் போட்டி போட இருக்கிறது!

போர்ஷே 918 ஆர்.எஸ்.ஆர் கான்செப்ட்

ரேஸ் கார் போல் இருக்கிறது போர்ஷே 918 ஆர்.எஸ்.ஆர். V 8 இன்ஜின் கொண்ட இது 780 bhp சக்தியைக் கொண்ட பவர்ஃபுல் கார். இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 2.8 விநாடிகளில் கடக்கும் என்கிறது போர்ஷே!

ஹூண்டாய் வெலோஸ்ட்டர்

ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் புதிய வெலோஸ்ட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது ஹுண்டாய். 'புதிய வெலோஸ்ட்டரில் இருக்கும் 1.6 லிட்டர் இன்ஜின் 140 bhp சக்தியை வெளிப்படுத்தும்’ என்கிறது ஹூண்டாய். இதில் ட்யூல் கிளட்ச் சிஸ்டம் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட இருக்கிறது!

செவர்லே சோனிக்

ஏவியோவுக்கு மாற்றாக, செவர்லே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் கார் சோனிக். பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின்களுடனும் வெளிவர இருக்கும் சோனிக், 138 bhp சக்தியை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்தைப் பொறுத்தவரை இது க்ரூஸ் மற்றும் பீட் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது!

ஃபோர்டு வெர்ட்டிரெக் கான்செப்ட்

ஃபோர்டு நிறுவனத்தின் சாஃப்ட் ரோடர் எஸ்யூவியான 'எஸ்கேப்’ மார்க்கெட்டுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டதால், 'வெர்ட்டிரெக்’ எனும் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருக்கிறது. வெர்ட்டிரெக்கின் கான்செப்ட் காரை டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைத்திருந்தது ஃபோர்டு. 1.6 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜினைக் கொண்டிருந்தது இந்த கார். தென் ஆப்பிரிக்க மொழியில் வெர்ட்டிரெக் என்றால், புறப்பாடு என்று அர்த்தமாம்!