எஸ்.ஷக்தி>> தி.விஜய்

கடவுளுக்கு மட்டுமில்லை... கார்களுக்கும் இஷ்ட தேசம் கேரளாதான். கார்கள் என்று பொத் தாம்

. பொதுவாகச் சொல்வதைவிட, 'மாருதி கார்களுக்கு இஷ்ட தேசம் கேரளம்’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்! ஆம், மாருதி கார்கள் தமிழகத்தில் விற்பனையாவதை விட கேரளத்தில்தான் அதிகமாக விற்பனையாகின்றனவாம்..
கேரள மாநிலம் முழுக்கவே பரவலாக பழைய கார் விற்பனை காணப்பட்டாலும் பாலக்காடு, திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் கவனிக்கத்தக்க வகையில் பரபரப்பாக இருக்கிறது பழைய கார் சந்தை.

''கேரள மக்களுக்குப் புதுசு புதுசா கார் வாங்கணுங்கிற ஆசைதான் இங்கே இந்த ஃபீல்டு இப்படி சக்கைப் போடு போட காரணம்! கோயமுத்தூர், சேலத்துல ஸ்விஃப்ட் கார் கிடைக்கலேன்னா, சட்டுன்னு பாலக்காடுக்கு போன் போடுறாங்கன்னா பார்த்துக்குங்களேன். அதேமாதிரி கோவை, திருப்பூர் பகுதியில போணி ஆகாத கார்களை இங்கேதான் விற்பனைக்குக் கொண்டு வர்றதும் நடக்குது!'' என்கிறார் பாலக்காடு பழைய கார் மார்க்கெட்டைச் சேர்ந்த அஜூ.

திருச்சூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்த்து சிறிதும், பெரிதுமாக குறைந்தது ஐம்பது பழைய கார் ஷோரூம்கள் இருக்கின்றன. மாருதியின் 'ட்ரூ வேல்யூ’ ஷோரூமும் இதில் அடக்கம். சிறிய ஷோரூமில் குறைந்தது நாற்பதும், பெரிய ஷோரூமில் குறைந்தது நூறு கார்களும் எந்நேரமும் நின்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஸ்விஃப்ட்டுக்கு செம டிமாண்ட் இருக்கிறது. அதே நேரத்தில், செவர்லே மற்றும் டாடாவின் தயாரிப்புகளை பெரிய அளவில் இங்கே பார்க்க முடியவில்லை. அதேபோல, டொயோட்டா இனோவாவுக்கும் இங்கே ஏக கிராக்கி!

திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் பழைய கார் சந்தையில் புழங்கி வரும் ஏஜென்டான ஜோய், ''புது கார் ஷோரூம் எந்தளவுக்கு பிஸியா இருக்குதோ, அந்தளவுக்கு நாங்களும் பரபரன்னு இருக்கோம். புதுசா டிரைவிங் கத்துக்கிட்டு, கார் வாங்க நினைக்கிறவங்க, ரிஸ்க் எடுக்காம இருக்க பழைய கார்தான் வாங்குறாங்க! செகண்ட் சேல்ஸுக்கு வர்ற கார்களை நாங்க ரொம்ப நீட்டா சர்வீஸ் பண்ணி, புதுசு மாதிரி ரெடி பண்ணித்தான் சேல்ஸ் பண்றோம். செகண்ட் சேல்ஸ் கார்களுக்குக் கூட வாரன்ட்டி கொடுக்கிறோம். இதையெல்லாம்விட தவணை முறையிலேயும் செகண்ட் சேல்ஸ் கார் கிடைக்குறதால, இந்த மார்க்கெட் செம சூடா இருக்குது!'' என்கிறார்.

''கேரள சாலையில சுமார் பத்து கி.மீ போனீங்கன்னா குறைஞ்சது இருபது வேகன் ஆர் கார்களையாவது பார்க்கலாம். இந்த காரை யூஸ் செய்தா பேக் பெயின் வர்றதில்லைன்னு டாக்டர்களே ரெக்கமென்ட் பண்றாங்கன்னா பார்த்துக்குங்க! எல்லா டாகுமென்ட்ஸையும் செக் பண்ணிட்டுத்தான் இங்க நாங்க காரை வாங்கி விற்கிறோம். கூடவே, காரோட ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரைத் தட்டினாலே இன்டர்நெட்ல அதோட பழைய ஜாதகத்தையே கொண்டுவந்து கொட்டிடுற மாதிரி எங்க அரசாங்கம் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கே!'' என்கிறார் பிஆர்டி நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் மகிழ்வாக!

கோழிக்கோடு, கொச்சின் போன்ற கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த கார்களுக்கு மட்டும் ரீ-சேல் வேல்யூ குறைவு. காரணம், கடற்காற்று பட்டு காரின் அடிப்பகுதி துருப்பிடிப்பதுதான்.

ஆனாலும், கேரள யூஸ்டு கார் சந்தையில் திருட்டு கார்களின் புழக்கம் அதிகமிருக்க வாய்ப்பு இருப்பதால், மிக கவனத்துடன் வாங்க வேண்டும் என்ற எச்சரிக்கை மணியை அடிக்கிறார்கள் சேட்டன்கள்!

கேரள பழைய கார் சந்தையில் ஆள் போட்டுத் தேடினாலும் டாடா நானோ சிக்குவதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் ரெண்டு நாள் நடக்கும் பழைய கார் மேளாவில்கூட நானோ தவறாமல் ஆஜர் போடுகிறது. சமீபத்தில் கோவை கைத்தறி கண்காட்சி மைதானத்தில், 'பென்டா கார்ஸ்’ எனும் நிறுவனம் மூன்று நாட்கள் நடத்திய பழைய கார் மேளாவின் முதல் நாளிலேயே மூன்று நானோ கார்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. நானோவின் மூன்று மாடல்களையும் ரெப்ரசன்ட் பண்ணும் வகையில் மூன்று கார்கள் நின்றன. ஒரு லட்சத்து அறுபதாயிரம், ஒரு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரம், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் என்று அவற்றின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. வைப்ரேஷன் மற்றும் பல்வேறு பிரச்னைகளைக் காரணம் காட்டி, அவற்றை விற்க விரும்புவதாக அதன் உரிமையாளர்கள் சொன்னார்களாம்!