நா.இள.அறவாழி>> ஜே.முருகன்

கடந்த மாதம் புதுச்சேரி மக்களுக்கு கண்கவர் விருந்து நடந்தது. சென்னை சங்கமம் போன்றது அல்ல இது. ஆனால், இது முற்றிலும் புதுசு! அது, புதுச்சேரி சுற்றுலா கழகமும், சென்னை மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்பும் இணைத்து நடத்திய வின்டேஜ் ராலிதான்! திடீரென சாலையில் அணிவகுத்து வந்த வின்டேஜ் கார்களைக் கண்ட உள்ளூர் வாசிகளுக்கு, ஒரே ஆச்சரியம். 'ஆதிகாலத்து காரெல்லாம் இவ்வளவு அழகா இருக்கே..! என வியந்தனர்.

சுமார் ஐம்பது கார்கள் இந்த ராலியில் கலந்துகொண்டாலும், புதுவையைச் சேர்ந்த எட்டு கார்கள் கலந்து கொண்டதுதான் ஹைலைட்.

இவை இதுவரை நம் கண்ணில் சிக்காதவை! அதன் உரிமையாளர்களைத் தேடிப் பிடித்து கார்களின் ஜாதகத்தைக் கைப்பற்றினோம். முதலில் சிக்கியது ஃபியட் 1100. 1956-ம் ஆண்டு மாடல் கார் இது. இதன் உரிமையாளர் தேவராஜிடம் பேசியபோது, ''1974-ம் வருஷம் எங்க தாத்தா இந்த கார் வாங்கினாரு. இப்ப வரைக்கும் பாதுகாப்பா வெச்சுருக்கேன். கிட்டத்தட்ட எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி இந்த கார். காருக்குள்ள இருக்கும் பார்ட்ஸ் எல்லாலே ஒரிஜினல்தான். இப்பவும் நல்லா ஓடுற கண்டிஷன்ல இருக்கு. லீவு நாட்கள்ல மட்டும் வெளிய எடுப்போம். குடும்பத்தோட பீச்சுல இந்த கார்லதான் ரவுண்டு வருவோம்'' என்று சிலாகித்தார்.

பார்த்தவுடன் ஓட்டிப் பார்க்க வேண்டும் எனத் தூண்டும் வில்லீஸ் ஜீப், ஜேம்ஸ் என்பவருடையது. உலகப் போர் காலத்து வாகனமான இது, 'மலைச் சாலைகளிலும், கரடுமுரடான பாதைகளில் என்னை ஓட்டு’ என்று அழைப்பது போலக் காட்சியளித்தது. ஹென்றி மற்றும் மாயா ஆகியோரின் மேலும் இரண்டு வில்லீஸ் ஜீப்புகளும் இந்த ராலியில் பங்கேற்றன.

1965-ம் ஆண்டு மாடலான ஸ்டாண்டர்டு ஹெரால்டு வைத்திருக்கும் ஜீன் மிஷேல், இந்த காரை 2007-ம் ஆண்டுதான் வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட்ட கார் என்பதில் அவருக்கு ரொம்பப் பெருமை. ''சோழாவரம் ரேஸில் எல்லாம் கலந்து கொண்ட கார்'' என காரைப் பற்றி கேட்பவரிடமெல்லாம் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டே அன்போடு காரை வருடுகிறார்.

அஜீத் என்பவரின் 1965-ம் ஆண்டு மாடல் சிட்ரன் கார் படு அழகு! அதுவும் புதுச்சேரி பதிவு எண்ணில் இருந்ததால் உள்ளூர்க்காரர்களுக்கு அதிசயமாக இருந்தது.

இது தவிர, ஹென்றி ஐசக் என்பவர் 1964-ம் ஆண்டு மாடல் ஸ்டாண்டர்டு ஹெரால்ட், 1953-ம் ஆண்டு மாடல் வில்லீஸ் ஜீப், 1964-ம் ஆண்டு மாடல் ஃபோக்ஸ்வாகன் பீட்டில் என அசத்தல் கலெக்ஷன் வைத்துள்ளார். பிரெஞ்ச் ராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் இந்த வாகனங்களை வாங்கியதாகக் கூறினார். ''பிரெஞ்சு அரசின் கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவரிடம் வாங்கிய கார் இது. லெப்ட் ஹேண்ட் டிரைவிங், 4 சிலிண்டர் இன்ஜின் உள்ள இந்த காரை கிட்டத்தட்ட 55 வருஷமா நான் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன்'' என நமக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்த அலெக்சாண்டரின் 1952-ம் ஆண்டு மாடல் மோரிஸ் மைனர் படு அசத்தலாக இருந்தது. மைனரைச் சுற்றி ஏகப்பட்ட இளசுகள் நின்றிருந்தனர். இந்த வாகனங்கள் அனைத்தும் புதுச்சேரியைச் சேர்ந்தவை.

இது தவிர, சென்னையில் இருந்து பல வின்டேஜ் கார்கள் கலந்துகொண்டன. எம்.எஸ்.குகன், சி.எஸ்.ஆனந்த், டாக்டர் ராம் பிரதீப், ராஜேஷ், ரஞ்சித் பிரதாப் ஆகியோரின் கார்களும் இந்த ராலியில் பங்கேற்று, புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாக உற்சவமே நடத்தியது!