பொதுவாக, டாக்டர்களுக்கும் கார்களுக்குமான காதல் கெமிஸ்ட்ரி எப்போதுமே எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்தான்! மருத்துவர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே கார் காதலர்கள்தான். அந்த கார் காதலர்களில் யஷ்வந்த் குமார் வெங்கடராமன் ஒரு படி மேல்! ''உண்மையைச் சொன்னால் திட்டுவார் கள். பதினோரு வயதிலேயே நான் கார் ஓட்டக் கற்றுக்கொண்டேன். கார் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்த செயல். அதனால், அதிகமாக டிரைவரைப் பயன்படுத்தமாட்டேன். சென்னையில் இருந்து கோவா வரை காரை ஓட்டிக் கொண்டு சென்றதுதான் என்னுடைய நீண்ட தூரப் பயணம். இமயமலையில் இருக்கும் ரோத்தங்பாஸ் எனும் இடத்தில், ஜிப்ஸியை ஓட்டி இருக்கிறேன்.

எனக்கு வேகமாக காரை ஓட்டப் பிடிக்காது. ஆன£ல், கார் ராலி ரொம்பப் பிடிக்கும். ராலியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற என்னுடைய சிறுவயது ஆசை இதுவரை நிறைவேறவில்லை. சின்ன வயதில் ஆசை இருந்தது; காசு இல்லை. இப்போது காசு இருக்கிறது; நேரம் இல்லை. பல் டாக்டராக இருப்பதால் நிறைய வேலைகள்... ஓடிக்கொண்டே இருக்கிறேன். விரைவில் காரை ரெடி செய்து ஒரு ராலியிலாவது ஓட்டிவிட வேண்டும் என மனசு துடிக்கிறது.

நான் வாங்கிய முதல் கார் ஹூண்டாய் சான்ட்ரோ. 1999-ல் வாங்கினேன். எனக்கு மிகவும் பிடித்த கார் அது. அதன் பிறகு எஸ்டீம், ஹோண்டா சிட்டி, ஃபியட் என பத்து கார்கள் வரை வாங்கினேன். இப்போது வீட்டில் ஆறு கார்கள் இருக்கின்றன. இதில், ஆடி க்யூ-5, மெர்சிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் காரைத் தவிர்த்து, எனக்குப் பிடித்த கார் டொயோட்டா இனோவா.

குறைந்த விலை கார்களில் இனோவா போன்ற சொகுசான காரை நான் பார்த்ததே இல்லை. பார்க்க பெரிய காராக இருக்கும். ஆனால், சிட்டிக்குள் ஸ்விஃப்ட் ஓட்டுவதுபோல சுலபமாக ஓட்ட முடியும். அதுவும் டிரைவர் ஓட்ட, பின் சீட்டில் உட்கார்ந்துவிட்டால் அவ்வளவு ரிலாக்ஸ்டாக இருக்கும். எவ்வளவு தூரம் பயணம் போனாலும் களைப்பு தெரியாது.

அதன்பிறகு, நான் ரொம்பவும் ஆசைப்பட்டு வாங்கிய கார் ஆடி க்யூ-5. இந்த காரை வாங்கும் முன்பு, மெர்சிடீஸ் எம்எல் 350 காரை இங்கிலாந்தில் வாடகைக்கு எடுத்து 10 நாட்கள் ஓட்டிப் பார்த்தேன். ஆனால், அதைவிடவும் க்யூ-5தான் க்யூட்டாக, ஸ்டைலாக இருந்தது. மேன்லியான கார். 3 லிட்டர் குவாட்ரோ, ஆறு சிலிண்டர் வி6 இன்ஜின். எட்டு விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை டச் செய்துவிடும். ஆறு காற்றுப் பைகள், ஏபிஎஸ், இபிடி என நிறைய பாதுகாப்பு வசதிகள் இருப்பதால், பயப்பட வேண்டியது இல்லை. ஆனால், இதில் மைனஸ் என சஸ்பென்ஷனைச் சொல்லலாம். காருக்குள் நிறைய ஜெர்க் தெரிகிறது.

என் மனைவி நிலையா, தீவிர பென்ஸ் ரசிகை. அதுவும் கறுப்பு கலர் என்றால் கொள்ளைப் பிரியம். அதனால், விலை உயர்ந்த மாடலான 'அவான்த்கார்டே’ பெட்ரோல் மாடல் சி-கிளாஸ் காரை வாங்கினேன். பெண்கள் ஓட்டுவதற்கு சௌகரியமான சொகுசு கார் இது. பார்க்கிங் செய்வது செம ஈஸி! சஸ்பென்ஷன் சூப்பர். எந்த மாதிரியான சாலையில் சென்றாலும், காருக்குள் எந்தத் தொந்தரவும் இல்லை. ஆனால், சிட்டிக்குள் லிட்டருக்கு 6 - 7 கி.மீ-தான் மைலேஜ் அளிக்கிறது.

ஆனால், இரண்டு கார்களுமே சூப்பர் கார்கள். இரண்டு கார்களையுமே ஜென்ரல் சர்வீஸ் செய்தால் 10 - 12 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆனால், ஸ்பேர் பார்ட்ஸ் மாற்ற வேண்டும் என்றால்தான் தீர்ந்தோம்! பென்ஸ் சி-கிளாஸின் பக்கவாட்டுக் கண்ணாடிகளை மாற்ற மட்டும் 80 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பென்ஸ் சி கிளாஸ், ஆடி க்யூ-5 கார்கள் எல்லாம் ரொம்ப சாதாரணமான கார்கள். ஆனால், இங்கே இம்போர்ட் ட்யூட்டி 130 சதவிகிதம். அதனால்தான் இந்த கார்களின் விலை அதிகமாக இருக்கிறது. வரியைக் குறைத்து இது போன்ற கார்களின் விற்பனை உயர்ந்தால், இந்திய கார்களின் தரம் இன்னும் உயரும். விபத்துகள் நிச்சயம் குறையும். சொல்லப் போனால் பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்கள் இந்தியாவில் வந்த பிறகுதான் சீட் பெல்ட், காற்றுப் பைகள், ஏபிஎஸ் குறித்த விழிப்பு உணர்வே இங்கே வந்தது. அதனால், இந்த கார்களின் விலை குறைவது நமக்குப் பல வகைகளில் நன்மையாக இருக்கும்.

அடுத்ததாக, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்க வேண்டும். இதுதான் என்னுடைய நீண்டநாள் ஆசை. இந்த காருக்குள் பிரமிப்பது போல எதுவும் இல்லை. ஆனால், அந்த பிராண்ட் பெயர், சொகுசுக்கு ஈடு இணையில்லை. அடுத்த முறை ரோல்ஸ் ராய்ஸ் காருடன் உங்களைச் சந்திக்கிறேன்'' என்று தடதடவெனப் பேசுகிறார் யஷ்வந்த் குமார்!