கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதியோடு, டாடா நானோ விற்பனைக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. ரத்தன் டாடாவின் 1 லட்ச ரூபாய் கனவு காராக விற்பனைக்கு வந்த நானோ, விற்பனையில் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நானோவின் விற்பனை சீராகவே இல்லை. சில மாதங்கள் அதிகமாகவும், சில மாதங்கள் குறைவாகவும் விற்பனையாகிறது. இந்த நிலையில், 2009 ஜெனீவா மோட்டார் ஷோவில் காண்பிக்கப்பட்ட நானோவின் ஐரோப்பா மாடல் போலக் காட்சியளிக்கும் புதிய நானோ காரை, கோவையில் டெஸ்ட் செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ்.

டாடாவின் அனைத்து கார்களையும் டெஸ்ட் செய்வது, கோவையில் உள்ள ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம்தான். நானோ, முதன்முதலில் வெளிவந்தபோதே கோவையில்தான் டெஸ்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில், புத்தம் புதிய நானோ மாடலை, கடந்த மாதம் கோவை செட்டிப்பாளையம் கரி மோட்டார் ரேஸ் டிராக் அருகே டெஸ்ட் செய்துகொண்டு இருந்தபோது, ரகசியமாக இதைப் படம் பிடித்திருக்கிறார் மோட்டார் விகடன் வாசகர் கார்த்திக். டீசல் மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாகச் செய்திகள் உலவிக்கொண்டு இருக்கும் நிலையில், கோவையில் டெஸ்ட் செய்யப்பட்ட காரில் 'எல்எக்ஸ்’ என எழுதப்பட்டு இருந்தது. அதனால், இது நிச்சயம் பெட்ரோல் காராகவே இருக்கும். முன் பக்கத்தைப் பொறுத்தவரை பாடி கலர் பம்ப்பர், நீளமான எல்இடி பனி விளக்குகள், புதிய டிசைன் அலாய் வீல் என அசத்தல் மாற்றங்களுடன் தயாராகி இருக்கிறது நானோ. மேற்கூரை முழுக்க கறுப்பு வண்ணத்தில் இருக்கிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் நானோவின் முன் பக்கத்தின் நடுவே கூராக இருக்கும். அதில், டாடாவின் லோகோ இருக்கும். புதிய நானோவில் முன் பக்கம் கூராக இல்லாமல் மொழு மொழுவென இருக்கிறது. பின் பக்கத்தைப் பொறுத்த வரை பம்ப்பரைத் தவிர பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த புதிய நானோ, எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் அல்லது இந்த மாடல் வெளிநாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப் படுமா போன்ற எந்தக் கேள்விகளுக்கும் தற்போது விடை சொல்ல மறுக்கிறது டாடா.

தோற்றத்தில் உண்மையிலேயே ஈர்க்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கும் இந்த காரின் இன்ஜினிலும் மாற்றங்களைச் செய்திருந்தால், நிச்சயம் நானோவுக்கு வருங்காலம் வசந்த காலம்தான்!