நடிகர் கிஷோர். அலட்டல் இல்லாத ஆழமான நடிப்பில் மிரட்டும் வில்லன். இவர் ஒரு பைக் காதலர் என்பதுதான் ஆச்சரிய செய்தி. 'பொல்லாதவன்’ நாயகன் தனுஷ், பல்ஸரின் மீது கொண்ட வேட்கையைப் போல, அதில் வில்லனாக நடித்த கிஷோருக்கும் நிஜ வாழ்வில் புல்லட் மீது அளப்பரிய காதல்! பெங்களூருவில் வசிக்கும் இவர், உள்ளூர் ஷாப்பிங் மால் ஆரம்பித்து வெளியூர் ஷூட்டிங் ஸ்பாட் வரை, தன் புல்லட்டில்தான் பயணம் செய்கிறார். தற்போது 'வன யுத்தம்’ எனும் படத்தில் வீரப்பன் வேடத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் கிஷோரை, பெங்களூருவின் ஓர் இளங்காலைப் பொழுதில் சந்தித்தேன்.

எல்லாரையும் போலவே எனக்கும் விதவிதமான பைக், ரேஸிங் கார் என ஆட்டோமொபைலின் அத்தனை அங்கங்களும் பிடிக்கும். ஆனால், புல்லட் மீது மட்டும் கொல வெறி! அதனுடைய 'தட் தட்’ பீட் சவுண்ட், உருவம், ஸ்டைல்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். புல்லட் மீது அவ்ளோ கிரேஸ்! என் இளவயதில் நான் பார்த்த படங்கள், நான் வசித்த தெருவில் இருந்த புல்லட் அங்கிள், பெங்களூரு நகரம் என என்னைச் சுற்றி புல்லட் ராஜ்ஜியம்தான். புல்லட் மீது எனக்கு இன்றும் தனியாத மோகம் இருக்க இவையும் காரணமாக இருக்கலாம். வீட்டில் பைக் வாங்கித் தரும் அளவுக்கு குடும்பப் பொருளாதாரம் இல்லை. படிக்கும்போதே, 'வாழ்க்கையில் சொந்தமாக ஒரு புல்லட் வாங்க வேண்டும்’ என்பதுதான் என் லட்சியக் கனவாக இருந்தது'' என்றவர், கியரை மாற்றினார்.

''படித்து முடித்ததும், பெங்களூருவில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை. ஆனால், சம்பளம் மிகக் குறைவு. அதனால், கிடைத்த நேரத்தில் ஃபேஷன் டிசைனர் வேலையும் செய்தேன். அப்போதுகூட

புல்லட் வாங்கும் அளவுக்கு வருமானம் இல்லை. ஆனால், கல்யாணம் நடந்து விட்டது. நான் மிகவும் கொடுத்து வைத்தவன், ஏனென்றால், என் மனைவிக்கும் பைக் மீது பயங்கர ஆர்வம். பைக், கார் வாகனங்கள் ஓட்டவும் அவருக்குத் தெரியும். நாட்கள் ஓட ஓட கன்னட சினிமாவில் நடிக்க எனக்குச் சின்னச் சின்ன வேடங்கள் கிடைத்தன. ஆங்காங்கே ஓடியாட பைக் கட்டாயத் தேவை என்ற நிலை வந்தது. அதன்பிறகு, 2007-ல்தான் இந்த பழைய ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை வாங்கினேன். 1996 மாடல், 40,000 ரூபாய் விலை. ஆனால், 45 ஆயிரம் ரூபாய் செலவு செய்து என் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றினேன்!

முதல் முத்தம், முதல் காதல் போலத்தான் என்னுடைய முதல் பைக். எனக்கே எனக்காக வாங்கிய என் புல்லட்டில் முதன் முறையாக பயணம் செய்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. யானை மீது அமர்ந்து சவாரி செய்தது போல இருந்தது. வேறு எந்த பைக்கில் சென்றிருந்தாலும் இந்த ஃபீல் வராது. எனக்கு புல்லட்டில் வேகமாகப் போகப் பிடிக்காது. ஏனென்றால், புல்லட்டின் 'தட் தட்’ பீட் சவுண்ட், எனக்கு ஹார்ட் பீட் சவுண்ட் மாதிரி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 60 கி.மீ வேகம் வரைக்கும்தான் அந்த பீட் இருக்கும். கொஞ்சம் சவுண்ட் மாறினால்கூட, உடனே சர்வீஸுக்கு விட்டுவிடுவேன். அதேபோல, என் புல்லட்டை நான் மட்டும்தான் ஓட்டணும். யாராவது ஆசைக்கு வேண்டுமானால் ஒரு ரவுண்ட் ஓட்டிப் பார்க்கலாம். மெக்கானிக்கூட என் பைக்கை ஓட்டிப் பார்க்க அனுமதிக்க மாட்டேன்'' என சிரித்தவர், தன்னுடைய மனைவியின் பைக் ஆர்வம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

''என் மனைவியும் தீவிரமான புல்லட் ஃபேன். பிரமாதமா பைக் ஓட்டுவாங்க! ஷூட்டிங், ஃபேமிலி அவுட்டிங் என எதுவாக இருந்தாலும் காரில் போகாமல் புல்லட்டில்தான் பயணம். எனக்கு 500 சிசி பைக் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால், என் மனைவி என்னை முந்திக் கொண்டார். 500 சிசி புல்லட் ஸ்டார்ம் பைக் புக் செய்துவிட்டார்!'' என்றவர் லேன் மாறினார்.

''2008-ம் வருஷம். பெங்களூரு மிட் நைட்! வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தப்போ... ஒரு கால் சென்டர் கார், என் மீது மோதிடுச்சி. பெரிய ஆக்ஸிடென்ட் தான். நல்லவேளை, நான் புல்லட்டில் பயணித்ததால், ஒரு சின்ன அடிகூட இல்லை. ஆனால், பைக்குக்கு வலது பக்கம் பயங்கர அடி! இதுவே, வேறு பைக்காக இருந்திருந்தால்... கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

அந்த விபத்துக்குப் பிறகு இரவு நேரங்களில் பைக்கில் சுற்றுவதைக் குறைத்துக்கொண்டேன். ஷூட்டிங் இல்லாத சமயங்களில் மைசூர், முதுமலை, ஊட்டி என எங்காவது மனைவியுடன் கிளம்பிவிடுவேன். ஆனால், எந்த முன் தயாரிப்புகளும் இல்லாமல் வழி தேடிச் செல்வதில்தான் 'கிக்’ கிடைக்கும். கடந்த வருடம் பைக்கில் ஹிமாச்சல் பிரதேசம் முழுக்கச் சுற்றிவிட்டு டெல்லி வரை பைக்கில் சென்றோம். எனக்கு பெங்களூருவில் இருந்து பைக்கிலே செல்ல வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், சினிமா கால்ஷீட் குழப்பாமல் இருக்க வேண்டுமே! அதனால், பைக்கை ரயிலில் போட்டு விட்டு, நாங்கள் விமானத்தில் சென்றுவிடுவோம். அடுத்த மாதம் லே டு லடாக் செல்லலாம் என திட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறோம்'' என மீசை முறுக்கி அழகாய்ச் சிரிக்கிறார் 'வீரப்பன்’ கிஷோர்!