டாடாவை விட்டுத் தனியாகப் பிரியும் ஃபியட், இரண்டு ஆண்டுகளில் புதிய கார்களைக் களம் இறக்கத் திட்டமிட்டு வருகிறது. நம் நாட்டில் இப்போது எம்பிவி கார்களுக்கான சீஸன். அதனால், ஃபியட் தனது முதல் எம்பிவி காரை அடுத்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது. இது, மாருதியின் எர்டிகா, நிஸான் எவாலியா ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

ரிட்ஸில் இருந்து எர்டிகா முளைத்தது போல, புன்ட்டோவில் இருந்து முளைக்கிறது ஃபியட் எம்பிவி. சமீபத்தில் இத்தாலியில் அறிமுகப்படுத்தப் பட்ட, இந்தப் படங்களில் இருக்கும் ஃபியட் 500-எல் கான்செப்ட் காரைப் போலவே, இந்த எம்பிவி காரை வடிவமைக்க இருக்கிறது ஃபியட். முன் பக்கம் பார்க்கும்போது சின்ன கார் போலத் தெரியும் இதில், ஏழு பேர் உட்காரலாம். மிரட்டலான தோற்றத்துடன் இல்லாமல் புன்ட்டோவைப் போலவே காரை அழகாகச் செதுக்கி இருக்கிறார்கள் ஃபியட் டிசைனர்கள். விண்ட் ஸ்கிரீன் பெரிதாக இருப்பதால், எம்பிவி காருக்கு உரிய பிரம்மாண்டமான தோற்றத்தையும் காண முடிகிறது.

பெரிய பில்லர்கள் இல்லாமல், சின்ன பில்லர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருப்பதால், சாலையை முழுமையாகப் பார்த்து ஓட்ட முடியும். ஃபியட், மாருதிக்குக் கடன் கொடுத்திருக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜினையே, இந்த எம்பிவி காரில் பொருத்த இருக்கிறது. இதன் சக்தி 90 தீலீஜீ இருக்கும் என எதிர்பார்க்கலாம். மல்ட்டிஜெட் இன்ஜினின் இன்ஜெக்ஷன், டர்போ சார்ஜிங் மற்றும் ஃபிரிக்ஷனில் சில மாற்றங்களைச் செய்ய இருக்கிறது ஃபியட்.

இந்தியத் தொழிற்சாலையில், இந்த காரை முழுவதுமாகத் தயாரிக்கத் திட்டமிட்டு இருக்கிறது ஃபியட். காரின் விலை 8 - 10 லட்ச ரூபாய்க்குள் இருக்கும்!