அம்பாஸடர், மாருதி ஆம்னி, மாருதி ஸ்விஃப்ட் டிசையர் ஆகிய கார்கள் வைத்திருந்தேன். தற்போது இதில் ஸ்விஃப்ட் டிசையர் மட்டுமே இருக்கிறது. ஹேட்ச்பேக் டீசல் கார் வாங்கலாம் என விசாரித்தபோது, மார்க்கெட்டில் ஏராளமான ஹேட்ச்பேக் கார்கள் இருப்பதைக் கண்டு மலைத்து விட்டேன். சில கார்களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்ததால், அதையெல்லாம் தவிர்த்துவிட்டு மற்ற கார்களை டெஸ்ட் டிரைவ் செய்ய ஷோ ரூம்களுக்குச் சென்றேன்.

ஃபோர்டு ஃபிகோ நன்றாக இருந்தது. ஆனால், பார்வைக்கு மிகவும் சின்ன காராகத் தோன்றியது. ஸ்கோடா ஃபேபியா அடக்கமாகவும், தரமாகவும் இருந்தது. இருந்தும் அந்த காரில் எனக்குத் திருப்தி அடைய ஸ்பெஷலாக ஏதும் இல்லை. டொயோட்டா எட்டியோஸ் லிவாவின் முன் பக்கத் தோற்றம் ஓகே! ஆனால், பின் பக்கம் ரசிக்கும் படி இல்லை. மேலும், காரின் இன்டீரியர் சுத்தமாகப் பிடிக்கவில்லை. நிஸான் மைக்ராவை ஓட்டிப் பார்த்தேன். மிக நன்றாகவும், ஓட்டுவதற்குச் சுலபமாகவும் இருந்தது. ஆனால், சர்வீஸ் செய்ய வேண்டுமென்றால் ஓசூரில் இருந்து கோவைக்குத்தான் செல்ல வேண்டும். அதனால், மைக்ரா திருப்திகரமாக இருந்தாலும் அவ்வளவு தூரம் அலைய வேண்டுமா எனத்

தோன்றியது. ஃபோக்ஸ்வாகன் போலோ காரை ஓட்டிப் பார்த்தேன். மிகவும் பிடித்து இருந்தது. போலோவா அல்லது மைக்ராவா என என் மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.

ஃபோக்ஸ்வாகனுக்கு சேலத்தில் ஷோ ரூம் இருக்கிறது. அங்கு சென்றிருந்தபோது, சேல்ஸ்மேன் மிகத் தெளிவாகப் எனக்கு புரியும்படி போலோவின் தொழில்நுட்பங்களை விளக்கினார். டெஸ்ட் டிரைவ் செய்தபோது, போலோவில் இருக்கும் சீட்டின் கச்சிதம் என்னை மயக்கிவிட்டது என்று சொல்லலாம். பிறகு, நண்பர்களிடம் விசாரித்தேன். போலோ கார் வைத்திருக்கும் நண்பர் ஒருவரிடமும் பேசினேன். அனைவருமே ஃபோக்ஸ்வாகனுக்கு நற்சான்றிதழ்தான் கொடுத்தார்கள். அதனால், இறுதியாக ஃபோக்ஸ்வாகன் போலோவை டிக் செய்தேன்.

காரை டெலிவரி எடுத்துக்கொண்டு சேலத்தில் இருந்து ஓசூர் புறப்பட்டபோது, 'ஏன் இந்த காரைத் தேர்ந்தெடுத்தோம். அவசரப்பட்டு விட்டோமோ?’ எனத் தோன்றியது நிஜம்! காரணம், ஆரம்ப வேகத்தில் இருந்த சுணக்கம் எனக்கு மிகவும் கவலையைத் தந்தது. அப்படியே ஒரு 10 கி.மீ தூரம் ஓட்டிய பிறகுதான் ஆக்ஸிலரேட்டரைப் பயன்படுத்தும் சூட்சுமம் பழகியது. அதன் பின் போலோ கார் படு லாகவமாகச் சென்றது. வேறு எந்த காரிலும் கிடைக்காத ஒரு ஸ்மூத் ஃபீல் கிடைத்தது. டெலிவரி எடுத்தபோது என்னுடனே கொஞ்ச தூரம் சேல்ஸ்மேன் வந்தார். என்னுடைய வருத்தத்தையும் பின்பு ஏற்பட்ட மகிழ்ச்சியையும் கூறினேன். அவர், 'நீங்கள் ஒரு மாதம் கழித்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்’ என்றார். அதன்படியே ஒரு மாதம் கழித்து அவருக்கு போன் செய்து, எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.

ஃபோக்ஸ்வாகன் போலோவுக்கு 15,000 கி.மீ-க்கு ஒரு முறை சர்வீஸ் செய்தால் போதுமானது. அதனால், காரை டெலிவரி எடுத்த பிறகு இன்னும் சர்வீஸுக்குப் போகவில்லை. ஆனால், டீலரிடம் இருந்து டச்சில் இருக்கிறார்கள். இது நல்ல விஷயம். புது கார் என்பதால், போலோவின் அதிகபட்ச வேகத்தை நான் இன்னும் ஓட்டிப் பார்க்கவில்லை. இதில், அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகம் வரை மட்டுமே சென்று இருக்கிறேன். குடும்பத்துடன் நால்வழிச் சாலையில் பயணிப்பது அற்புதமான அனுபவத்தையும், பாதுகாப்பான உணர்வையும் தருகிறது போலோ. மற்ற கார்களைக் காட்டிலும் இதன் இன்ஜின் சத்தம் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், வேகமாகச் செல்லும்போது, அது அவ்வளவாகக் கேட்கவில்லை. இந்த காரின் பலம் என்று சொன்னால், எவ்வளவு நேரம் காரில் சுற்றிவிட்டு வந்தாலும், களைப்பே தெரிவதில்லை. எந்த நேரமும் ஃப்ரெஷ்ஷாக இருப்பதுபோலவே இருக்கிறது.

டிரைவிங் சீட் அட்ஜஸ்ட்மென்ட் மிகவும் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறது. இருக்கைகளின் கச்சிதம்தான் என்னை இந்த காரை வாங்கவே தூண்டியது. போலோவில் இருக்கையில் அமர்ந்தால், மிகவும் கம்ஃபோர்ட் ஆக உணர்கிறேன். டேங்கில் இருக்கும் டீசல் இன்னும் எத்தனை கிலோ மீட்டருக்கு வரும் என்பதைக் காட்டும் டிஸ்ப்ளே நல்ல அம்சம். மேலும், கியர் மாற்ற மறந்தாலும் அதை உணர்த்தும் இண்டிகேஷன் டிஸ்ப்ளே இருக்கிறது. டிக்கியைத் திறக்க லோகோவிலேயே லாக் அமைத்திருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

காரின் குறை என்று சொன்னால், பின் பக்க விண்டோஸ் கண்ணாடிகளை முழுமையாக இறக்க முடியவில்லை. மற்றொன்று சென்டர் லாக் சிஸ்டம். சென்டர் லாக் செய்துவிட்டால், வெளியே இருந்துதான் யாரும் திறக்க முடியாதே தவிர, உள்ளே இருந்து திறக்க முடிகிறது. இது குழந்தைகளை காரில் ஏற்றிக்கொன்டு செல்லும்போது கொஞ்சம் கலக்கமாகவே இருக்கிறது. இதை மட்டும் சரி செய்து விட்டால் நிம்மதியாகப் பயணிக்கலாம்.

நான் வாங்கியபோது போலோ கம்போர்ட்லைன் வேரியன்டின் ஆன் ரோடு விலை 7.38 லட்சம். கொடுத்த பணத்துக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத கார். மைலேஜ் விஷயத்தில் மிகுந்த திருப்தியை அளிக்கிறது போலோ. நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 21 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. இதுவே நகருக்குள் என்றால், 16 கி.மீ வரை தருகிறது. எனவே, மைலேஜ் விஷயத்தில் மற்ற கார்களைக் காட்டிலும் போலோ கில்லிதான்!