அமெரிக்காவில் உள்ள 'அயன் பட் அசோஸியேஷன்’ வழங்கும் சாதனைச் சான்றிதழ் மீதான ஆர்வம், மோட்டார் விகடனின் அறிமுகத்தால் தமிழக இளைஞர்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தாளம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கதிர்வேலன். பைக் ஆர்வலரான இவர், கடந்த ஏப்ரல் மாதம், 24 மணி நேரத்தில் 1809 கி.மீ தூரம் பைக்கில் பயணம் செய்து 'அயன் பட்’ சாதனைச் சான்றிதழைக் கைப்பற்றி இருக்கிறார்.

அவரிடம் பேசினேன். ''ஆறாவது படிக்கும் போதே பைக் ஓட்டத் தெரியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், கல்லூரிக்குச் செல்லும் வரை வீட்டில் பைக் வாங்கித் தரவில்லை. கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதுதான் என் முதல் பைக்கான அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கை வாங்கினேன். நான் பைக் ரேஸர் ஆக வேண்டும் என்றுதான் சென்னைக்குப் படிக்க வந்தேன். ஆனால், ரேஸ் வீரன் ஆவதற்கு பணபலமும், ஸ்பான்ஸர்களும் இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்தபோது, அந்த ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.

ஒரு பைக்கராக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அப்போது அயன் பட் அசோசியேசன் பற்றி படித்தேன். அதன் சட்ட திட்டங்களை முழுமையாக அறிந்துகொண்டு, அதில், 'சேடில்ஸோர்’ பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். இந்தப் பிரிவில் 24 மணி நேரத்துக்குள் 1600 கி.மீ தூரத்தைக் கடக்க வேண்டும்.

கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு, அனந்தபூர், ஹைதராபாத் மீண்டும் வந்த வழியே பெங்களூரு திரும்பினால், 1600 கி.மீ தூரம் தாண்டிவிட முடியும்!

ஏப்ரல் ஏழாம் தேதி பயணத்தைத் தொடங்கலாம் என முடிவு செய்து, அதற்கு முன்பாக ஒரு ட்ரையல் பார்க்க, மார்ச் மாதவாக்கில் சேலத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சென்று திரும்பியபோது, சேலம் அருகே என் பைக் இன்ஜின் சீஸ் ஆகிவிட்டது. காரணம், சுமார் 900 கி.மீ தூரம் ஓய்வே கொடுக்காமல் பைக்கை ஓட்டியதுதான். அது மட்டுமல்லாமல், நான் பைக்கை வாங்கி ஏற்கெனவே 40,000 கி.மீ தூரம் வரை ஓட்டி இருந்தேன். தேதியை ஏற்கெனவே ஐபிஏ அமைப்புக்குத் தெரிவித்துவிட்டதால், தேதியை மாற்ற வேண்டாம் என முடிவு செய்து, பைக் இன்ஜினைத் தயார் செய்தேன். நான் பயணத்துக்காகச் சேமித்த பணத்தில் 15,000 ரூபாய் இதில் கரைந்து விட்டது.

பயணத்தின் நாளான ஏப்ரல் ஏழாம் தேதி காலை, சேலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு பைக்கிலேயே புறப்பட்டேன். காலையில் சேலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு பைக்கிலேயே சென்று, அங்கிருந்து பயணத்தைத் தொடங்கினேன். இரவு 9 மணிக்குத் துவங்கியது பயணம். என் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கி.மீ-தான். டூல்ஸ் கிட், ஆயில் என அனைத்தும் பக்காவாக பேக் செய்து எடுத்துச் சென்றேன். சேலம் நோக்கிப் புறப்பட்டேன். காலையில் இருந்தே பைக் ஓட்டுவதால், ஒரு மணி நேரமாவது ஓய்வெடுத்தால்தான் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பது புரிந்தது. நேராக சேலம் ஹைவேஸ் அருகே இருக்கும் என் கிராமத்து வீட்டுக்குச் சென்று தூங்கிவிட்டேன்.

இரண்டு மணி நேரம் கழித்துதான் எழுந்தேன். அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு பெங்களூரு நோக்கிப் புறப்பட்டேன். திட்டமிட்ட நேரத்தைவிட தாமதமாகி விட்டதால், பெங்களூரு நகரத்தில் நுழையும்போது அதிகாலை 5.30 மணி. போக்குவரத்து ஆரம்பமாகிவிட, நகரத்தைக் கடக்கவே ஒரு மணி நேரம் ஆனது.

ஆனாலும், அனந்தபூருக்கு 8.30 மணிக்குச் சென்று விட்டேன். அங்கு இன்ஜின் ஆயிலை மாற்றிவிட்டு ஹைதராபாத் நோக்கிப் புறப்பட்டேன். பகல் 1 மணிக்கு ஹைதராபாத் போய்ச் சேர்ந்தேன். மீண்டும் அனந்தபூர் வழியாக பெங்களூரு செல்ல வேண்டும். ஹைதரபாத்தை விட்டுப் புறப்பட்டு அனந்தபூர் வந்து கொண்டு இருந்தபோது, பலமான காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்யத் துவங்கி இருந்தது. பைக்கை நிறுத்தாமல் கொஞ்சம் மெதுவாக பயணத்தைத் தொடர்ந்தேன். அரைமணி நேரம் கழிந்ததும் மழையைக் கடந்து அனந்தபூர் சேர்ந்தபோது மணி மாலை 4.30.

பெங்களூருவில் ஐவிட்னஸ்க்காக அழைத்த நண்பர்களை ஓரிடத்தில் காத்திருக்கச் சொல்லி இருந்தேன். அதில் தவறு செய்திருந்தேன். ஏனெனில், பெங்களூரு நகருக்கு முன்பாக ஓரிடத்தில் இருக்க வைத்திருக்கலாம். ஆனால், நகருக்கு அப்பால் இருக்கும் ஓரிடத்தைத் தேர்வு செய்துவிட்டேன். மாலையில் பெங்களூரு நகரத்தில் போக்குவரது நெருக்கடி சொல்லத் தேவையில்லை. ஒரு வழியாக அதில் நீந்திச் சென்று இலக்கை நெருங்கியபோது... சைலன்ஸர் தனியாகக் கழன்று விழுந்தது. மிகவும் சிரமப்பட்டு அதை மீண்டும் பொருத்தி அந்த இடத்தை அடைந்தபோது மணி மாலை 7. ஐபிஏ அமைப்புக்கான விஷயங்களை எல்லாம் முடித்துவிட்டு, மீதி இருக்கும் 2 மணி நேரத்தை என்ன செய்யலாம் என யோசித்தேன்.

வெற்றிகரமாகப் பயணத்தை முடித்த திருப்தி இருந்தாலும், இத்துடன் தொடர்ந்து சேலம் வரை பயணித்தால் 2000 கி.மீ தூரத்தைக் கடந்த சாதனையைச் செய்துவிடலாம் என முடிவு செய்து, அப்படியே நண்பர்களுடன் சேலம் நோக்கி பயணத்தைத் தொடர்ந்தேன். ஆனால், துரதிருஷ்டவசமாக சேலத்துக்கு முன்பாகவே என் பைக்கின் பின் பக்க டயர் வெடித்து விட்டது. நான் கீழே விழுந்துவிடாமல் சமாளித்துவிட்டேன். அதனால், என் சாதனை தூரம் பெங்களூரு வரையான 1809 கி.மீ தூரத்துடன் நின்றுபோனது. ஆனால், அடுத்த முறை இதையும் தாண்டி சாதனை செய்வேன்!'' என்று த்ரில் குறையாமல் பேசி முடித்தார் பூங்கதிர்வேலன்.