பி.ஆரோக்கியவேல்

'பென்ஸின் சொகுசு, பிஎம்டபிள்யூவின் பர்ஃபாமென்ஸ்... இதுதான் கியாஷி’ - சற்று ஓவராக

. உணர்ச்சிவசப்பட்ட மாருதியின் இன்ஜினீயர், கியாஷி குறித்து வாசித்த பாராட்டுப் பத்திரம் இது. ஆனால், கியாஷியின் பிரஸ் மீட்டில் மாருதியின் அதிகாரிகளைச் சூழ்ந்துகொண்ட டெஸ்ட் டிரைவர்கள், ''மாருதி சுஸ¨கி என்ற பெயரை சின்ன மற்றும் ஹேட்ச்பேக் கார்களோடுதான் மக்கள் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படியிருக்க... ஹோண்டா அக்கார்டு, ஸ்கோடா சூப்பர்ப் போன்ற கார்களோடு போட்டி போடும் 20 லட்ச ரூபாய் காரை, வெற்றிகரமாக விற்பனை செய்ய முடியுமா?'' என்று வேறு வேறு வார்த்தைகளில் கேட்டுத் துளைத்தெடுத்தார்கள்..
ஸ்விஃப்ட் அல்லது எஸ்எக்ஸ்-4 காருக்குப் பிறகு, விலை உயர்ந்த கார்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் கைவிட்டுப் போவதைத் தடுக்கவும், தக்க வைத்துக் கொள்ளவுமே கியாஷியை இந்திய மார்க்கெட்டில் மாருதி அறிமுகப்படுத்துகிறது என்பதை, அவர்கள் பேசியதை வைத்துப் புரிந்து கொள்ள முடிந்தது.

தெருவுக்குத் தெரு அரண்மனைகள் போன்ற வீடுகளும், ஓட்டல்களும் நிறைந்திருக்கும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் டிரைடென்ட் ஓட்டலின் வாசலில், ஸ்போர்ட்டியான ராஜகுமாரன் மாதிரி காட்சியளித்தது கியாஷி. சுஸ¨கியின் டிரேட் மார்க் ஆன கிரில் துவங்கி, சுஸ¨கியின் பல அம்சங்களைக் கொண்டிருந்தது கியாஷி. இது போன்ற ஸ்போர்ட்டியான ஸ்டைலில் வேறு எந்த காரையும் சுஸ¨கி டிசைன் செய்ததில்லை. இதன் பிரம்மாண்டமான 17 இன்ச் வீல் இதற்கு மேலும் கம்பீரத்தைச் சேர்க்கிறது. ஹெட் லைட்ஸ் வெள்ளியால் ஆன ஆபரணத்தை நினைவுப்படுத்துகிறது. காரின் பின் பக்கம் பார்வையைத் திருப்பினால், அது வாட்டசாட்டமாகக் காட்சியளிக்கிறது. ஹோண்டா அக்கார்டு மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் ஆகியவற்றோடு ஒப்பிட்டால், கியாஷி ஒரு படி குறைவாகத்தான் காட்சியளிக்கிறது. காருக்குள் அடியெடுத்து வைத்தால், அந்த எண்ணம் மேலும் வலுப் பெறுகிறது. உண்மையைச் சொன்னால், கேபின் ஸ்பேஸை பொறுத்தவரை இது ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா மற்றும் பஸாத் அளவுக்குத்தான் இருக்கிறது. பின் சீட்டுகளில் காலை நீட்டி மடக்கி உட்காரும் அளவுக்குத் தாராளமாக இடம் கொடுத்திருக்கிறார்கள். ஜன்னல்களை இன்னும் கொஞ்சம் பெரிதாக வைத்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முன் சீட்டில் வந்து அமர்ந்தால், நவீனமாக இருக்கும் கியர் லீவர், சற்றே சரிவாக இருக்கும் சென்ட்ரல் கன்ஸோல் ஆகியவை இதற்கு ஸ்போர்ட்ஸ் காரின் தோற்றத்தைக் கொடுக்கின்றன. நாம் ஓட்டுகின்ற ஸ்டைல் படியே தொடர்ந்து ஓட்டினால், என்ன மைலேஜ் கொடுக்கும் என்பதைக் காட்டும் டிஜிட்டல் திரை பயனுள்ளதாக இருக்கிறது. இதில் இருக்கும் சில அம்சங்கள் எஸ்எக்ஸ்-4 மற்றும் ஸ்விஃப்ட்-ல் இருந்து இங்கே இடம் மாறியிருப்பது தெரிகிறது. அதனால் என்ன... டேஷ் போர்டு டிசைன் புத்தம் புதிதாகவும் ரசனைக்குஉரியதாகவும் இருக்கிறதே!

461 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி போதுமானதாகவே இருக்கிறது. இதில் புதுமையான அம்சம் என்னவென்றால், கிட்டார் போன்று மூக்கை நீட்டிக் கொண்டிருக்கும் பொருட்களைக்கூட இந்த காரின் டிக்கியில் வைக்க முடியும். நீட்டிக்கொண்டு இருக்கும் கிட்டாரில், மூக்குப் பகுதி மட்டும் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் இரண்டு பேருக்கும் இடையே உள்ளே வரும் அளவுக்கு, சீட்டுக்கும் டிக்கிக்கும் நடுவே ஒரு சின்ன கதவை ஏற்படுத்தி இருக்கிறார்கள். பின் சீட்டில் இருப்பவர்கள் டிக்கியில் இருக்கும் பொருட்களை உட்கார்ந்த இடத்திலிருந்தே எடுக்கவும் இது உதவும்.

கிராண்ட் விட்டாராவில் இருக்கும் அதே 2.4 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின்தான் இதிலும் இருக்கிறது. ஆனால், விட்டாராவைவிட இது அதிகமான சக்தியையும் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. அதாவது, இது 175 bhp சக்தியையும் 23.45 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. கியர் பாக்ஸைப் பொறுத்தவரை இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்திருக்கிறார்கள். 6 கியர்கள் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஒரு ஆப்ஷன். CVT இன்னொரு ஆப்ஷன். CVT வெர்ஷனில் கிளட்ச் பெடல் கிடையாது. அதனால், இங்கே இடது காலுக்கு வேலையே இல்லை. பிரேக், ஆக்ஸிலரேட்டர் என்று இரண்டு பெடல்களையும் மாறி மாறி மிதித்து ஓட்ட வேண்டும். கியரையும் மாற்றத் தேவையில்லை என்பதால், டிரைவருக்கு வேலையே இல்லாத மாதிரி கார் தானாகவே போகிறது. ஆனால், இன்ஜின் தேவைக்கு அதிகமாக உறுமுகிறது. ஆட்டோமேட்டிக் தேவையில்லை என்றால், இதை அப்படியே மேனுவல் 'மோட்’க்கு மாற்றிக்கொள்ள முடியும். நாம் மாற்றிக்கொண்டு ஓட்டிப் பார்த்தோம். கியர் லீவரைத் தொடாமல் ஸ்டீயரிங் வீலில் இருக்கும் சின்ன விசைகள் மூலமாகக்கூட கியரை மாற்றிக்கொள்ளும் வசதியைக் கொடுத்திருப்பது சுலபமாகவே இருந்தது.

உதய்பூரில் இருந்து மவுண்ட் அபுவுக்கு செல்லும் கிராண்ட் ரோடு, எல்லா விதமான டெஸ்ட்டுகளையும் செய்ய ஏற்றதாகவே இருக்கிறது. CVT வெர்ஷனை ஓட்டியது போதும்; மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட காரை ஓட்டிப் பார்க்கலாம் என்று அதற்குத் தாவினோம்.

CVT மாடலைவிட மேனுவல் ஓட்டுவதற்கு உற்சாகத்தைத் தூண்டுவதாக இருந்தது. இதிலும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி இருப்பதால், குறிப்பிட்ட வேகத்தில் செல்லும்போது க்ரூஸ் கன்ட்ரோல் பட்டனை அழுத்தினால்... என்ன வேகத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறோமோ, அதே வேகத்தில் ஆக்ஸிலரேட்டரை மிதிக்காமலேயே தொடர்ந்து பயணிக்க முடியும். இடையில் ஆக்ஸிலரேட்டரையோ, பிரேக்கையோ ஒரே ஒருமுறை மிதித்தாலும், குரூஸ் கன்ட்ரோல் கேன்சல் ஆகிவிடுகிறது. ஓட்டுதலைப் பொறுத்தவரை திருப்பங்களில் இது அற்புதமாக இருக்கிறது. சஸ்பென்ஷன் வேலை செய்வதே தெரியாமல் ஸ்மூத்தாக வேலை செய்கிறது. ஸ்டீயரிங் பக்காவாக இருக்கிறது. இதை சந்தேகமே இல்லாமல் 'டிரைவர்ஸ் கார்’ என்று சொல்லலாம்.

பர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை 'ஆஹா ஓஹோ’ என்று சொல்ல முடியாது என்றாலும், நன்றாகவே இருக்கிறது. இந்த காரை ஜப்பானிலிருந்து (CBU -COMPLETELY BUILT UNIT)சிபியூவாக அப்படியே இறக்குமதி செய்து, இங்கே விற்பனை செய்ய இருக்கிறது மாருதி. அதனால், இதன் விலை சர்வதேச சந்தையில் ஜப்பானிய கரன்சியான 'யென்’ சார்ந்தே இருக்கும். இப்போதைக்கு இதன் விலை 20 லட்ச ருபாயாக இருக்கும் என்று தெரிகிறது. கியாஷி என்றால், நல்ல சகுனம் என்று பொருளாம். மாருதிக்கு ஏற்கெனவே சுக்கிர திசைதான். இதில் நல்ல சகுனமும் சேர்ந்தால்... கொண்டாட்டம்தான்!