சார்லஸ்

கண்ணாமூச்சி விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார் ஃபெர்னாண்டோ அலான்சோ. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் துவங்கிய ஃபார்முலா-1 ரேஸில் இருந்து, ஜூன் 10-ம் தேதி கனடாவில் நடைபெற்ற ரேஸ் வரை, மொத்தம் ஏழு ரேஸ்களில் ஏழு வீரர்கள் மாறி மாறி வெற்றி பெற... யாருக்கும் சரியான லீட் கிடைக்கவில்லை. ஆனால், ஸ்பெயினில் கடந்த ஜூன் 24-ம் தேதி நடைபெற்ற ரேஸில், இந்த ஆண்டின் இரண்டாவது வெற்றியைப் பறித்து, எட்டாவது வீரருக்கு இடம் கொடுக்காமல் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் ஃபெர்னாண்டோ அலான்சோ. அவரைத் தொடர்ந்து, அடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெற்ற ரேஸில், மார்க் வெப்பர் 2012-ம் ஆண்டில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தார்.

ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா நகரில், ஜூலை 24-ம் தேதி ஃபார்முலா-1 ரேஸின் எட்டாவது சுற்று நடைபெற்றது. வேலன்சியாவில் நடக்கும் இந்த ரேஸ் போட்டியை, 'ஐரோப்பா ரேஸ்’ என்றுதான் அழைப்பார்கள். ஐரோப்பிய கண்டத்தில், 1923-ம் ஆண்டு இந்த மைதானத்தில்தான் முதல் கார் ரேஸ் நடைபெற்றது. அதன் நினைவாகத் தான் ஸ்பெயினில் நடந்தாலும், இந்த ரேஸுக்குப் பெயர் ஐரோப்பா ரேஸ்.

ஸ்பெயின் ரேஸுக்கு முந்தைய ஏழு ரேஸ்களிலும், வெவ்வேறு ரேஸ் வீரர்கள் வெற்றி பெற்று இருந்ததால், வேலன்சியா ரேஸுக்கு புக்கிகள் மத்தியில் சூதாட்டம் அமோகமாக நடந்தது. ரசிகர்கள் அனைவரும் சொந்த நாட்டு வீரரான ஃபெர்னாண்டோ அலான்சோவுக்குக் கொடி பிடிக்க... உற்சாகமாக இருந்தார் அலான்சோ. இருப்பினும், தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்து ரேஸை முதல் இடத்தில் இருந்து துவங்கியவர் செபாஸ்ட்டியன் வெட்டல். மெக்லாரன் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாவது இடத்தில் இருந்தும், வில்லியம்ஸ் ரெனோ அணியின் பாஸ்டர் மால்டொனால்டோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். சொந்த ஊர்க்காரரான ஃபெர்னாண்டோ அலான்சோ, 11-வது இடத்தில் இருந்தும், முன்னாள் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் 12-வது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினர். முதல் சுற்றின் முடிவிலேயே 11-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய அலான்சோ, ஏழாவது இடத்துக்கு முன்னேறினார்.

பதிமூன்றாவது லேப்பின்போது, வெட்டலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சென்று கொண்டு இருந்த லூயிஸ் ஹாமில்ட்டனை முந்தினார் ரொமெய்ன் கிராஸின். இதற்கிடையே, யாரும் எதிர்பாராத வகையில் ஜெட்டாகப் பறந்தது மைக்கேல் ஷூமேக்கரின் கார். 16-வது லேப்பின்போது ஆறாவது இடத்துக்கு முன்னேறினார் ஷூமேக்கர். மார்க் வெப்பர், அலான்சோ, கிமி ராய்க்கோனன் என முன்னணி வீரர்கள் அனைவருமே ஃபுல் ஃபார்மில் இருந்ததால், யாருக்கு வெற்றி என டென்ஷன் கூடியது. 33-வது லேப்பின்போது முதல் இடத்தில் இருந்த வெட்டலை முந்தினார் ஃபெராரியின் அலான்சோ. என்ன நடந்தது என்றே யூகிக்க முடியாத வகையில், வேகத்தைக் குறைத்து விட்டு ரேஸ் டிராக்கின் ஓரத்துக்கு வந்துவிட்டார் செபாஸ்ட்டியன் வெட்டல். ரெனோ காருக்குள் இருந்த ஆல்ட்டர்னேட்டர் ஓவர்ஹீட் ஆனதுதான் செபாஸ்ட்டியன் வெட்டலின் வேகக் குறைவுக்குக் காரணம். இன்ஜின் அடைத்துக் கொண்டு நிற்க, ரேஸைவிட்டு பாதியிலேயே வெளியேறினார் வெட்டல். அவரைத் தொடர்ந்து, அலான்சோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்த லோட்டஸ் ரெனோ அணியின் ரொமெய்ன் கிராஸினின் காரும் இதே ஆல்டர்னேட்டர் பிரச்னையால் ரேஸில் இருந்து வெளியேறியது.

இதற்கிடையே, அலான்சோவை ஹாமில்ட்டன் துரத்த... ஹாமில்ட்டனை ராய்க்கோனன் துரத்த - முன்னாள் சாம்பியன்கள் ஒருவரை ஒருவர் துரத்தியதால், ரேஸ் டிராக்கில் அனல் பறந்தது. ரேஸ் முடிய ஐந்து லேப்புகளே இருந்த நிலையில், ஏழாவது இடத்துக்கு முன்னேறினார் முன்னாள் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர். அதேசமயம், இரண்டாவது இடத்துக்கு முந்த தருணம் பார்த்துக்கொண்டே இருந்த ராய்க்கோனன், அது பல லேப்புகளாக நிறைவேறாமல் போன கடுப்பில் 55-வது லேப்பின்போது குறுகிய வளைவில் ஹாமில்ட்டனின் கார் மீது மோதினார். இதில் நிலைகுலைந்த ஹாமில்ட்டனின் கார் தடுப்புச் சுவரில் மோதியது. இதற்குள், பின்னால் வந்த மால்டொனால்டோவின் காரும் ஹாமில்ட்டன் கார் மீது மோத... ரேஸில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஹாமில்ட்டன். இந்தச் சம்பவத்தால் கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற ஹாமில்ட்டன், காரின் ஸ்டீயரிங்கைப் பிடுங்கி வெளியே வீசினார்.

இதற்கிடையே, ஏழாவது இடத்தில் இருந்து விறுவிறுவென முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்தார் மைக்கேல் ஷூமேக்கர். கடைசி லேப்பில் அனல் தெறிக்க ஃபெர்னாண்டோ அலான்சோவைத் துரத்திக் கொண்டு இருந்தார் கிமி ராய்க்கோனன். இறுதியில் அலான்சோ வெற்றி பெற்று, இந்த ஆண்டில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தார் அலான்சோ. சொந்த நாட்டு வீரர் ஜெயித்ததால் ஸ்பெயின் ரசிகர்கள் செம உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். ஸ்பானிஷ் தேசியக் கொடியை களத்தில் விரித்துவைத்து வெற்றியைக் கொண்டாடினார் அலான்சோ. 11-வது இடத்தில் துவங்கி முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றது அவரை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியது.

மூன்று ஆண்டுகள் ஓய்வுக்குப் பின் ஃபார்முலா-1 ரேஸுக்குத் திரும்பிய முன்னாள் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர், மூன்றாம் இடம் பிடித்து போடியம் ஏறியது அவருடைய ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. ரேஸுக்குத் திரும்பி கடந்த இரண்டு ஆண்டுகளாக 'கைப்புள்ள’ கணக்காக அடி வாங்கிக்கொண்டு இருந்த மைக்கேல் ஷூமேக்கருக்கு இந்த வெற்றி மிகப் பெரிய பூஸ்ட்ட்டாக அமைந்தது. 43 வயதில் உலகின் உச்சபட்ச ரேஸில் இளம் வீரர்களுடன் மோதி மூன்றாவது இடம் பிடிக்க முடிகிறது என்றால், அது சாதாரண விஷயமா என்ன?

இங்கிலாந்து

ஃபார்முலா-1 ரேஸின் ஒன்பதாவது சுற்று இங்கிலாந்தின் சில்வர் ஸ்டோன் ரேஸ் டிராக்கில் ஜூலை 8-ம் தேதி நடைபெற்றது. கிரிக்கெட்டுக்கு லண்டன் லார்ட்ஸ் என்பது போல, ஃபார்முலா-1 ரேஸுக்கு சில்வர் ஸ்டோன்தான் தலைமையகம். ஃபார்முலா-1 ரேஸில் மோதும் ஏழு அணிகள் சில்வர் ஸ்டோனைத் தான் தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகின்றன.

சில்வர் ஸ்டோன் மைதானத்தில் மழை பெய்துகொண்டு இருந்ததால், மழை ரேஸாகவே துவங்கியது ஒன்பதாவது சுற்று. முந்தைய ரேஸில் வெற்றி பெற்ற ஃபெர்னாண்டோ அலான்சோ, தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்து ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கினார். ரெட்புல் அணியின் மார்க் வெப்பர் இரண்டாவது இடத்தில் இருந்தும், மைக்கேல் ஷூமேக்கர் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினர்.

ஆரம்பத்தில் இருந்தே அலான்சோவுக்கும், மார்க் வெப்பருக்கும் இடையே யுத்தம் கடுமையாக இருந்தது. முதல் வளைவில் இருந்தே அலான்சோவை வீழ்த்த கடுமையாகக் போராடினார் மார்க் வெப்பர். இதற்கிடையே, மூன்றாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ஷூமேக்கரால் தொடர்ந்து வேக யுத்தத்தில் இறங்க முடியவில்லை. மொத்தம் 52 லேப்புகள் கொண்ட இங்கிலாந்து ரேஸின் ஆரம்பத்தில் இருந்தே, அதிரடி நாயகனாக இருந்த அலான்சோவை ரேஸ் முடிய நான்கு லேப்புகளே இருந்த நிலையில் முந்தினார் மார்க் வெப்பர். இறுதியில், மூன்று விநாடிகள் வித்தியாசத்தில் அலான்சோவை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி வெற்றி பெற்றார் மார்க் வெப்பர். ரெட்புல் அணியின் மற்றொரு வீரரான செபாஸ்ட்டியன் வெட்டல் மூன்றாம் இடத்தையும், மூன்றாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய மைக்கேல் ஷூமேக்கர் ஏழாவது இடத்தையும் பிடித்தனர். இந்தியாவின் நரேன் கார்த்திகேயன் கடைசி இடமான 21-வது இடத்தில் ரேஸை முடித்தார்.

மொத்தம் ஒன்பது சுற்றுகள் முடிவடைந்து இருக்கும் நிலையில், சாம்பியன்ஷிப் பட்டியலில் ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ 129 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், மார்க் வெப்பர் 116 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், செபாஸ்ட்டியன் வெட்டல் 100 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அலான்சோ சாம்பியன் பட்டம் வெல்வாரா அல்லது ரெட்புல் அணியின் வெப்பர், வெட்டல் ஜோடி அலான்சோவின் கனவை சிதைக்குமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்!