ரெயின் சீஸன் கை விட்டாலும் விடலாம். ஆனால், ரேஸ் சீஸன் கோவையைக் கைவிடாது. சின்ன இடைவெளிக்குப் பிறகு, கோவை கரி மோட்டார் ஸ்பீடுவேயில் துவங்கிவிட்டது ஜே.கே டயர்ஸ் நடத்தும் 16-வது நேஷனல் பைக் ரேஸ் சீஸன். இந்த ஆண்டுக்கான முதல் இரண்டு சுற்றுகள் கோவையிலும், அடுத்த நான்கு சுற்றுகள் சென்னையிலும் நடத்தப்படுகின்றன. கடந்த ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில் கோவையில் நடத்தப்பட்ட முதல் சுற்றில் தீப்பொறி பறந்தது.

முதல் நாளான சனிக்கிழமை இந்தியன் டூரிங் கார்ஸ், இந்தியன் ஜூனியர் டூரிங் கார்ஸ், போலோ கார்ஸ் என மூன்று பிரிவுகளுக்கான தகுதிச் சுற்றுகள் நடந்தன. மும்பை, கோவா, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த 20 ரேஸர்கள் கலந்து கொண்டனர். இது தவிர, மெக்ஸிகோ வீரர் டியாகோ டியூஸையும் சேர்த்து சர்வதேச ரேஸாக நடத்தியது ஃபோக்ஸ்வாகன். இந்தியன் டூரிங் கார்ஸ் மற்றும்

இந்தியன் ஜூனியர் டூரிங் கார்ஸ் ஆகிய பிரிவுகளில் சென்னை, கோவை, திருச்சூர், ஊட்டி என இரண்டாம் நிலை பகுதிகளைச் சேர்ந்த வீரர்களும் கலந்துகொண்டனர். பல அணிகளைச் சேர்ந்த மொத்தம் 64 வீரர்கள் இந்த தகுதிச் சுற்றுகளில் கலந்துகொண்டு ஸ்பீடுவேயில் செம ஸ்பீடு காட்டினர்.

தகுதிச் சுற்றில் தேர்வானவர்களின் கார்கள், மறுநாள் நடந்த இறுதி போட்டிக்காக ஆக்ஸிலரேட்டரில் ஆரவாரம் காட்டிக்கொண்டு இருந்தன. இந்தியன் டூரிங் கார்ஸ் ரேஸில்தான் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள். தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்களுமே வெவ்வேறு காரணங்களால் ரேஸில் இருந்து வெளியேறினர். ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கிய ரேஸ் டியூனரும், ரேஸருமான ராதா செல்வராஜ், காரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரேஸில் இருந்து வெளியேறினார். மொத்தம் 15 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில், 10 லேப் வரை முன்னணியில் இருந்த பிரைம் ரேஸிங் ராஜ்விர்தனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரேஸில் இருந்து வெளியேறினார். இதனால், சென்னையின் சிவராம கிருஷ்ணனுக்கு அடித்தது யோகம். 19 நிமிடங்கள் 30 விநாடிகளில் பந்தயக் கோட்டைத் தொட்டு முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார் சிவராம கிருஷ்ணன். ராஜாராம் இரண்டாவது இடத்தையும், சித்தார்த் கிஷோர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ஆனால், டெக்னிக்கல் விதிமுறைகளின்படி சித்தார்த் கிஷோரின் எடை குறிப்பிட்ட அளவைவிடக் குறைவாக இருந்ததால், அவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், நான்காவது இடம் பிடித்த மோட்டோ ரெவ் அணியின் பாலவிஜய் மூன்றாம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

டூரிங் கார்ஸின் இரண்டாவது போட்டியில் ரேஸ் துவங்கிய சில நிமிடங்களில் எதிர்பாராத விதமாக ஐந்து கார்கள் ஓன்றோடு ஒன்று முட்டி மோதிக்கொள்ள... ரேஸ் டிராக்கில் டென்ஷன் உருவானது. டெல்லி வீரர் மத்தாய், ஐந்து சுற்றுகளைக் கடந்த போது கார் டயர் வெடித்ததால், நகர்ந்து கொண்டார். சென்னை வீரர் ராதா செல்வராஜ், எட்டாவது சுற்றைக் கடந்தபோது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் டிராக்கிலிருந்து விலகினார். போட்டியாளர்கள் குறைந்தாலும் போட்டியின் வேகம் தீப்பிடித்து எரிந்தது. சக வீரர்களை வேகத்தில் அடித்துத் துவைத்து பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார் பிரைம் ரேஸிங் அணியின் விஜயகுமார். இரண்டாம் இடத்தை மோட்டோ ரெவ் அணியின் உரிமையாளர் பாலவிஜய் பிடிக்க, பெங்களூருவின் லீலா கிருஷ்ணன் மூன்றாம் இடம் பிடித்தார். இரண்டு ரேஸ்களிலும் வெவ்வேறு ரேஸ் வீரர்கள் வெற்றி பெற, இரண்டு ரேஸ்களிலும் மூன்றாவது மற்றும் இரண்டாவது இடம் பிடித்த பாலவிஜய், 33 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

ஜூனியர் டூரிங் கார்ஸ் ரேஸ் போட்டியின் முதல் சுற்றில் டீம் கேம் ஓவர் அணியின் ஃபஹாத் குட்டி வெற்றி பெற்றார். ஃபெரோஸ் கான் இரண்டாவது இடத்தையும், தில்ஜித் மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். இரண்டாவது சுற்றில் மும்பையைச் சேர்ந்த ஃபகாத் குட்டி முதல் இடத்தைத் தட்டினார். இவருக்கும் இவரைப் பின்தொடர்ந்த சென்னையின் ஃபெரோஸ்கானுக்கும் சில சுற்றுகளில் மைக்ரோ விநாடிகளில், 'நீ முன்னே, நான் முன்னே’ என நடந்த போட்டி செம த்ரில்.

ஃபோக்ஸ்வேகன் போலோ-ஆர் கப் ரேஸின் முதல் சுற்றில் அவ்டுமர் ஹெடே வெற்றி பெற்றார். மிஹிர் தர்க்கர் இரண்டாம் இடத்தையும், சந்தீப் குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இரண்டாவது ரேஸில் சர்வதேச ரேஸ் வீரரான மெக்ஸிகோவின் டியாகோ டியூஸின் கார் மின்னல் வேகத்தில் பறந்து முதல் இடம் பிடித்தது. பெண் ரேஸ் வீராங்கனையான அலீஷா அப்துல்லா இரண்டாம் இடம் பிடிக்க, பிரஷாந்த் தரணி சிங் மூன்றாம் இடம் பிடித்தார்.

ரேஸர்களின் வேகம் செம ஜிலீர் என்றால், அவ்வப்போது நடந்த முட்டல்களும், மோதல்களும் ரசிகர்களுக்கு த்ரில் அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டே தான் இருந்தன. இந்தியன் டூரிங் கார்ஸ் தகுதிச் சுற்றின்போது, இரண்டு கார்களின் இடது பக்க முன் கதவுகள் திறந்து கொண்டன. காற்று வீசும் திசையில் கார் பயணிக்கும் போதெல்லாம், கதவுகள் திறந்து மேலேறி தூக்கிக்கொண்ட நிலையில், கார்கள் பேய் வேகத்தில் பறந்தது பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவம்!

எதற்காக சர்வதேச ரேஸ் வீரர்?

இந்திய தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், டியாகோ டியூஸ் எனும் சர்வதேச வீரர் எதற்காக ஓட்டுகிறார் என்ற கேள்விதான் ரேஸைக் காண வந்தவர்கள் எல்லோர் மனதிலும் எழுந்தது. போலோ கப் போட்டியில் இந்திய வீரர்களுக்கு இடையேயான வேகத்தை அதிகரிக்கவே டியாகோவைக் கொண்டு வந்து இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இவர் வெற்றி பெற்றாலும் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டியில் இவர் இருக்கமாட்டார். இவருக்கு அடுத்த இடங்களைப் பிடிப்பவர்களே சாம்பியன்ஷிப் புள்ளிகளில் வெற்றி பெற்றவர்களாக கணக்கிடப் படுவார்கள். சர்வதேச ரேஸ் வீரருடன் பயிற்சி எடுக்க வேண்டும் என்பதற்காகவே டியோகோவைக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார், ஜே.கே டயர்ஸின் ரேஸிங் பிரிவுத் தலைவர் சஞ்சய் ஷர்மா.