'குறைந்த விலை; அதிக மைலேஜ்; கூடுதல் சிறப்பம்சங்கள்; அசத்தல் தோற்றம் என சாதகமான அம்சங்களுடன் டஸ்ட்டரைக் களம் இறக்கி இருக்கிறோம்’ என்கிறது ரெனோ. இது உண்மையா?

இயற்கை எழுப்பிய பல்லுயிர் பாதுகாப்பு அரண் எனக் கொண்டாடப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை. இதில், கண் வீசும் தூரம் எங்கும் பச்சைக் கம்பளி விரித்துக் கிடக்கும் தேயிலைச் செடிகள் மீது ஆவி பறக்க... குன்றுகளின் விளிம்பெல்லாம் நீர் ஊற்றெடுத்து வழிந்து சிற்றோடையாக சாலையோரம் சலசலத்து நெளிய... மஞ்சுக் கூட்டங்கள் மிதக்கும் மூணாறில் டஸ்ட்டரை டெஸ்ட் டிரைவ் செய்தேன்.

காலை எட்டு மணி. மூணாறில் இருந்து போடி மெட்டு செல்லும் சாலையில் 14 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது கிளப் மஹிந்திரா ரிஸார்ட். அங்கே காத்திருந்தது ரெனோ டஸ்ட்டர். வெட வெடக்கும் குளிரில் டஸ்ட்டரை ஸ்டார்ட் செய்தேன். சின்ன அதிர்வுடன் ஆரம்பித்து சட்டென்று அடங்கி சாந்தமாக இயங்கத் தொடங்கியது இன்ஜின்.

டஸ்ட்டரில் 1.6 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் ஆகிய இரண்டு இன்ஜின்கள் உண்டு. அதேபோல், டீசல் இன்ஜினில் 85 bhp சக்திகொண்டது ஒன்றும், 110 bhp கொண்டதும் உள்ளன. மூணாறில் நான் டெஸ்ட் டிரைவ் செய்தது 110 bhp சக்திகொண்ட டீசல் இன்ஜின். டஸ்ட்டர் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி என்பதால், மலைப் பகுதியில் இதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இது நல்ல வாய்ப்பு.

மோனோ காக் பாடியில் உருவான டஸ்ட்டரின் கம்பீரமான தோற்றத்துக்கு, வீல் ஆர்ச்சுகளின் பங்கே பிரதானம். இவ்வளவு சின்ன காருக்கு இதன் டயர்களும், வீல் ஆர்ச்சுகளும்தான் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொடுக்கின்றன. அதேபோல், ரூஃப் ரெய்லின் ஸ்டைலிலும் அழகாகப் பொருந்தி இருப்பதால், டஸ்ட்டரை காம்பேக்ட் எஸ்யூவி என சொல்ல முடியவில்லை. குரோம் பூசப்பட்ட கிரில்லின் மூன்று பட்டைகளின் நடுவே பொருந்தி இருக்கும் ரெனோவின் லோகோ, சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். காரின் உள்பக்கம் மட்டுமல்லாமல், காரின் வெளிப்பக்கமும் ட்யூயல் டோன் கான்செப்ட்தான். முன் - பின் பம்பர், பக்கவாட்டுக் கண்ணாடிகள், ஸ்கர்ட் என இந்த கான்செப்ட் எந்தவிதத்திலும் உறுத்தல் இல்லாமல் காரை மேலும் அழகாக மாற்றி இருக்கின்றன. காரின் பக்கவாட்டில் தென்படும் கிரீஸ், காரை புஷ்டியாகக் காட்ட முயற்சிக்கிறது. காரின் பின் பக்கக் கதவில் 'டஸ்ட்டர்’ என்று எழுதப்பட்ட அகலமான குரோம் பட்டை பளிச்செனக் கவர்கிறது. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் டெயில் லைட் மற்றும் அதை ஒட்டிய டிசைன் தனித்துவம் கொண்டவை. ஆனால், காரைப் பின் பக்கமாகப் பார்க்கும்போது, ஒரு ஹேட்ச்பேக் காருக்கான தோற்றத்தையே தருகிறது டஸ்ட்டர். இதன் வீல் ஆர்ச்சுகள்தான் இந்த இடத்திலும் காரைக் காப்பாற்றுகிறது.

காருக்குள் நுழைந்ததும் நம்மை முதலில் ஈர்ப்பது, அலங்காரம் ஏதும் அற்ற டேஷ் போர்டுதான். இதுவும் ட்யூயல் டோன் கான்செப்ட்தான் என்றாலும், பிளாஸ்டிக்கின் தரம் முகம் சுளிக்க வைக்கிறது. ஆனால், இன்டீரியர் ஓகே ரகம். டேஷ் போர்டு மற்றும் க்ளோவ் பாக்ஸ் வடிவமைப்பு பேப்பர்கள், புத்தகங்கள் வைத்துக் கொள்ள வசதியாகவே இருக்கிறது. ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்ட பேனல் தட்டையாகவும், மிக சிம்பிளாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஏராளமான பட்டன்கள் இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது. அதேசமயம், ஏ.சி திருகுகள், சுவிட்சுகள் பயன்படுத்த வசதியாகவும் கைக்கெட்டும் தூரத்திலும் உள்ளன. சீட் பெல்ட் எச்சரிக்கை விளக்கு இந்த பேனலிலேயே இருக்கிறது. டிரைவர் இருக்கையை எட்டுவிதமாக அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும். அதனால், உயரமானவர்களும் சரி, உயரம் குறைந்தவர்களும் சரி - கவலைப்பட வேண்டியது இல்லை. மேலும், சீட் பொசிஷன் மிக உயரமாக இருப்பதால், சாலையை முழுமையாகப் பார்க்க முடிகிறது. ஆனால், வளைவுகளில் காருக்குள் இருக்கும் ரியர் வியூ மிரர் சில நேரங்கள் பார்வையை மறைத்து பீதியூட்டுகிறது. பக்கவாட்டுக் கண்ணாடிகளை அட்ஜஸ்ட் செய்யும் சுவிட்ச், கியர் லீவருக்கும் ஹேண்ட் பிரேக்குக்கும் நடுவே இருப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. அதேபோல், ஆடியோ கன்ட்ரோல் பட்டன்கள் ஸ்டீயரிங் வீலுக்குக் கீழே இருப்பதைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

வழக்கமான கார்களில் இருப்பதுபோல அல்லாமல், ஸ்டீயரிங் வீலின் இடது புறம்தான் இண்டிகேட்டர் சுவிட்ச் இருக்கிறது. வலதுபுறம் வைப்பர் சுவிட்ச். ஸ்பீடோ மீட்டரும், ஆர்பிஎம் மீட்டரும் அனலாக் மீட்டர்கள். ஓடோ, ட்ரிப், ஃப்யூல், வெப்ப அளவைக் காட்டும் மீட்டர்கள் டிஜிட்டலில் ஒளிர்கின்றன. பெடல்கள் சரியான பொசிஷனில் இருக்கின்றன.

கதவுகளில் உள்ள ஆர்ம் ரெஸ்ட் உடன் இணைந்த கைப்பிடிகள், வசதியாகவும் தரமாகவும் இருக்கின்றன. ஆனால், டோர் பாக்கெட்டில் 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலை வைக்க முடியாது. கதவை மிக தாராளமாகத் திறக்க முடிவதால், காருக்குள் சுலபமாகப் போய்வர முடிகிறது. பின் பக்க இருக்கைகளில் சொகுசாக இரண்டு பேர் உட்காரலாம். முட்டி இடிக்காமல் தேவையான இட வசதியுடன் இருக்கிறது பின்னிருக்கை. ஆனால், இதில் மூவர் அமர்ந்தால், நடுவே அமர்பவருக்கு பின் பக்க ஏ.சி இடைஞ்சலாக இருக்கிறது. இந்த ஏ.சியை ஆன் செய்தால், சத்தம் இரைகிறது. டஸ்ட்டருக்கு டிக்கி மிகப் பெரிய ப்ளஸ். இட வசதி தாராளம்.

110 bhp இன்ஜின்கொண்ட மாடலில் இருப்பது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ். கியர்களை உடனுக்குடன் மாற்றுவதுபோல நெருக்கமாக வடிவமைத்து இருப்பதால் சுலபமாக இருக்கிறது. ஆனால், மலைச் சாலையில் ஆறு கியர்களையும் மாற்றித் தீர்க்க முடியவில்லை என்பதுதான் எதார்த்தம். ரிவர்ஸ் கியர் மாற்ற, லீவரை சற்று மேலே தூக்கி இடது பக்க கடைசிக்குத் தள்ளி மாற்ற வேண்டும். இப்படி மாற்ற, காரை ஓட்டுவதற்கு முன் பயிற்சி எடுப்பது நல்லது. அதேபோல், ரிவர்ஸ் எடுக்க உதவும் சென்ஸார் உண்டு. ஆனால், ஒலி மட்டுமே!

ஆர்பிஎம் மீட்டரில் முள் இரண்டாயிரத்தைக் கடக்கும் போது பலம்கொண்ட யானை போல மாறுகிறது டஸ்ட்டர். தடாலென காரின் வேகம் தணித்து, கியரைக் குறைத்து வளைத்து மேடேறினால், 2000 ஆர்பிஎம்-க்குக் கீழே முள் இறங்கிவிட்டால்... பம்முகிறது டஸ்ட்டர். மலைச் சாலையில் அதிகமாகவே இந்த டர்போ லேக்கை உணர முடிகிறது. இதுவே, சீராக 2000 ஆர்பிஎம் மெயின்டெயின் செய்து, ஆக்ஸிலரேட்டரை அழுத்தினால், எந்த ஜெர்க்கும் இல்லாமல் கச்சிதமாகச் செல்கிறது. உடனுக்குடன் கியர் மாற்றுவது போல செட்டிங் இருப்பதால், மிகச் சுலபமாக இதைச் செய்ய முடிகிறது. அதிகபட்சமாக 80 கி.மீ வேகம் வரை மட்டுமே மலைச் சாலையில் செல்ல முடிந்தது. அதனால், டஸ்ட்டரின் அதிகபட்ச வேகத்தை இங்கு சோதிக்க முடியவில்லை.

கிளப் மஹிந்திரா ரிஸார்ட்டில் இருந்து மூணாறு நகரம் வரையும், தமிழக எல்லையான போடிமெட்டு வரையும் ஏற்ற இறக்கங்கள், வளைவு நெளிவுகள் ஏராளம். இதில், பலமுறை மேலும் கீழுமாகப் பயணித்து இன்ஜினின் சாதக பாதகங்களை அலசினேன். மலைப் பாதைகளில் போதுமான சக்தியுடன் காரைச் செலுத்த 2000 ஆர்பிஎம் வரை ஆக்ஸிலரேஷனைப் பராமரிப்பது அவசியம். அதை, டஸ்டரின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் செட்டிங் சாத்தியமாக்குகிறது. அதேபோல், பிரேக்கின் செயல்பாடும் திருப்திகரமாக இருக்கிறது. அன்றைய தினம் மட்டும் மாலை ஆறு மணி வரை மொத்தம் 150 கி.மீ தூரம் டஸ்ட்டரை ஓட்டிப் பார்த்தேன். உயரமான காரில், பாதுகாப்பாக அமர்ந்திருப்பது போன்ற உணர்வைத் தருவதில் டஸ்ட்டர் குறை வைக்கவில்லை.

பாதுகாப்பு விஷயங்களில் அதிக கவனம் எடுத்திருக்கிறது ரெனோ. ஏபிஎஸ், இபிடி, இரண்டு காற்றுப் பைகள் என சிறப்பம்சங்களின் பட்டியல் நீளம். ஸ்டீயரிங், பிடித்து ஓட்டுவதற்கு பாதுகாப்பான உணர்வைத் தருவதுடன் துல்லியமாகவும் செயல்படுகிறது. ஆனால், ஸ்டீயரிங் வீல்-ஐ இன்னும் கொஞ்சம் கிரிப் கிடைப்பதுபோல வடிவமைத்திருக்கலாம். சில சமயங்களில் கிரிப் கிடைக்காமல் வழுக்குகிறது. காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 205 மிமீ என்பதால், ஸ்பீடு பிரேக்கர், மேடு பள்ளங்களில் பயணிப்பதில் பிரச்னை இல்லை. ரெனோ டஸ்ட்டரின் சிறப்பான விஷயங்களில் ஒன்றாக, இதன் சஸ்பென்ஷனைச் சொல்ல வேண்டும். இதன் தரமான சஸ்பென்ஷன்கள் காருக்குள் அலுங்கல் குலுங்கல்களை இல்லாமல் ஆக்குகிறது. சமமற்ற மலைச் சாலைகளிலும், மேடு பள்ளங்களிலும் மிகச் சிறப்பான பயண அனுபவத்தைத் தந்தது டஸ்ட்டரின் சஸ்பென்ஷன்.

அடுத்த நாள் காலை, கிளப் மஹிந்திராவில் இருந்து கோவை நோக்கி டஸ்ட்டரைச் செலுத்தினேன். மூணாறு டு கோவை சுமார் 185 கி.மீ தூரம். இதில் பாதி தூரம் மலையில் இருந்து கீழ் நோக்கி இறங்கும் குறுகலான சாலை. மறையூர் தாண்டி தரையில் இருக்கும் உடுமலைப் பேட்டை வந்ததும் தேசிய நெடுஞ்சாலையில் கோவை நோக்கி விரட்டினேன். இருவழிச் சாலையான இதில் போக்குவரத்து அதிகம். 100 கி.மீ வேகம் வரை எந்த அதிர்வும் ஆட்டமும் இல்லாமல் மிகச் சீராகச் சென்றது டஸ்ட்டர். ஆனால், 100 கி.மீ வேகம் கடந்ததும் இன்ஜின் சத்தம் காருக்குள் வருகிறது.

1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட 110 bhp மாடல், லிட்டருக்கு 19.01 கி.மீ மைலேஜ் தரும் என்று சொல்கிறது ரெனோ. ஆனால், இந்த மைலேஜ் சாத்தியமில்லை. அதேசமயம், மிகக் குறைவாகக் கொடுக்கவும் வாய்ப்பு இல்லை. இதன் மைலேஜ் டெஸ்ட் முழுமையாகச் செய்யாததால் அந்த விபரங்கள் தர முடியவில்லை. 'குறைந்த விலைக்கு சர்வதேச தரத்திலான காரை சிறப்பம்சங்களுடன் தருவதால், டஸ்ட்டர் அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும். அதேபோல் எஸ்யூவி, செடான், ஹேட்ச்பேக் வாடிக்கையாளர்களையும் இந்த கார் கவரும்’ என்கிறது ரெனோ. ஆம், அது உண்மைதான். ஆனால், டஸ்ட்டரின் விலை குறைந்த வேரியன்ட் 8.50 லட்சத்தில் இருந்து டாப் வேரியன்ட்டின் ஆன் ரோடு விலை 13.70 லட்சம் ஆகிறது. இந்த காரில் அதிகபட்சம் ஐந்து பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், நம் ஊரில் எஸ்யூவி என்றாலே அதிகபட்சம் எத்தனை பேர் பயணிக்க முடியும்? என்று கேட்பவர்களுக்கு இது ஏமாற்றமாகத்தான் இருக்கும். காரணம், இதே விலைக்கு ஏழு பேர் பயணிக்கக் கூடிய எஸ்யூவி, மார்க்கெட்டில் கிடைப்பதுதான்!

ஆனால், எஸ்யூவி காரை விரும்பும் சாகசப் பிரியர்களுக்கு, இந்த காம்பேக்ட் டஸ்ட்டர் ஒரு வரப் பிரசாதம்தான்!