வெஸ்பாவின் தீவிர ரசிகன் நான். 2012-ல் இந்தியாவுக்கு வெஸ்பா வரப் போகிறது என்று தெரிந்த உடனே, அதை முதல் ஆளாக வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். புக்கிங் ஆரம்பித்த உடன் முதல் நாளே வெஸ்பா எல்.எக்ஸ்125 ஸ்கூட்டரை புக் செய்தேன். புக்கிங் ரிசிப்ட்டில் நம்பர் 1 என்று இருந்ததால், தமிழகத்தில் வெஸ்பாவை வாங்கிய முதல் ஆள் நான்தான் என்று நினைக்கிறேன்.

என்னுடைய நண்பர்கள் பலரும் கேடிஎம், நின்ஜா போன்ற இம்போர்ட்டட் பைக்குகளை வைத்து இருக்கிறார்கள். ஆனால், எனக்கு ஸ்கூட்டர் மீது, அதுவும் வெஸ்பா மீது அதிக ஆர்வம். அதனால், நானும் நண்பர்களுக்கு இணையாக இம்போர்ட்டட் ஸ்கூட்டர் வந்ததுமே வாங்கிவிட்டேன்!

டீலர்ஷிப் அனுபவம்

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிள்ளை மோட்டார்ஸ் டீலர்ஷிப்பில்தான் ஸ்கூட்டரை வாங்கினேன். புதிய டீலர்ஷிப் என்பதால், எல்லாமே கேட்டதும் கிடைத்தது. டீலர்ஷிப்பில் இருந்தவர்கள் மிகவும் ஃப்ரெண்ட்லியாகப் பழகினார்கள். ஸ்கூட்டரை வாங்கிய சில நாட்களில், பெட்ரோல் டேங்க்கில் ஏதோ பிரச்னை என்று, அவர்களே ஆள் அனுப்பி ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு போய் சரி செய்து கொண்டு வந்தார்கள். நான் விசாரித்தவரை, இதை அனைத்து வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கும் செய்திருக்கிறார்கள்.

என்ன பிடித்திருக்கிறது?

வெஸ்பாவைப் பிடிக்க முதல் காரணமே, இதன் யுனிக் டிசைன்தான். குரோம் கண்ணாடிகள் செம கிளாஸிக் லுக். முன் பக்கம் உள்ள பாக்ஸ் மிகவும் அழகாகவும், வசதியாகவும் இருக்கிறது. இதுவரை 1,600 கி.மீ ஓட்டி இருக்கிறேன். லிட்டருக்கு 40 - 45 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. இதைவிட இந்த ஸ்கூட்டரில் அதிக மைலேஜை எதிர்பார்ப்பது நியாயம் இல்லை.

வெஸ்பாவை வாங்கிய புதிதில், ஓட்டுவதற்கு இடது பக்கம் கனமாக இருப்பது போல இருந்தது. ஆனால், போகப் போகப் பழகிவிட்டது. இன்ஜின் மிக ஸ்மூத்! செம ஸ்பீடில் பறக்கிறது. இதில் அதிகபட்சம் மணிக்கு 110 கி.மீ வரை பறந்தேன்.

ஆனால் ஆக்டிவா, ஆக்ஸஸ் போன்று வளைவில் நன்றாக வளைத்து ஓட்ட முடியவில்லை. காரணம், ஹேண்டில் பார் உயரமாக இருப்பதோடு, கால் வைக்கும் இடமும் வழக்கமான ஸ்கூட்டர்களில் இருப்பதைவிட உயரமாக இருக்கிறது.

டிசைனில் வசதியாக இல்லாதே இரே விஷயம், பின் பக்கக் கைப்பிடி. இது மிகவும் தாழ்வாக இருப்பதால், பின்னால் உட்காருபவர் சடர்ன் பிரேக் அடித்தால், பிடிப்பதற்கு வசதியாக இல்லை. முதல் சர்வீஸ் 150 ரூபாய்தான் ஆனது. 2 மணி நேரத்தில் ஸ்கூட்டரைக் கொடுத்துவிட்டனர்.

எனக்குப் பிடிக்காதது

வெஸ்பா எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இது நான் எதிர்பார்த்த 70,000 ரூபாயைவிட 9 ஆயிரம் ரூபாய் அதிகம். இதில், டிஸ்க் பிரேக் இல்லை என்பது என்னைப் பொருத்தவரை மைனஸ்தான்.

வெஸ்பா ஒரு கிளாஸிக் டிசைன்தான். ஆனால், இதில் எல்ஈடி லைட், டிஜிட்டல் மீட்டர்களைப் பொருத்தியிருந்தால் கொஞ்சம் மாடர்னாக இருக்கும்!

X-Factor

நான் எந்த சிக்னலில் நின்றாலும் யாராவது வந்து, 'இது என்ன ஸ்கூட்டர்?’ என்று கேட்கிறார்கள். என்னைப் பார்த்து என் நண்பர்கள் மூன்று பேர் வெஸ்பா வாங்கிவிட்டார்கள். நான் பைக் வாங்கினால் உடனே மாடிஃபை செய்வேன். அதை ஒரு ஆண்டில் விற்றுவிடுவேன். ஆனால், வெஸ்பாதான் நான் கடைசி வரை வைத்துக்கொள்ள விரும்பும் ஸ்கூட்டர்!