கோவை வடவள்ளி பகுதியில் 'ஜீப் கிளினிக்’ நடத்தும் கோபாலைச் சந்தித்தேன். எத்தனையோ ஜீப் காதலர்களை கோவை வட்டாரத்தில் சந்தித்து இருக்கிறேன். ஆனால், இவர் ஒரு ஜீப் வெறியர். அலுவலகத்தின் ஷட்டரில் ஆரம்பித்து இன்டீரியர் வரை சிறியதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான ஜீப் படங்கள் வசீகரிக்கின்றன. கம்ப்யூட்டர் டெஸ்க் டாப்பில் கூட 'லாங் லிவ் ஜீப்ஸ்’ என்ற பிரார்த்தனை வார்த்தைகள் அந்தக் காதலின் ஆழத்தைச் சொல்கின்றன.

கிரீஸ் ஒட்டிய கைகளைச் சட்டையில் துடைத்தபடி பேச ஆரம்பிக்கும் கோபால், ''நான் சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவராக்கூட தெரியலாம். ஆனா, அது எல்லாமே ஜீப் சத்தியமா உண்மை பாஸ். ஸ்கூல்ல படிக்கிறப்பவே, 'பெரியாளானதும் என்னவா வருவடா கோபாலு’-ன்னு வாத்தியார் கேட்டப்ப, 'மெக்கானிக்கா வருவேனுங்க சார்’-னு பட்டுன்னு பதில் சொன்ன ஆளு நான். விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே ஜீப்புன்னா உயிருக்கும் மேல. அதோட மசில்ஸ், கம்பீரம், மிரட்டலான முகம்-னு ஜீப்பை ரசிச்சுக் காதலிக்க ஆரம்பிச்சேன். ஆசைக்குத் தோதாக படிப்பையும் வெச்சுக்கிட்டேன். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்ல டிப்ளமோ முடிச்சுட்டு, கோவையில இருக்கிற ஆட்டோமொபைல் கம்பெனிகள்ல சேர்ந்து டூவீலர் ப்ளஸ் ஃபோர் வீலர்களோட நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். அடிப்படையில ரேஸரான நான், அதையும் விட்டுடாம கொஞ்சநாள் ஓடிட்டு இருந்தேன். செட்டிப் பாளையத்துல ஏகப்பட்ட டர்ட் ரேஸ்ல கலந்துகிட்டு டைட்டில் தட்டுன காலங்கள் உண்டு.

மெக்கானிக் அப்படின்னு பொதுவா இருந்த என்னை, முழுசா ஜீப் பக்கம் திருப்பியது ஒரு மஹிந்திரா ஜீப்தான். ஃபோர் வீல் டிரைவ் ஜீப்பான அதோட பெர்ஃபார்மென்ஸைப் பார்த்து அசந்து போனேன், 'இனி நான் ஜீப் மெக்கானிக்’ அப்படின்னு முடிவெடுத்துட்டேன். ஜீப் மெக்கானிசத்துல புலியான சசி, எனக்கு நெடுநாள் நண்பர். அவரும் நானும் சேர்ந்து 2005-ல 'எவரெஸ்ட் மோட்டார்ஸ்’ அப்படின்னு ஒரு கராஜ் ஸ்டார்ட் பண்ணினோம். கன்னா பின்னா ரீ-டிசைனிங், ஹைபிரிட் வேலைகள் எதையும் பண்ணக் கூடாது; ஒரிஜினாலிட்டி இழந்த ஜீப்புக்கு அதன் உண்மையான தோற்றத்தை உருவாக்கிக் கொடுக்கிறது மட்டும்தான் நம்மோட வேலையா இருக்கணும்னு முடிவு பண்ணினோம். 1994 மாடல் எம்.எம்-540 ஜீப் ஒன்னை வாங்கி அதை ரீ-ஸ்டோர் பண்ணினோம். ஹார்டு டாப் மாடலா இருந்த அந்த ஜீப்பை சாஃப்ட் டாப் மாடலா மாத்தினோம். பக்காவா ரெடி பண்ணி அந்த ஜீப்பை வித்ததுல எங்களுக்குக் கிடைச்ச லாபம், ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்.

அதுக்குப் பிறகு 1948 மாடல் லெஃப்ட் ஹேண்ட் 540, சிஜே-3 பி, எம்.எம்-550, கெய்சர் அப்படின்னு ஒரு நாற்பது ஜீப்களை பக்காவா ஒரிஜினாலிட்டியோட ரெடி பண்ணிக் கொடுத்தோம். பழசு பிடிக்காதுன்னு சொல்ற லாஜிக் ஜீப் விஷயத்துல பொருந்தாது சார். தன்னோட ஜீப்புக்கு அதன் பக்கா ஒரிஜினாலிட்டியைக் கொடுக்கிறதுக்காக எத்தனை வருஷமானாலும் காத்திருக்கவும், எத்தனை லட்சங்களையும் செலவு பண்ணவும் தயாரா இருக்கிற ஆளுங்க நிறைய பேர் இருக்கிறாங்க!

''இப்ப செய்யற இதே விஷயத்தை கம்பெனி மாதிரி பக்கா ப்ரொஃபஷனலா செயல்பட ஆரம்பிக்கணும்! என் நண்பன் நவீன் ஐடியா கொடுத்தான். அந்தப் புள்ளியில இருந்து ஆரம்பிச்சதுதான் 'ஜீப் க்ளினிக்!’

இந்தப் பெயரை வெச்சதும் அவன் தான். 2011-ல இங்கே ஆரம்பிச்ச கையோட ஹைதராபாத்லேயும் இதே பெயர்ல இன்னொரு கிளை ஆரம்பிச்சேன். ஆந்திராவுல இதை ஆரம்பிக்கக் காரணம், நாமெல்லாம் நினைச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி மிகப் பெரிய ஜீப் பிரியர்கள் தமிழக மலை மாவட்ட ஆளுங்களோ அல்லது கேரளாக்காரங்களோ இல்லை. ஆந்திராவுலதான் அநாயாசமான ஜீப் பிரியர்கள் இருக்காங்க. ஹிட்லர் பயன்படுத்துன உலகின் முதல் ஜீப்பான பான்டம் பைலட் (Bantam Pilot)-ல ஆரம்பிச்சு, லேட்டஸ்ட் தார் வரைக்கும் அவங்க கையில இல்லாத ஜீப்பே கிடையாது. மொபைல்லகூட போட்டோ எடுக்க விடாம ரொம்ப ரகசியமா பழைய கால ஜீப்பைப் பொத்திப் பாதுகாக்கிறதுல ஆந்திரா ஆட்களை அடிச்சுக்க முடியாது.

மிலிட்டரி பயன்படுத்திக் கழிச்ச ஜீப்களை ஏலத்துல விடுவாங்க... அந்த ஜீப்களைக் கொத்திட்டு வந்து ஒரு துளியளவுகூட ஒரிஜினாலிட்டி போகாம ரீ-ஸ்டோர் பண்ணிட்டு இருக்கேன். ஆவடியில ஆரம்பிச்சு பஞ்சாப், டெல்லினு ராணுவ ஜீப்களுக்காக நான் அலையாத பகுதிகளே கிடையாது. ஒரு தடவை ஜம்மு - காஷ்மீர் பக்கம் அக்னூர் பகுதியில இருந்து 2003 மாடல் எம்.எம்-550, 2001 மாடல் எம்.எம்-550 ஜீப்கள் ரெண்டையும், ரெண்டு புல்லட்டுகளையும் நான் வாங்கிட்டு வந்தது ஜென்மத்துக்கும் மறக்க முடியாத அனுபவம்.

பான்டம் பைலட், பான்டம் பிஆர்சி 60, கிராண்ட் வேகனர், ராங்கர் டிஜே, எம்.ஐ-70, எம்-605, கமாண்டோன்னு உலகத்துல இதுவரை தயாராகி இருக்கிற ஜீப்கள்ல கிட்டத்தட்ட அத்தனையையும் தரிசனம் பண்ணிட்டேன். பெரும்பான்மையான ஜீப்கள்ல ஒரு மெக்கானிக்கா கை வெச்சு வேலையும் பார்த்துட்டேன். இப்போ ஜீப் வில்னர் ஒன்னு ரெடி செஞ்சுக்கிட்டு இருக்கோம். மிக மிரட்டலான அந்த ஜீப்பை பார்க்கிற யாரும் சொக்கிப் போவாங்க.

எனக்கு எல்லாமே ஜீப்கள்தான் பாஸ். ஜீப்களுக்காக வாழ்க்கையில பர்சனல் விஷயங்கள் எதையெல்லாமோ இழந்துட்டேன் என் மனைவி உட்பட! 'இந்த ஜீப்பை வெச்சு நீ என்னத்த சாதிச்சுட போறே?’ன்னு என் முகத்துல அடிச்சுப் பேசி கரி பூசினவங்க மத்தியில, அந்த ஜீப் மூலமாகவே உயர்ந்து காட்டணும்ங்கிற வெறி என்னை இன்னும் மேலே கொண்டு போகுது'' என்று சின்ன சிலிர்ப்புடன் நிறுத்துகிறார்.

லாங் லிவ் ஜீப்ஸ்!