Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

பாலாஜி, மதுரை.

மோட்டார் கிளினிக்

நான், மதுரை மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்துகிறேன். எங்கள் கிளப் உறுப்பினர்கள் அடிக்கடி சூப்பர் பைக்குகளில் டிரிப் அடிப்போம். கடந்த மாதம் சூப்பர் பைக்குகளோடு சேலத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும்போது, மதுரை திருமங்கலம் அருகே போலீஸார் எங்களை இரண்டு மணி நேரம் பிடித்து வைத்திருந்தனர். 'வெளிநாட்டு பைக்குகளை வெளிநாட்டில்தான் ஓட்ட வேண்டும். இங்கே ஓட்டக் கூடாது’ எனச் சொல்லி எங்களுக்கு அபராதம் விதித்தார்கள். சூப்பர் பைக்குகளை இங்கே ஓட்டலாமா, கூடாதா?

வெளிநாட்டு பைக்குகளை இங்கே ஓட்டக் கூடாது என எந்தச் சட்டமும் இல்லை. அப்படிச் சட்டம் இருந்திருந்தால், வெளிநாட்டு பைக்குகளை இங்கு விற்பனையே செய்ய முடியாது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை பதிவு செய்து, அதற்கு உரிய எண்ணும் கொடுக்க மாட்டார்கள். அனுமதிக்கப்பட்ட வேகத்துக்கு மேல் சென்றால், அது தவறு. மற்றபடி நம் ஊர் சாலை விதிகளைப் பின்பற்றி சூப்பர் பைக் ஓட்டுவதை குற்றம் என்று தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

ராஜசேகர், ராஜபாளையம்.

மோட்டார் கிளினிக்

நான் பழைய ஹூண்டாய் வெர்னா கார் வைத்திருக்கிறேன். பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டதால், இதில் எல்பிஜி கிட் பொருத்தலாம் என திட்டமிட்டு இருக்கிறேன். எந்த நிறுவனத்தின் எல்பிஜி கிட் சிறந்தது. இதற்கு எவ்வளவு செலவாகும்?

ஆர்டிஓ அனுமதி சான்றிதழ் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து எல்பிஜி கிட்டை வாங்கிப் பொருத்துவதே நல்லது. தமிழகத்தில் அதிகம் பெயர் பெற்ற சர்வதேச நிறுவனம் லொவாட்டோ. இதைப் பொருத்துவதற்கு 45 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

ராஜேஷ், சென்னை.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

என்னுடைய பட்ஜெட் எட்டு லட்சம். நல்ல டீசல் கார் வேண்டும். மைலேஜ் அதிகம் கிடைக்க வேண்டும். அதே சமயம், டிக்கியில் பொருட்கள் வைக்க தாராளமாக இடம் வேண்டும். ஃபோர்டு ஃபிகோ, மஹிந்திரா வெரிட்டோ ஆகிய இரண்டு கார்களில் எந்த காரை வாங்கலாம். இந்த இரண்டு கார்களும் இல்லை என்றால், பழைய கார் மார்க்கெட்டில் பெரிய கார்கள் எதையும் வாங்கலாமா?

மைலேஜ் ஓகே! ஆனால், டிக்கியில் அதிக இடம் வேண்டும் என்ற உங்கள் தேவையை இரண்டு கார்களுமே முழுமையாக நிறைவு செய்யாது. பழைய கார்களை வாங்கும்போது பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். டொயோட்டா எட்டியோஸ் டீசல் உங்கள் தேவையைச் சரியாகப் பூர்த்தி செய்யும். எட்டியோஸ் அதிக மைலேஜ் தரும். டிக்கியிலும் இடம் அதிகம். டொயோட்டா என்பதால், மெயின்டனன்ஸ் செலவுகள் குறைவாக இருக்கும். காரிலும் நீண்ட காலம் பிரச்னை எதுவும் வராது.

மதன்குமார், செங்கல்பட்டு.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் யமஹா FZ-16 பைக் வைத்திருக்கிறேன். என்னுடைய பைக்கில் K&N ஏர் ஃபில்டர் வாங்கிப் பொருத்தலாம் என நினைக்கிறேன். இதைப் பொருத்துவதால் என்ன நன்மை? இதனால் பிரச்னைகள் ஏதும் வருமா?

நீங்கள் குறிப்பிடும் K&N ஏர் ஃபில்டர் பொருத்துவதால் பைக்கின் பெர்ஃபாமென்ஸ் கூடும். பைக்கின் சத்தமும் மிரட்டலாக இருக்கும். ஆனால், இந்த வகை ஃபில்டர்களில் சின்னச் சின்ன துவாரங்கள் அதிகம் இருப்பதால், இதன் வழியே தூசுகள் போய் இன்ஜினைக் கெடுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அதனால், அடிக்கடி ஏர் ஃபில்டரைச் சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

சரவணன், கோயம்புத்தூர்.

மோட்டார் கிளினிக்

என் குடும்பத்தில் மொத்தம் எட்டு பேர். பெரிய கார் வாங்கலாம் என முடிவெடுத்து மாருதி எர்டிகா மற்றும் மஹிந்திரா ஸைலோவை இறுதி செய்து வைத்திருக்கிறேன். இரண்டில் எந்த காரை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

இரண்டில் மாருதி எர்டிகாதான் நல்ல சாய்ஸ். இந்த காரின் மைலேஜ் அதிகம் என்பதோடு, காம்பேக்ட் எம்யூவி என்பதால் நகருக்குள் சுற்றி வரவும், பார்க்கிங் செய்யவும் ஈஸியாக இருக்கும். அதிக இடம் வேண்டும்; சீட்டுகள் சொகுசாக இருக்க வேண்டும் என்றால், மஹிந்திரா ஸைலோ வாங்கலாம். மற்றபடி பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், மெயின்டனன்ஸ் என அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது எர்டிகாதான் சிறந்த சாய்ஸ்.

மோட்டார் கிளினிக்

ஷாகுல் ஹமீது, நாகப்பட்டினம்.

மோட்டார் கிளினிக்

நல்ல ஸ்போர்ட்டியான பைக் வாங்க வேண்டும். என்னுடைய தேவை ஸ்டைல், ஸ்டைல், ஸ்டைல் மட்டுமே! பஜாஜின் புதிய பல்ஸர் 200 என்எஸ் அல்லது கேடிஎம் டியூக் 200 - இந்த இரண்டில் எந்த பைக் வாங்கலாம்? புதிதாக பல்ஸர் 220 பைக் எதுவும் வர இருக்கிறதா?

இரண்டு பைக்குகளுமே ஸ்டைலில் மாறுபடுகின்றன. கேடிஎம் டியூக் 200, முழுக்க முழுக்க ஸ்போர்ட்டியான நேக்கட் பைக். பல்ஸர் 200 என்எஸ், அன்றாடம் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கும் பைக். ஸ்டைலைப் பொறுத்தவரை எந்த பைக் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இன்ஜின், பெர்ஃபாமென்ஸைப் பொருத்தவரை இரண்டு பைக்குகளுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. பல்ஸர் 220 பைக்கில் மாற்றங்கள் செய்து புதிதாக வெளியிடும் எண்ணம் எதுவும் பஜாஜிடம் இல்லை.

வின்சென்ட், கன்னியாகுமரி.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் டீசல் கார் வாங்குவதற்காக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புக் செய்தேன். ஆனால், இதுவரை காரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்கிறார்கள். மூன்று மாதங்கள் கழித்து என்ன விலையோ அதுதான் செல்லுபடியாகும் என்கிறார்கள். என்ன செய்யலாம். நிஸான் சன்னி வாங்கிவிடலாமா?

நிஸான் சன்னி டீசல், அதிக இட வசதிகொண்ட நல்ல மைலேஜ் தரக்கூடிய சிறந்த கார். பில்டு குவாலிட்டியிலும் குறைவில்லை. ஆனால் சென்னை, மதுரை, கோவையைத் தாண்டி நிஸானுக்கு தமிழகத்தில் தற்போது டீலர்ஷிப் இல்லை என்பது ஞாபகம் இருக்கட்டும்.

மோட்டார் கிளினிக்

மகாலிங்கம், கொரட்டூர்.

மோட்டார் கிளினிக்

நான் சமீபத்தில் 'பாக்ஸர் 150’ பைக் வாங்கினேன். ஆனால், இதில் '4 ஸ்பீடு கியர் பாக்ஸ்’தான் இருக்கிறது. இதன் பெர்ஃபாமென்ஸும் எனக்குப் போதவில்லை. இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸைப் பொருத்த முடியுமா? இதனால் பைக்கின் பெர்ஃபாமென்ஸில் முன்னேற்றம் இருக்குமா?

5 ஸ்பீடு கியர் பாக்ஸை, பாக்ஸர் 150-ல் பொருத்தலாம். ஆனால், இதற்கு அதிகம் செலவாகும் என்பது ஒருபுறம் இருந்தாலும், பைக்கின் பெர்ஃபாமென்ஸ் பாதிக்கப்படுமே தவிர, முன்னேற்றம் இருக்காது.