இந்தியாவில் இரு சக்கர வாகன மார்க்கெட், குறிப்பாக ஸ்கூட்டர் மார்க்கெட் சரிந்துகொண்டு இருந்த சமயத்தில், கைனடிக் ஸ்கூட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார் ஆனந்த் மஹிந்திரா. 'ஸ்கூட்டர்களுக்கு இனிமேல் இந்தியாவில் எதிர்காலம் இல்லை’ என அறிவித்து, ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இருந்து ராஜீவ் பஜாஜ் விலகிய சமயம் அது. ஜூலை, 2008-ம் ஆண்டு கைனடிக் நிறுவனத்தை வாங்கியது மஹிந்திரா. 'இரு சக்கர வாகன மார்க்கெட் சரிவைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், எதற்காக இதில் இறங்குகிறீர்கள்? நஷ்டக் கணக்கு காட்டவா?’ என்றெல்லாம் ஆனந்த் மஹிந்திராவை நோக்கி கேள்விகள் எழுந்தன. ''உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக மோட்டார் சைக்கிள்கள் அதிகம் விற்பனை செய்யும் நாடு இந்தியா. ஆண்டுக்கு 1 கோடி இரு சக்கர வாகனங்கள் இங்கு விற்பனை ஆகின்றன. இருந்தும் 80 சதவிகித இந்திய வீடுகளில் இரு சக்கர வாகனங்கள் இல்லை. எல்லோருமே நேரடியாக கார் வாங்க மாட்டார்கள். நம் நாட்டில் ஸ்கூட்டர், பைக், கார் என படிப்படியாக வாகனங்களை வாங்குபதுதான் நடைமுறை. நகருக்குள் அதிகம் பயன்படுத்த ஸ்கூட்டர்; ஆஃபீஸுக்குப் போய் வர பைக்; குடும்பத்தோடு பயணிக்க கார் என வாடிக்கையாளர் வளர வளர, அவர்களோடு மஹிந்திராவும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம். 2 வீலர் பிசினஸை வெற்றிகரமான பிசினஸாக அமைத்துக் காட்டுகிறேன்!' என்று தெள்ளத் தெளிவாகப் பேசினார் ஆனந்த மஹிந்திரா.

இது நடந்தது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது மஹிந்திரா. 2011 - 2012 நிதி ஆண்டில் மட்டும் 1,34,570 ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருக்கிறது அது. 'ஒரு கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகும் இந்தியாவில், இந்த எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், நிறுவனத்தை ஆரம்பித்த நான்கே ஆண்டுகளில் இந்த வளர்ச்சி பாராட்டுக்கு உரியதே’ என்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுனர்கள்.

''100 கோடி ரூபாய் முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தைத் துவக்கி இருக்கிறோம். மோட்டார் பைக் தயாரிப்புக்கான இன்ஜின்களை இனி மஹிந்திராவே முழுமையாகத் தயாரிக்கும். இந்த ஆராய்ச்சி மையத்தில், வரும் ஐந்து ஆண்டுகளில் மேலும் 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறோம். 2020-ல் இந்தியாவில் 3 கோடி மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், நிச்சயம் 30 - 40 லட்சம் மோட்டார் சைக்கிள்களை மஹிந்திரா விற்பனை செய்யும். 2020-ல் மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம்!'' என கடந்த ஜூலை 4-ம் தேதி புனேவில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தைத் திறந்துவைத்துப் பேசினார் ஆனந்த் மஹிந்திரா.

2012 - 2013 நிதி ஆண்டில் நான்கு புதிய இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்துவதுதான் மஹிந்திராவின் உடனடித் திட்டம். இதில் டியூரோ DZ, ரோடியோ DZ என இரண்டு ஸ்கூட்டர்களும் மாற்றங்களுடன் ஏற்கெனவே அறிமுகமாகிவிட்டன. அடுத்ததாக, மீண்டும் 110 சிசி 'ஸ்டாலியோ’ பைக்கை செப்டம்பர் மாதம் விற்பனைக்குக் கொண்டுவருகிறது மஹிந்திரா. மூன்று ஆண்டுகளாக விற்பனைக்கு வராமலே இருக்கும் 300 சிசி 'மோஜோ’ பைக்கை, அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதவாக்கில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது இந்த நிறுவனம். இதற்கு அடுத்தபடியாக 125 சிசி பைக்கையும் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது.

ஆண்கள், பெண்கள் என இரு பாலருமே பயன்படுத்த கைன், ஃப்ளைட், ரோடியோ, டியூரோ என நான்கு ஸ்கூட்டர்கள்; ஸ்டாலியோ, மோஜோ, 125 சிசி பைக் என மூன்று பைக்குகள் என ஃபுல் ஃபார்மில் இருக்கிறது மஹிந்திரா.

2 வீலர் மார்க்கெட்டை முழுமையாக ஆக்கிரமிக்க மஹிந்திரா 2 வீலர்ஸ் நிறுவனம் ரெடி!