ஜூலை 8 - ஜாவா பைக்குக்கு ஹேப்பி பர்த் டே! ஜாவா பைக்குகளைத் தயாரித்த நிறுவனம், இந்த தினத்தைக் கொண்டாடுமா என்பது தெரியாது. ஆனால், இந்த பைக்கின் சென்னை ரசிகர்கள் கொண்டாடினார்கள். சென்னை 'ரோரிங் ரைடர்ஸ் ஜாவா- யெஸ்டி மோட்டார் கிளப்’ உறுப்பினர்கள், ஜாவா தினத்தைக் கொண்டாடத் தேர்ந்தெடுத்த இடம் ஏலகிரி.

ஏலகிரி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை வாசஸ்தலம் என்பது தெரியும். ஊட்டி - கொடைக்கானல் போல மிகப் பெரிய சுற்றுலாத் தலம் இல்லை என்றாலும், கைக்கு அடக்கமான பட்ஜெட்டில் விடுமுறையைக் கொண்டாட, பக்காவான ஹாலிடே ஸ்பாட் இது!

என்னதான் ஜாவா தினமாக இருந்தாலும் மெட்ராஸ் புல்ஸ், கோவை தம்ப்பர்ஸ் போன்ற ராயல் என்பீல்டு பைக் கிளப் உறுபினர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஐம்பதுகளில் வெளிவந்த ஜாவாவின் மாடல்களான யெஸ்டி ரோடு கிங், டீலக்ஸ் கிளாசிக் என மிரள வைக்கும் பைக் கூட்டணி, ஜூலை 7-ம் தேதி அதிகாலை சென்னையில் இருந்து கிளம்பியது. சென்னை - பெங்களூரு ஹைவேயில் பைக்குகள் இறக்கை முளைத்து பறந்தன.

சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள ஏலகிரியை நோக்கிப் புறப்பட்ட ஜாவா பேரணி, சிற்றுண்டிக்காக மட்டும் வேண்டா வெறுப்பாக ஒரே ஒருமுறை நிறுத்தப்பட்டது. ஏலகிரி சென்று சேரும் வரை சாலையில் சென்ற எல்லோர் கண்களும் ஜாவா மீதுதான்.

சோழவரம் ரேஸ் டிராக்கில், அந்தக் காலத்தில் ஜாவா பைக் ஓட்டிய கண்ணன்தான் கிளப்பின் மூத்த உறுப்பினர். அது மட்டுமில்லாமல், கிளப்பின் மிக ஸ்டைலான ஜாவா பைக்கும் இவருடையதுதான். கறுப்பு வண்ணத்தில் பார்ப்போரின் பல்ஸை ஏற்றியது அந்த ஜாவா. வயதின் தள்ளாட்டம் கொஞ்சமும் இல்லாமல், சிறு பிள்ளையின் கையில் கிடைத்த பொம்மை போல ஜாவாவைப் பார்த்துப் பார்த்து பூரித்தார் கண்ணன்.

சேகர், சென்னையின் மிக முக்கிய ஜாவா மெக்கானிக். கிளப் உறுப்பினர்களுக்கு செல்லமாக ஜாவா டாக்டர். ஐஸ் ஹவுஸ் ஏரியாவில் உள்ள இவரது வொர்க் ஷாப்தான் ரோரிங் ரைடர்ஸின் எல்லா ஜாவாக்களுக்கும் 'ஸ்பா’ சென்டர். அதனால், தன்னுடைய வொர்க் ஷாப்புக்கு வரும் எந்த பைக் பற்றிக் கேட்டாலும், அதன் ஆதி முதல் அந்தம் வரை அத்தனை நுணுக்கங்களையும் புட்டுப் புட்டுப் வைக்கிறார். ஜாலி டிரிப்தானே என்று சும்மா பைக் ஓட்டாமல், வழியில் ஜாவா பைக்குகளுக்குத் தேவையான ட்ரீட்மென்ட்டும் கொடுத்துக் கொண்டே வந்தார் சேகர். யெஸ்டி மாடல் பைக்குகளைப் போல ஜாவாவை இப்போது அதிகம் பார்க்க முடிவதில்லை. காரணம், இன்ஜின் ட்யூனிங் கொஞ்சம் மிஸ் ஆனாலும், பைக் ரிவர்ஸில் போகுமாம்! இந்த மாதிரியான வித்தியாசமான கேரக்டரும் ஜாவாவுக்கு அழகுதான்.

கிளப் உறுப்பினரான சதீஷின் செல்லப் பெயர் கெரோ. எப்படி வந்தது இந்தப் பெயர் என்றால், ''அது ஒண்ணுமில்ல பாஸ், பழைய மாடல் ஜாவா ஒண்ணு என்கிட்ட இருக்கு. அது மண்ணெண்ணையில்தான் ஓடும். கெரோஸின் சுருங்கி கெரோ ஆயிடுச்சு!'' - குறுந்தகவலாகத் தன் பெயர்க் காரணம் சொன்னார் சதீஷ்.

ஏலகிரி ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் நடந்த ஜாவா தினக் கொண்டாட்டத்தின் சந்தோஷ சர்ப்ரைஸ்... காட்டன் சிட்டி ஜாவா - யெஸ்டி மோட்டார் கிளப்பின் துவக்கம்.

கோவையைச் சேர்ந்த ஜாவா பிரியர்கள் ஒன்றுகூடி, அன்றைய தினத்தில் இந்த கிளப் ஆரம்பித்தார்கள். இந்த கிளப், ஜாவாவின் பெருமையை இனி கோவையிலும் பரப்பும்.

அந்தி சாயும் வேளையில் பர்ன் அவுட், வீலிங், 360 என சகல ஸ்டன்ட்டுகளையும் செய்து முடித்து, மறுநாள் அதிகாலை கொண்டை ஊசி வளைவுகள் கடந்து சென்னை நோக்கிப் பயணப்பட்டது எல்லா ஜாவா பைக்குகளும்.

ஏலகிரியின் தைல மரக்காடுகள் எங்கும் ஜாவா வாசம்!