காரில் டூர் செல்வோம். ஆனால், காருக்காக டூர் சென்றது உண்டா? அப்படி ஒரு ஜாலி டூர் சமீபத்தில் நடந்தது. ஃபியட் கார் வைத்திருக்கும் பலருக்கும், 'ஃபியட் வீரனே வா! ஏலகிரிக்கு வா! காரோடு வா! குடும்பத்தோடு வா!’ என்று அழைப்பு வர... ஏலகிரி மலையில் நடந்தது அந்த சந்தோஷ சந்திப்பு.

இதுவரை சென்னை, மாமல்லபுரம் என்று ஒரு சின்ன வட்டத்துக்குள் மட்டுமே தங்களது ஃபியட் கிளப் நண்பர்களைச் சந்தித்து வந்தவர்கள், முதன்முறையாக பெங்களூரு மற்றும் கோவையில் உள்ள நண்பர்களையும் இந்த ஃபியட் சங்கமத்துக்கு அழைத்திருந்தார்கள். சங்கமம் நடைபெற்ற இடம் ஏலகிரி. சென்னை, கோவை, பெங்களூரு ஆகிய மூன்று ஊர்களுக்கும் ஏறக்குறைய சம தூரத்தில் இருக்கும் இடம் என்பதால்தான் ஏலகிரி 'டிக்!’

சந்தோஷ சங்கம தினம் அன்று, ஏலகிரி மலை அடிவாரத்தில் கோவையில் இருந்து வந்திருந்த ஃபியட் கிளப் குடும்பங்கள் காத்திருக்க, அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர் பெங்களூரு - சென்னை குடும்பங்கள். மொத்தம் 41 ஃபியட் கார்கள். அனைத்தும் புன்ட்டோ மற்றும் லீனியா கார்கள் மட்டுமே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டன.

பரஸ்பர அறிமுகங்கள் நடந்து முடிந்த பிறகு, 13 கி.மீ-க்கு நீண்டிருந்த மலைப் பாதையில் ஊர்ந்து சென்றன ஃபியட் கார்கள். 12 கொண்டை ஊசி வளைவுகளில் பாட்டு பாடியபடியே பெங்களூரு வாசிகள் வர, சென்னை நண்பர்கள் கானா பாடலை அவிழ்த்துவிட்டனர்.

சென்னையைச் சேர்ந்த சதீஷ் நம்மிடம், ''இது பல குடும்பங்களின் சங்கமத் திருவிழா போன்றது இந்த

ஃபியட் கிளப் விழா. ஃபியட் கார் எங்களது குடும்பத்தில் ஒரு நபர். ரேஷன் கார்டில் இதன் பெயரைச் சேர்க்கவில்லை என்பதுதான் ஒரே குறை. ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களை இந்த ஃபியட் கார் இணைத்துள்ளது. இந்த காரைப் பராமரிப்பது ரொம்ப சிரமம் என்று சிலர் சொல்வார்கள். அப்படிச் சொல்பவர்களுக்கு காரின் அருமை தெரியவில்லை என்றுதான் அர்த்தம். சொல்லப் போனால், பெரும்பான்மையான கார்களில் இருப்பது ஃபியட் இன்ஜின்கள் தான். நான் கார் வாங்கிய பிறகு, குடும்பதோடு முதலில் சென்றது புனேவில் உள்ள ஃபியட் தொழிற்சாலைக்குத்தான். இந்தப் பயணமும் ஃபியட் கிளப் குடும்பங்களின் சந்திப்புக்காக என்று நினைக்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது'' என்றவர், ''2013-ம் ஆண்டில் நாங்கள் இமயமலை செல்ல பிளான் செய்துகொண்டு இருக்கிறோம்'' என்று ஃபியட் கிளப்பின் எதிர்காலத் திட்டத்தையும் பகிர்ந்துகொண்டார் சதீஷ்.

டாக்டர், அட்வகேட், அரசியல்வாதி, கான்ட்ராக்டர், நடிகர் என்று எல்லாவிதமானவர்களையும் இந்த ஃபியட் கிளப்பில் பார்க்க முடிந்தது.

மாலை 7 மணிக்கு ஒன்றன் பின் ஒன்றாக மேலே இருந்து மலை அடிவாரத்துக்கு 41 ஃபியட் கார்களும் இறங்கி வாணியம்பாடி கூட்டு ரோடு சந்திப்பில் நின்றன. ஆரத் தழுவி விடை பெற்றுக்கொண்டு பெங்களூரு, கோவை, சென்னை என்று மூன்று திசைகளை நோக்கியும் சீறின ஃபியட் இன்ஜின்கள்!