''நாலு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு சைக்கிள்கூட ஓட்டத் தெரியாது. இப்போ, பெரிய லாரியைக்கூட அசால்ட்டா ஓட்டுவேன்'' என்று சொல்லும் ரூபா, ஆண்களுக்கான உலகமாக இருக்கும் கமர்ஷியல் வாகனத்தை அநாயசமாகக் கையாள்கிறார். ஓசூர் - மேட்டூர் நெடுஞ்சாலையில். தினசரி சீறிப் பறக்கிறது ரூபா ஓட்டும் அசோக் லேலாண்டின் தோஸ்த் வாகனம். ரூபா, தோஸ்த் ஓட்ட வந்த கதை மிக சுவாரஸ்யமானது.

மேட்டூர் அருகே உள்ள திலகனூரைச் சேர்ந்த இவருக்கு, ஓசூரில் மொத்தமாக காய்கறிகள் வாங்கி மேட்டூர், கொளத்தூர் சந்தைகளில் வியாபாரம் செய்வதுதான் தொழில். இதற்காகத்தான் இவர் தினசரி அசோக் லேலாண்டின் தோஸ்த் வாகனத்தை சுமார் 400 கி.மீ வரை டிரைவ் செய்கிறார். ஆச்சரியம் குறையாமல் ரூபாவிடம் பேசினோம். ''அப்பா, அம்மா ரெண்டு பேருமே கூலி வேலைதான். எங்க வீட்டுல நான் ஒரே பொண்ணு. என்னை ரொம்ப செல்லமா வளர்த்தாங்க. ஸ்கூலுக்கு அனுப்பினா, வாத்தியார் அடிப்பார்னு ஸ்கூலுக்கே அனுப்பலை. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கல்யாணமும் ஆச்சு. ஆனா, அவருக்கு இருந்த குடிப் பழக்கத்தால தினமும் சித்ரவதைதான். கொஞ்ச நாள்லயே என்னையும் குழந்தையையும் விட்டுட்டுப் போயிட்டார். நான் திரும்பவும் எங்க அப்பா வீட்டுக்கு வந்துட்டேன்.

அப்பா, அம்மாவுக்கு பாரமா இருக்கக் கூடாது; பையனை நல்லா படிக்க வைக்கணும்; ஊரே பாராட்டுற மாதிரி தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டணும்ங்கிறது என்னோட கனவு. பெரியம்மா, சித்தப்பா எல்லோரும் சந்தைக்குப் போய் காய்கறி, மளிகை வாங்கிட்டு வந்து வியாபாரம் செய்வாங்க. நான் அதையே கொஞ்சம் பெரிசா செய்யலாம்னு யோசிச்சேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி டாடா ஏஸ் வண்டிய லோன்ல வாங்கி டிரைவர் போட்டு ஓட்டினேன். ஓசூருல காய்கறியும், பெங்களூருல மளிகை சாமானும் மொத்தமாக வாங்கி கொளத்தூர், மேட்டூர் மார்க்கெட்டுக்குக் கொண்டுவந்து விற்போம்.

இதற்காக தினமும் காலையில மூணு மணிக்கு திலகனூரில் கிளம்பி ஓசூருக்குப் போய் வருவோம். தினமும் 400-450 கி.மீ வண்டி ஓடும். ஆனா, டிரைவர் சரியானபடி ஒத்துழைப்பு கொடுக்கலை. அடிக்கடி லீவு போடுவார். ஒருநாள் எங்ககூட சண்டை போட்டுட்டு, பாதி வழியில வண்டியை நிறுத்திட்டுப் போயிட்டார். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. வண்டிக்குள்ள சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மான்னு வயசானவங்க உக்கார்ந்து பேந்த பேந்த விழிச்சாங்க. அது மனதை ரொம்பக் காயப்படுத்திடுச்சு. அப்புறம் ரோட்டுல போனவங்க கையில, கால்ல விழுந்து வண்டியை வீட்டுக்குக் கொண்டுபோய் சேர்த்தேன். அதுக்கு பிறகு ஒரு முடிவு எடுத்தேன். இனி வண்டியை நாமதான் ஓட்டணும். யாருடைய உதவியையும் தேடக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன். ஒரே வாரத்தில் வண்டியை நல்லா ஓட்டக் கத்துக்கிட்டு, கொஞ்ச நாள்ல டிரைவிங் லைசென்ஸ் வாங்கிட்டேன்.

இப்போ, அசோக் லேலாண்டு தோஸ்த் வாங்கி தினமும் ஓசூர் டு மேட்டூர் டிரிப் அடிக்கிறேன். வண்டியில லோடு இருக்கிறதே தெரியாது. ஜாலியா பாட்டுக் கேட்டுக்கிட்டே முன்னைவிட சீக்கிரமாவே வந்திடுறேன். கியர் மாத்துறது, சைடு வாங்குறது ரொம்ப ஈஸியா இருக்கு. அதைவிட நல்ல மைலேஜ் வேற கொடுக்குது.

கணவனால் கைவிடப்பட்ட எனக்கு, இப்ப தோஸ்த்துதான் தோழி மாதிரி இருந்து என் வாழ்க்கைக்கு வழிகாட்டுது. என் பையன் திருமூர்த்தி எட்டாவது படிக்கிறான். அவன் படிப்புச் செலவுக்கும், எங்க குடும்பச் செலவுக்கும் தோஸ்த்தான் உதவி. என்னோட குடும்பத்தில் ஒருத்தரா இந்த வண்டியைப் பார்க்கிறோம். கூடிய சீக்கிரத்தில் கடனெல்லாம் கட்டி முடிச்சு வண்டிய சொந்தமாக்கிடுவேன்'' என்கிறார் தோஸ்தின் தோழி ரூபா!