Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:

ஜான் மனோகர், மதுரை. 

மோட்டார் கிளினிக்

கடந்த வருடம் காரில் பெங்களூருக்குச் சென்று திரும்பும்போது டிரைவர் தூங்கிவிட்டதால், என்னுடைய கார் விபத்தில் சிக்கி எனக்கும், டிரைவருக்கும் பெரிய காயம் ஏற்பட்டு, இப்போது முழு குணமாகிவிட்டோம். இப்போது புதிதாக கார் வாங்கலாம் என முடிவெடுத்து இருக்கிறேன். டிரைவர் தூங்கினால் எச்சரிக்கை செய்யும் 'டிரைவர் அலெர்ட் சிஸ்டம்’ வசதி இப்போது பல கார்களில் இருப்பதாகப்‌ படித்தேன். எது சிறந்த டிரைவர் அலெர்ட் சிஸ்டம்? இது எந்த அளவுக்குத் துல்லியமாக இருக்கும்?

 வால்வோ கார்களில் இருக்கும் டிரைவர் அலெர்ட் சிஸ்டம்தான் பெஸ்ட்! இதில் இருக்கும் கேமரா, டிரைவரின் கண் இமைகளைக் கண்காணித்துக்கொண்டே இருக்கும். கண் இமைகள் சரியான இடைவெளிகளில் மூடித் திறக்கவில்லை; இமைகள் குறிப்பிட்ட நேரத்துக்கும் மேல் மூடிவிட்டன

மோட்டார் கிளினிக்

என்றால், உடனடியாகச் சத்தம் எழுப்பி எச்சரிக்கை செய்யும். வால்வோவின் இந்த சிஸ்டம்தான் பெஸ்ட்! மற்றவற்றில், கார் திடீரென வேகம் கூடினாலோ அல்லது குறைந்தாலோ, ஸ்டீயரிங் தாறுமாறாகத் திரும்பினாலோ அதில் இருக்கும் சென்ஸார்கள் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும். சில கார்களில் நீண்ட நேரம் தொடர்ந்து காரை ஓட்டிக்கொண்டே இருந்தால், கொஞ்ச நேரம் பிரேக் எடுக்கச் சொல்லி எச்சரிக்கை செய்யும். இவை அனைத்துக்கும் மேல், கூடுமானவரை தொடர்ந்து கார் ஓட்டுவதையும், பயணம் செய்வதையும் தவிர்த்துவிடுவது நல்லது. காரை டிரைவர் ஓட்டினாலும் சரி, நீங்கள் ஓட்டினாலும் சரி... அரைத் தூக்கத்தோடு ஓட்டுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்!

 தெய்வசிகாமணி, திருவண்ணாமலை.

மோட்டார் கிளினிக்

முதுகு வலித் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறேன். அதனால், பைக்கை விற்றுவிட்டு ஸ்கூட்டர் வாங்கலாம் என்பது என் முடிவு. எந்த ஸ்கூட்டரில் நல்ல சஸ்பென்ஷன் சிஸ்டம் இருக்கிறது?  

 ##~##

இப்போதைய ஸ்கூட்டர்களில் மஹிந்திரா 'டியூரோ ஞிஞீ’  ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் சிறப்பாக இருக்கிறது. சில ஸ்கூட்டர்களில் மட்டுமே பைக்குகளில் இருப்பதுபோல டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் இருக்கிறது. அதில், நல்ல சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்டிங் கொண்ட ஸ்கூட்டர் டியூரோ! மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது அதிர்வுகளும், ஆட்டமும் அதிகம் இருக்காது என்பதால் டியூரோதான் உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்!

 ஜாக்ஸன், பொள்ளாச்சி.

மோட்டார் கிளினிக்

ஸ்டைலான பைக் வேண்டும். யமஹா ஆர்-15, ஹோண்டா சிபிஆர் 150-ஆர் - இந்த இரண்டில் எது பெஸ்ட்?

 இரண்டு பைக்குகளும் ஸ்டைலான பைக்குகள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இரண்டில் உங்கள் பயன்பாட்டுக்கு எது சரியாக வரும் என்று பார்த்து முடிவு செய்யுங்கள். ஆர்-15 கிட்டத்தட்ட ரேஸ் டிராக் பைக். தினமும் பயன்படுத்துவதற்கு சிறந்த பைக் என்று சொல்ல முடியாது. வார இறுதி நாட்களில் அல்லது வாரத்தில் சில நாட்கள் சீறிவிட்டு வர ஆர்-15 சரியாக இருக்கும். ஹோண்டா சிபிஆர் 150-ஆர், தினமும் பயன்படுத்தும் வகையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. மிகவும் குனிந்து ஓட்டும்படி இருக்காது.

 கமலக்கண்ணன், சிதம்பரம்.

மோட்டார் கிளினிக்

நான் மோட்டார் விகடனின் தீவிர வாசகன். தற்போது முதுகலைப் படிக்கிறேன். 2 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்கலாம் என முடிவெடுத்து இருக்கிறேன். முதல் சாய்ஸ் புதிய டாடா நானோ. அப்படி இல்லை என்றால், 2005-ம் ஆண்டு மாடல் ஃபோர்டு ஐகான் அல்லது மாருதி ஆல்ட்டோ. டாடா நானோவைப் பற்றி விசாரிப்பதற்காக ஷோ ரூம் சென்றிருந்தேன். என்னுடைய பைக்கை எக்ஸ்சேஞ்சில்  எடுத்துக்கொண்டு 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும், கார்ப்பரேட் போனஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ், கன்ஸ்யூமர் ஆஃபர் என மொத்தம் ஆன் ரோடு விலையில் 50,000 ரூபாய் டிஸ்கவுன்ட் தருவதாகச் சொன்னார்கள். காரையும் ஓட்டிப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரே பிரச்னை - நான் ஆறடி உயரம் என்பதால், டிரைவர் சீட்டில் எனக்கு லெக் ரூம் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. டாடா நானோ வாங்கலாமா? நல்ல ரீ-சேல் வேல்யூ இருக்குமா? பராமரிப்புச் செலவுகள் எப்படி?

 இந்தியாவிலேயே விலை குறைவான கார் டாடா நானோ. மைலேஜ் அதிகம் என்பதோடு, சிட்டிக்குள் பயன்படுத்த சிறந்த கார். நான்கு பேர் காருக்குள் வசதியாக உட்கார்ந்து பயணிக்கலாம். 2 லட்ச ரூபாய் காரில் அதிக ரீ-சேல் வேல்யூ இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர். பராமரிப்புச் செலவுகள் அதிகம் வைக்காத கார் டாடா நானோ.

 பாஸ்கர், நாமக்கல்.

மோட்டார் கிளினிக்

100 - 125 சிசி பைக் வாங்க வேண்டும். நான் ஹோண்டா ட்ரீம் யுகா, சுஸ¨கி ஹயாத்தே பைக்குகளை இறுதி செய்து வைத்திருக்கிறேன். எந்த பைக்கை வாங்கலாம்?

 ஹோண்டா ட்ரீம் யுகாவை வாங்குவதே நல்ல சாய்ஸ். இதனுள் இருக்கும் இன்ஜின் ஸ்ப்ளெண்டரில் இருக்கும் இன்ஜின்தான் என்பதோடு, எந்தப் பிரச்னையும் இல்லாமல் நீண்ட காலம் உழைக்கக் கூடியது. மைலேஜும் அதிகம் கிடைக்கும். சுஸ¨கி ஹயாத்தேவின் இன்ஜினும் சிறப்பான ஸ்மூத் இன்ஜின்தான் என்றாலும், ஹோண்டாவின் நம்பகத்தன்மை சுஸ¨கியில் இல்லை.

 காசி விஸ்வநாதன், அருப்புக்கோட்டை.

மோட்டார் கிளினிக்

கார் வாங்கலாம் என முடிவெடுத்து நீண்ட நாட்களாகவே ப்ராசஸில் இருக்கிறது. மாதா மாதம் புதுப் புது கார்கள் வந்து குழப்புகின்றன. இப்போது 6-8 லட்ச ரூபாய்க்குள் பெட்ரோல் கார் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். மாதம் எப்படியும் 1500 கிமீ-க்கு மேல் கார் ஓட்டுவேன். எந்த கார் வாங்கலாம்?

 6-8 லட்ச ரூபாய்க்குள் மார்க்கெட்டில் ஏராளமான கார்கள் இருப்பது உண்மைதான். ஆனால், உங்களுடைய தேவைகளை வைத்து சரியான காரை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். நீங்கள் மாதம் 1500 கிமீ-க்கு மேல் காரைப் பயன்படுத்துவீர்கள் என்கிறீர்கள். மாதம் 1500 கிமீ-க்கு மேல் பயன்படுத்தும்போது, பெட்ரோலுக்காகவே அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும். அதனால், டீசல் கார் வாங்குவதுதான் நல்ல சாய்ஸ். டீசல் மார்க்கெட்டில் ஸ்விஃப்ட் டிசையர் வாங்கலாம். ஆனால், தற்போதைய ஸ்விஃப்ட் டிசையர் டீசலை புக் செய்தால், கார் உங்கள் கைக்கு வந்து சேர குறைந்தது 6 மாதங்களுக்கு மேலாகிவிடும். உங்கள் பட்ஜெட்டில் சரியாக வரும் கார் ஃபோர்டு ஃபியஸ்டா கிளாசிக் டீசல். 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் பர்ஃபாமென்ஸ், மைலேஜ் என இரண்டிலும் சூப்பர். ஃபோர்டு, தனது கார்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் சர்வீஸ் செலவுகளைக் குறைத்துவிட்டதால், பராமரிப்பு பற்றியும் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.

 ரேணுகா, கோவை.

மோட்டார் கிளினிக்

எங்கள் வீட்டில் மொத்தம் ஆறு பேர். குடும்பத்துடன் ஆறு பேரும் வசதியாக உட்கார்ந்து பயணிக்க பாதுகாப்பான கார் வேண்டும். மாருதி எர்டிகா, ரெனோ டஸ்ட்டர், மஹிந்திரா ஙீஹிக்ஷி500, டாடா ஆரியா - இந்த கார்களில் எதை வாங்கலாம்?

 நீங்கள் வீட்டில் ஆறு பேர் என்று சொல்வதால், 5 சீட்டர் காரான ரெனோ டஸ்ட்டரை உங்கள் லிஸ்ட்டில் இருந்து தூக்கி விடுங்கள். ரெனோ டஸ்ட்டரில் பின் பக்கம் இரண்டு சீட்டுகளை வைக்க முடியும் என்று சொன்னாலும், இது எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மாருதி எர்டிகாவில் ஏழு சீட் இருக்கிறதே தவிர, இதில் ஆறு பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியாது. உங்களுக்கான கார் மஹிந்திரா ஙீஹிக்ஷி500 கார்தான். இடவசதி அதிகம் என்பதோடு ஸ்டைல், மைலேஜ், பராமரிப்புச் செலவுகள் அனைத்திலும் ஙீஹிக்ஷி500 பெஸ்ட்.

 சுதீப், டெல்லி.

மோட்டார் கிளினிக்

மோட்டார் விகடன் ஜூலை இதழில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டைப் பற்றி எழுதியிருந்தீர்கள். ஈக்கோஸ்போர்ட் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த காரை வாங்குவதற்காக காத்திருக்கிறேன். ஈக்கோஸ்போர்ட் எப்போது விற்பனைக்கு வரும்?

 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அடுத்த ஆண்டு ஜனவரி- பிப்ரவரி மாதத்தில்தான் விற்பனைக்கு வரும்.