Published:Updated:

4 மீட்டர் குவான்ட்டோ... வாங்கலாமா?

4 மீட்டர் குவான்ட்டோ... வாங்கலாமா?

4 மீட்டர் குவான்ட்டோ... வாங்கலாமா?

4 மீட்டர் குவான்ட்டோ... வாங்கலாமா?

Published:Updated:
4 மீட்டர் குவான்ட்டோ... வாங்கலாமா?
 ##~##

ஸ்கார்ப்பியோ, ஸைலோ, வெரிட்டோ, XUV 500 (இதை ஃபைவ் டபுள் ஓ என்றுதான் சொல்ல வேண்டுமாம்!) என 'ஓ’ ஒலியுடன் முடியும் பெயர் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கும் மஹிந்திரா, மினி எம்யூவிக்கு 'குவான்ட்டோ’ எனப் பெயரிட்டு இருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிசைன்

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக 'ஸ்பை’ போட்டோகிராபர்களின் இலக்காக இருந்த கார் இந்த குவான்ட்டோ. மோட்டார் விகடனின் ஸ்பை ஷாட் பகுதியிலும் அதிக முறை இடம் பிடித்த பெருமை குவான்ட்டோவுக்கு உண்டு. மினி - ஸைலோ என்று அழைக்கப்பட்ட குவான்ட்டோவின் முன் பகுதி, ஸைலோவையே ஞாபகப்படுத்துகிறது. இதனால், காரின் முன் பக்கத்தைப் பார்ப்பவர்கள் யாரும் இதை புதிய கார் என்று சொல்லமாட்டார்கள். உயரமான ஹெட்லைட்ஸ் மற்றும் பம்ப்பர்கள் ஸைலோவின் ஜெராக்ஸ்!

காரின் பின் பக்கத்தைப் பொறுத்தவரை, ஸைலோவை அப்படியே பாதி வெட்டியது போலவே இருக்கிறது குவான்ட்டோ. ஸைலோ போலவே வந்து பின்னால் சட்டென முடிந்து விடுவதால், ஸைலோவைவிட உயரமான காராகத் தெரிகிறது குவான்ட்டோ. ஸைலோவில் இருப்பது 16 இன்ச் வீல். குவான்ட்டோவில் இருப்பதோ 15 இன்ச் வீல். கதவைத் திறப்பதுபோல் டிக்கி கதவைத் திறக்க முடியும் என்பதோடு, எஸ்யூவி ஃபீல் வர வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டு இருக்கும் ஸ்பேர் வீலுக்கு கவரும் உண்டு. ஸ்பேர் வீல் எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ் என்பதால், ஸ்பேர் வீலைச் சேர்க்காமல் குவான்ட்டோவின் நீளம் 3985 மிமீ. இதனால், மத்திய அரசின் சின்ன கார் வரைமுறைக்குள் வந்து வரிச் சலுகை பெறுகிறது குவான்ட்டோ!

உள்ளே!

பாடி ஆன் ஃப்ரேம் சேஸி என்பதால், கொஞ்சம் துள்ளிக் குதித்துதான் காருக்குள் ஏற வேண்டும். காருக்குள் ஏறியவுடன் வெளியே குறையாகத் தெரிந்த அத்தனையும் மறந்துபோய் விடுகிறது. ஸைலோவின் அதே 2760 மிமீ வீல்பேஸ் என்பதால், காருக்கு உள்ளே எவ்வளவு இட வசதி இருக்கும் என்பதை நீங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள். பின் பக்க இருக்கை வரை ஸைலோவுக்கும், குவான்ட்டோவுக்கும் இட வசதியில் எந்த வித்தியாசமும் இல்லை. டேஷ் போர்டு அப்படியே ஸைலோதான்!

4 மீட்டர் குவான்ட்டோ... வாங்கலாமா?

டயல்கள், எண்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. சுவிட்சுகள், ஸ்டீயரிங் எல்லாமே கடினமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளது. டிரைவர் சீட்டில் உட்கார்ந்ததும் ஒரு பெரிய காருக்குள் உட்கார்ந்திருக்கும் ஃபீல் வந்துவிடுகிறது. சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியும். ஆனால், இந்த லீவரைப் பயன்படுத்துவதற்குள் 'ஆணியே புடுங்க வேண்டாம்’ என்று உங்கள் மனதுக்குள் ரிங் அடிக்க ஆரம்பித்து விடும்! அந்த அளவுக்கு இந்த லீவர் பயன்படுத்துவதற்கு அசௌகரியமாக இருக்கிறது.

4 மீட்டர் குவான்ட்டோ... வாங்கலாமா?

ஸ்டீயரிங்கை வலது பக்கம் திரும்பும்போது 'ஏ’ பில்லர் பார்வைக்கு இடைஞ்சலாக இருக்கிறது.  கால்களை ஓய்வாக வைத்துக் கொள்ள 'டெட் பெடல்’ உண்டு! அதேபோல், டிரைவர் சீட் அருகே வைக்கப்பட்டு இருக்கும் ஆர்ம் ரெஸ்ட் உயரமாக இருப்பதோடு, கியர் மாற்றுவதற்கு இடைஞ்சலாகவும் இருக்கிறது.

தண்ணீர் பாட்டில்கள் வைக்க காருக்குள் ஏராளமான கப் ஹோல்டர்கள் இருக்கின்றன. நடு வரிசை இருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்கார முடியும். சின்ன காரான குவான்ட்டோவில் ஏழு பேர் உட்கார முடியும் என்பதுதான் ஆச்சரியம். மடித்துக் கொள்ளும் வகையில், பின் பக்கம் இரண்டு இருக்கைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஏழு பேர் காரில் பயணிக்கவில்லை என்றால், சீட்டை மடித்துவிட்டு டிக்கியில் பொருட்கள் வைத்துக் கொள்ளலாம். கடைசி வரிசையின் இருபுறமும் லேசாகத் திறந்துகொள்ளும் வசதியுடன் குவார்ட்டர் கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு பெரிய எஸ்யூவியை ஹேட்ச்பேக்கில் சுருக்கப் பார்த்திருக்கிறார்கள். அதில் ஓரளவுக்கு மஹிந்திரா வெற்றியும் பெற்றிருக்கிறது.

4 மீட்டர் குவான்ட்டோ... வாங்கலாமா?

இன்ஜின்

நீளத்தில் காரை நான்கு மீட்டருக்குள் சுருக்கி விட்ட மஹிந்திரா, சின்ன கார் சலுகையைப் பெற நான்கு சிலிண்டர் கொண்ட 2.2 லிட்டர் டீசல் இன்ஜினை, அப்படியே மூன்று சிலிண்டர் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜினாக மாற்றி விட்டது. இந்த காமென் ரெயில் டீசல் இன்ஜின், 100 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. ஓட்டும்போதும் ஒரு பெரிய காரை ஓட்டுகிறோம் என்கிற உணர்வையே குவான்ட்டோ ஏற்படுத்துகிறது.  பொதுவாக, மூன்று சிலிண்டர் கார்களில் இன்ஜின் சத்தம் அதிகமாகக் கேட்கும். ஆனால், குவான்ட்டோவில் அது நன்றாகவே கன்ட்ரோல் செய்யப்பட்டுள்ளது.

4 மீட்டர் குவான்ட்டோ... வாங்கலாமா?

1500 ஆர்பிஎம்-ல் இருந்து கார் சீற ஆரம்பிக்கிறது. அதுவரை டர்போ லேக் அதிகம். இரண்டாவது கியரில் கூட இழுக்கச் சிரமப்படுகிறது. இதனால், நகருக்குள் ஓட்டும்போது அடிக்கடி கியர்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். மஹிந்திரா சொல்வது போல் இன்ஜினின் சக்தி 100 bhp நிஜமாகவே கிடைக்கிறதா என்று சந்தேகம் எழும்புகிறது. 3500 ஆர்பிஎம்-க்கு மேல் என்னதான் ஆக்ஸிலரேட்டரை விடாமல் மிதித்தாலும், கார் சக்தி போதாமல் திணறுகிறது. 0-100 கி.மீ வேகத்தை ரொம்பவும் பொறுமையாக 17.41 விநாடிகளில் கடக்கிறது குவான்ட்டோ. நீளத்தையும், இன்ஜின் திறனையும் குறைத்த மஹிந்திரா, காரின் எடையைக் குறைக்காமல் விட்டதே இதற்குக் காரணம். இந்த சின்ன காரின் எடை என்ன தெரியுமா? 1640 கிலோ!

கியர் பாக்ஸும் ஆரம்பத்தில் பயன்படுத்துவதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கிறது.

சஸ்பென்ஷன் மற்றும் கையாளுமை

குவான்ட்டோவின் மிகப் பெரிய ப்ளஸ் சஸ்பென்ஷன்தான். எல்லாவிதமான மேடு பள்ளங்களையும் எளிதாகச் சமாளிக்கிறது. எந்தவித அதிர்வுகளோ, குலுங்கல்களோ இல்லை. ஐந்து அல்லது ஆறு பேர் சென்றாலும், மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், ரைடு குவாலிட்டியை இன்னும் கொஞ்சம் டியூன் செய்திருக்கலாம். சாதாரண சாலைகளில் சற்று பவுன்ஸியாகவே இருக்கிறது குவான்டோ!

பெரிய ஸ்டீயரிங் ஒரு சிறு அசைவுக்குக் கூட அதிரடியாகத் திரும்புகிறது. இது போன்ற செட்-அப், சிட்டியில் கட் அடித்து வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு வசதியாக உள்ளது. ஆனால், ஹைவேயில் ரிலாக்ஸாக காரை ஓட்ட முடியாது. டர்னிங் ரேடியஸ் மிகவும் குறைவு என்பதால், திருப்புவதற்கு மிகவும் சுலபமான காராக இருக்கிறது குவான்ட்டோ.

குவான்ட்டோவின் விலை உயர்ந்த வேரியன்ட்டில் ரிவர்ஸ் பார்க்கிங் அஸிஸ்ட், ஏபிஎஸ், இரண்டு காற்றுப் பைகள் எனப் பல வசதிகள் உள்ளன. சென்னையில் விலை குறைந்த வேரியன்ட்டின் ஆன் ரோடு விலை 7.06 லட்சம்.  ஹூண்டாய் ஐ20 டீசல் காரின் விலை உயர்ந்த மாடலை விட இது ஒரு லட்ச ரூபாய் குறைவு!

4 மீட்டர் குவான்ட்டோ... வாங்கலாமா?
4 மீட்டர் குவான்ட்டோ... வாங்கலாமா?

சின்ன கார் மார்க்கெட்டுக்குள் நுழைய விரும்பிய மஹிந்திரா, ரொம்பவும் தெளிவாக தாங்கள் மிகவும் எக்ஸ்பர்ட்டான யூட்டிலிட்டி வாகன ரூட்டையே தேர்ந்தெடுத்து இருக்கிறது. ஹேட்ச்பேக் கார்களின் இட வசதி பிடிக்காமல், சஸ்பென்ஷன் பிடிக்காமல், ஆனாலும் சின்ன கார்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்குத் தான் குவான்ட்டோ மிகப் பொருத்தமாக இருக்கும். நகரப் பயன்பாட்டுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட கார் என்பதை, இதன் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் தெளிவுபடுத்தி விடுகிறது. இந்த காரை வைத்துக்கொண்டு நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்வதெல்லாம் கொஞ்சம் சிரமம்தான்!

குவான்ட்டோ, ஹேட்ச்பேக் செக்மென்டில் கார் வாங்க நினைக்கும் பெரிய குடும்பங்களை, தன் பக்கம் இழுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!