Published:Updated:

மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 என்ன ஸ்பெஷல்?

சி.வி.ராமன் இயக்குநர் மாருதி ஆராய்ச்சி மற்றும் டிசைன் துறைவி.ஐ.பி. பேட்டி

மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 என்ன ஸ்பெஷல்?

சி.வி.ராமன் இயக்குநர் மாருதி ஆராய்ச்சி மற்றும் டிசைன் துறைவி.ஐ.பி. பேட்டி

Published:Updated:
 ##~##

கொச்சி விமான நிலையத்தில் இருந்து, சுமார் ஒரு மணி நேர பயண தூரத்தில் இருக்கும் அதிரப்பள்ளி என்ற சுற்றுலா தலத்தை, ஒரு மினி நயாகரா என வர்ணிக்கலாம். பசுமையான பிரதேசத்தில் பயணம் செய்வது ஒரு தனி அனுபவம். அந்த அனுபவத்தை மேலும் பரவசமாக்கியது ஆல்ட்டோ 800.  

''இத்தனை நாளாகப் பொத்தி வைத்து பாதுகாத்து வந்த ஆல்ட்டோ 800 இதோ!'' என்று நம் முன்பு சிகப்பு நிற ஆல்ட்டோ 800 காரை நிறுத்தினார் சி.வி.ராமன். இவர், மாருதி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் டிசைன் துறையின் இயக்குனர். ''காரை அருகில் சென்று பாருங்கள்; கதவைத் திறந்து உள்ளே பாருங்கள்; உட்கார்ந்து பாருங்கள்; ஓட்டிப் பாருங்கள். ஆனால், காரின் புகைப்படத்தை மட்டும் இப்போதைக்கு பிரசுரிக்கக் கூடாது!’ என ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பக்கத்து சீட்டில் வந்து உட்கார்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நாங்கள் எழுதினால், அது ரோடு டெஸ்ட்! அதைப் பிறகு வைத்துக் கொள்கிறோம். இது உங்கள் நேரம். படத்தை வரைந்து பாகங்களைக் குறிப்பது மாதிரி, காரைக் காட்டி அதில் நடந்திருக்கும் மாற்றங்களைச் சொல்லுங்கள்!'' என்றோம்.

மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 என்ன ஸ்பெஷல்?

''ஆல்ட்டோ என்பது நம் நாட்டில் அதிகமாக விற்பனையாகும் கார். மக்களின் மனம் கவர்ந்த கார். தற்போது விற்பனையில் இருக்கும் ஆல்ட்டோவின் ஒரு சில அம்சங்கள் இதில் அப்படியே இருக்கின்றன என்றாலும், இந்த ஆல்ட்டோ 800 புத்தம் புதிய மாடல். இதன் கூரை இப்போது, கடல் அலையின் வடிவில் காரின் முன்பு உயரமாக துவங்கி, காரின் பின்னால் சரியும் அழகை மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள். இந்த சரிவின் கடைசியில், லேசாக ஸ்பாய்லரின் சாயல் இருப்பதும் கூடுதல் அழகு!

மலர் மொட்டுகள் போல இருக்கும் ஹெட்லைட்ஸ், கிரில்லில் சேர்ந்திருக்கும் க்ரோம் பூச்சு என்று ஆல்ட்டோவின் வெளிப்புறத்தில் ஆங்காங்கே அழகைக் கூட்டி இருக்கிறோம். இந்த ஆல்ட்டோ, தற்போது விற்பனையில் இருக்கும் ஆல்ட்டோவைவிட உயரத்திலும் அகலத்திலும் ஒரு சில மில்லி மீட்டர்கள் அதிகரித்திருக்கிறது. ஆனால், இதில் உட்கார்ந்து பார்த்தால் ஹெட் ரூம் மற்றும் ஷோல்டர் ரூம் ஆகியவை நிறையவே பெரிதாகி இருப்பதை உணர முடியும். இதன் நீளம் குறைந்திருந்தாலும், இதன் கேபின் இட வசதியோ அல்லது டிக்கியின் வசதியோ குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!''

''ஸ்டைலிங் ஓகே! காரின் உள்ளலங்காரத்தில் நடந்தப்பட்டுள்ள மாறுதல்கள் மக்களுக்கு ஆறுதல் தருமா?''

''ஆறுதல் இல்லை. ஆனந்தத்தையே கொடுக்கும். காரின் உள்ளே உட்காரும் எவருக்கும் அழகைவிட தாராளமான இட வசதி முக்கியம். இந்த ஆல்ட்டோ 800 காரில் இந்த வசதி கூடி இருக்கிறது. காரின் முன் சீட்டில் இருப்பவர்களுக்கு மட்டு மல்ல, பின் சீட்டுகளில் இருப்பவர்களும் முன்பை விட இப்போது மேலும் காலை நீட்டி வசதியாக உட்கார முடியும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், காலை நீட்டும் இடம் 15 மிமீ அதிகமாகி இருக்கிறது. அதேபோல, காருக்குள் ஏறுவதும் இறங்குவதும் இப்போது மேலும் சுலபம்!

காரின் டேஷ் போர்டைப் பார்த்தீர்களா? பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிளாஸ்டிக்ஸில் துவங்கி டிசைன் வரை, எல்லா விஷயங்களிலும் புதுமையைச் சுவாசிக்க முடியும். ஸ்டீயரிங் வீல் துவங்கி, ஏ.சி வென்ட், இருக்கைகள் என பல விஷயங்களில் புத்துணர்வைக் கூட்டி இருக்கிறோம். பவர் விண்டோஸின் சுவிட்சுகள் இப்போது கியர் லீவருக்கு அருகில் இடம் மாறி இருப்பதால், டிரைவர் மட்டும் அல்லாது அவருக்கு அருகில் இருப்பவரும் இதைச் சுலபமாக இயக்க முடியும். தண்ணீர் பாட்டில் மற்றும் டேஷ் போர்டில் பொருட்களை வைக்க இப்போது மேலும் இடம் கூடி இருக்கிறது!''

''சரி, பெர்ஃபாமென்ஸ் எப்படி?''

தற்போது விற்பனையில் இருக்கும் அதே எஃப்-8-டி இன்ஜின்தான். ஆனால், இந்த ஆல்ட்டோவில் டார்க் 11 சதவிகிதம் கூடி இருக்கிறது. இன்ஜினுக்குள் ஏற்படும் உரசல்களைக் குறைத்திருப்பதும் இதற்கு இன்னொரு முக்கியக் காரணம். எப்போதுமே ஆல்ட்டோவில் சக்திக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், இப்போது இந்த சக்தி மேலும் அதிகரித்திருப்பதை லோ-எண்ட் துவங்கி மிட்-ரேஞ்ச் ஹை எண்ட் என எல்லா ரேஞ்சிலும் உணர முடியும். தற்போது விற்பனையில் இருக்கும் ஆல்ட்டோவின் மைலேஜ் 19.75 கி.மீ. ஆனால், இந்த ஆல்ட்டோ-800 காரின் மைலேஜ் 22.7 கி.மீ. கியர் பாக்ஸில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், தற்போது விற்பனையில் இருக்கும் மாடலில் இருக்கும் சின்னச் சின்ன உறுத்தல்களைக் களைந்துவிடும்!''

''ஆல்ட்டோ என்றாலே, பாதுகாப்பு விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படித்தான் என்று பெயர் இருக்கிறதே?''

''இந்த ஆல்ட்டோவில் டிரைவரின் பாதுகாப்புக்காக ஒரு காற்றுப் பை கொடுக்கப்பட்டு இருக்கிறது. காரின் பேனல்களும் மேலும் கூடுதல் உறுதிகொண்ட ஸ்டீலினால் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலின் மீது அக்கறை கொண்ட நாங்கள், சிஎன்ஜியில் இயங்கும் ஒரு வேரியன்ட்டையும் விற்பனை செய்ய இருக்கிறோம்.

தற்போதைய கணக்குப்படி இதுவரை இருபது லட்சம் பேர் ஆல்ட்டோவைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்று சாலையில் ஓடும் கார்களில் பதினைந்து சதவிகிதம் ஆல்ட்டோதான்! ஆல்ட்டோவுக்கு என்று மக்கள் மத்தியில் ஒரு தனி நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை ஆல்ட்டோ 800 நிச்சயம் மேம்படுத்தும் என்பது உறுதி'' என்றுவிட்டு காரின் சாவியைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொன்னார் சி.வி.ராமன்.

- பி.ஆரோக்கியவேல்