Published:Updated:

புஷ்பா.க்கள் ஓட்டிய வெஸ்பா!

புஷ்பா.க்கள் ஓட்டிய வெஸ்பா!

புஷ்பா.க்கள் ஓட்டிய வெஸ்பா!

புஷ்பா.க்கள் ஓட்டிய வெஸ்பா!

Published:Updated:
 ##~##

து பழையதோ, அதுவே புதியது - இதுதான் லேட்டஸ்ட் ஃபேஷனுக்கு உலகம் சொல்லும் இலக்கணம். இந்த இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பியாஜியோ வெஸ்பா. இதை யார் ஓட்டினாலும் சிக்னல், பார்க்கிங், சாலை என எல்லா இடத்திலும், இதன் கிளாஸிக் டிசைன் பார்ப்பவர்களின் கண்களை அகலமாக்கும். 

சென்னை ராமாவரத்தில் இருக்கும் எஸ்.ஆர்.எம் பல் மருத்துவக் கல்லூரிக்கு வெஸ்பாவை எடுத்துச் சென்று சில மாணவிகள் முன்பு நிறுத்தினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''செம க்யூட்டா இருக்கு. ஒரு ரவுண்ட் ஓட்டிப் பார்க்கலாமா?'' என ஆசையாகக் கேட்டவர் பெயர் சிவகாமி. கல்லூரி வளாகத்துக்குள் சர்ர்ரென சிவகாமி ஒரு ரவுண்டு சுற்றி வர... வெஸ்பா, கல்லூரியில் இருந்த மற்ற மாணவிகளையும் இழுத்து வந்து நம் முன் நிறுத்தியது.

புஷ்பா.க்கள் ஓட்டிய வெஸ்பா!

''வாவ்... சூப்பர் ஸ்பீடு கன்ரோல். ஹேண்டல் பண்றது ரொம்ப ஈஸியா இருக்கு. சீட் ரொம்பவே கம்ஃபர்டபிளா இருக்கு. பிக்-அப் சூப்பர். ஆனா, சீட் உயரமா இருக்கறதால, பேலன்ஸ் பண்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. சீட்டோட உயரத்தைக் கொஞ்சம் குறைச்சு இருந்தா இன்னும் நல்லா இருக்கும்'' என்று இன்ஸ்டன்ட்டாக டெஸ்ட் ரிப்போர்ட் கொடுத்தார் சிவகாமி.

அடுத்து வெஸ்பாவை யார் ஓட்டுவது என்று நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர் ஸ்வாதி. டெஸ்ட் ரைடு முடிந்ததும், ''மிரர் சும்மா மிரட்டுதுங்க! இது பக்காவா இருக்கறதால, ஸ்கூட்டருக்கு சூப்பர் லுக் தருது. கிளாஸிக் ஹெட் லைட் டிசைன் அமேஸிங்!'' என்று வியந்தவரிடம் இருந்து ஸ்கூட்டரைப் பறித்துக் கொண்டு பறந்தவர் பவித்ரா.

புஷ்பா.க்கள் ஓட்டிய வெஸ்பா!

''ஹே... நான் டிசைட் பண்ணிட்டேன். நான் அடுத்து வாங்கப் போற ஸ்கூட்டர் இதுதான். சும்மா ஸ்பீடு அள்ளுதுப்பா! நல்ல வெயிட் சப்போர்ட் இருக்கு. ஹெல்மெட் வைக்கக் கூடிய இடம் தாராளமா இருக்கறதால, நிறைய பொருட்கள் வைக்கலாம். என்ன... பொண்ணுங்க, பசங்க ரெண்டு பேரும் பயன்படுத்துற மாதிரியான ஸ்கூட்டர். அதனால, லேடீஸ் மட்டுமே பயன்படுத்துற ஸ்கூட்டர்ங்கிற தனி கான்செப்ட்ல இது அடங்காது!'' என்றவரை முந்திக் கொண்டு வந்தார் ராஷி,

''நான் ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன்'' என்று ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்தவர் தான், கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, பட்டாம் பூச்சி போல ரிட்டன் வந்தார்.

புஷ்பா.க்கள் ஓட்டிய வெஸ்பா!

''என்னோட ஃபேவரைட் கலர் மஞ்சள். ஸோ, ஐ லவ் திஸ் கலர் அண்டு திஸ் ஸ்கூட்டர். பெட்ரோல் டேங்க் இருக்கிற இடம் நல்ல வசதியா இருக்கு. லாங் டிராவல் போனாலும் சோர்வு தெரியாது. ஆனா, ஏதோ ஒரு சவுண்ட் மட்டும் வந்துகிட்டே இருக்கு. அந்த சவுண்ட் வந்ததுன்னா ஊரே வேடிக்கை பார்க்கும்!'' - இது ராஷியோட ஸ்டேட்டஸ்.

''இது மாதிரி ஸ்கூட்டர்னாலே மழைத் தண்ணீரில் போனால் ஆஃப் ஆயிடும். மழைக் காலத்தில காலையில ஸ்டார்ட் செய்ய உதை உதைன்னு உதைச்சாலும் லேசில் ஸ்டார்ட் ஆகாதே... இந்த விஷயத்தில் வெஸ்பா எப்படி?'' என்று ஷர்மிளி கேள்விகளைக் கேட்டுவிட்டு, ஒரு பெரிய ரவுண்ட் போய்விட்டு வந்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.

அடுத்து, தமீமிடம் சரண்டர் ஆனது வெஸ்பா. ஸ்டார்ட் செய்யும்போது இருந்த ஸ்மைல், ஒரு ரவுண்ட் போய் வந்த பிறகு கொஞ்சம் குறைந்திருந்தது. ''ஸ்கூட்டர் நல்ல உயரம். நார்மலா, பொண்ணுங்க கொஞ்சம் ஷார்ட்டாதான் இருப்பாங்க. கால் கீழ வெச்சு பேலன்ஸ் பண்ற அளவுக்கு உயரம் குறைவா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். ரோட்ல பந்தாவா ஓட்டிட்டுப் போனா, பசங்க மனசுல மத்த பொண்ணுங்ககிட்ட இருந்து நம்மள தனியா காண்பிக்கும்!'' என்று முடித்தார் அவர்!

அப்போ, கிளாஸிக் டிசைன்தானே லேட்டஸ்ட் பேஷன்?!

புஷ்பா.க்கள் ஓட்டிய வெஸ்பா!