Published:Updated:

விரட்டும் ஹாமில்ட்டன்.. மிரட்டும் அலான்சோ!

விரட்டும் ஹாமில்ட்டன்.. மிரட்டும் அலான்சோ!

விரட்டும் ஹாமில்ட்டன்.. மிரட்டும் அலான்சோ!

விரட்டும் ஹாமில்ட்டன்.. மிரட்டும் அலான்சோ!

Published:Updated:
விரட்டும் ஹாமில்ட்டன்.. மிரட்டும் அலான்சோ!
 ##~##

ரு மாத ஓய்வுக்குப் பின்பு, புயலாக சீற ஆரம்பித்திருக்கிறார் லூயிஸ் ஹாமில்ட்டன். பெல்ஜியத்தில் நடைபெற்ற ரேஸில் விபத்தின் காரணமாக வெளியேறியவர், இத்தாலியில் வெற்றி பெற்று அசத்தினார். அதனால், சாம்பியன்ஷிப் பட்டத்தை ஜெயிக்க ஃபெர்னாண்டோ அலான்சோவுடன் மீண்டும் மோதுகிறார் லூயிஸ் ஹாமில்ட்டன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 பெல்ஜியம்

ஃபார்முலா-1 ரேஸின் 12-வது சுற்று, பெல்ஜியத்தின் ஸ்பா நகரில் செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற்றது. ஸ்பா நகரில் உள்ள ஃப்ரான்காசாம்ப்ஸ் ரேஸ் டிராக்தான், ஃபார்முலா-1 நடைபெறும்

விரட்டும் ஹாமில்ட்டன்.. மிரட்டும் அலான்சோ!

ரேஸ் டிராக்குகளில் அதிக லேப் தூரம் கொண்டது. மொத்தம் 7 கி.மீ தூரம் கொண்ட இந்த ரேஸ் டிராக், விபத்துகளுக்குப் பெயர் போன த்ரில்லிங் டிராக் ஸ்பாட். ஆபத்தான வளைவுகள் கொண்டது என்பதால், இந்த டிராக்கில் போட்டியைக் காண உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள்.

மெக்லாரன் அணியின் ஜென்சன் பட்டன், சாபர் அணியின் கொமொய் கோபயாஷி ஆகியோர், சனிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களில் இருந்து ரேஸைத் துவக்கினார்கள். லோட்டஸ் ரெனோ அணியின் கிமி ராய்க்கோனன், மூன்றாவது இடத்தில் இருந்து துவக்கினார்.

ரசிகர்களும், ரேஸ் ஆர்வலர்களும் எதிர்பார்த்தது போலவே, விபத்துடன் துவங்கியது பெல்ஜியம் ரேஸ். போட்டி துவங்கிய சில விநாடிகளிலேயே, லோட்டஸ் ரெனோ அணியின் ரொமெய்ன் கிராஸினின் கார் கட்டுப்பாட்டை இழந்து, ரேஸ் டிராக்கில் எட்டு போட்டு வட்டமடிக்க... பின்னால் வந்த லூயிஸ் ஹாமில்ட்டன், ஃபெர்னாண்டோ அலான்சோ, செர்ஜியோ பெரேஸ் ஆகியோரின் கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி ரேஸ் டிராக்கே களேபரம் ஆனது. டயர், பாடி பார்ட்ஸ் என நான்கு கார்களின் பாகங்களும் உடைந்து சிதறின. லூயிஸ் ஹாமில்ட்டன், 'மூளை இருக்கா..?’ என கை காட்டிக்கொண்டே கிராஸினை நோக்கி வர, கார் அதிகம் பாதிப்படைந்த ஃபெர்னாண்டோ அலான்சோ காரைவிட்டு வெளியே வராததால், ரேஸ் டிராக்கில் பதற்றம் நிலவியது.

விரட்டும் ஹாமில்ட்டன்.. மிரட்டும் அலான்சோ!

பின்பு, ரேஸ் டிராக்கில் இருந்து நான்கு கார்களும் வெளியேற்றப்பட்டு, சேஃப்டி கார் மூன்று லேப்புகள் வரை பின் தொடர்ந்து வர... ரேஸ் நடைபெற்றது. பெல்ஜியம் ரேஸ் போட்டி மைக்கேல் ஷூமேக்கரின் 300-வது போட்டி என்பது மட்டும் அல்ல... பெல்ஜியத்தில்தான் ஷூமேக்கர் முதன்முறையாக ஃபார்முலா-1 ரேஸ் ஓட்டினார். அதனால், இது அவருக்கு டபுள் ஸ்பெஷல் ரேஸ். இதனால், ஷூமேக்கர் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். ஷூமேக்கரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. விறுவிறுவென நான்காவது இடத்துக்கு முன்னேறினார்.

இதற்கிடையே 29-வது லேப்பின்போது டயரை மாற்றிக் கொண்டு மீண்டும் ரேஸ் டிராக்குக்குள் நுழைந்த நரேன் கார்த்திகேயனின் கார், எந்தக் காரணமும் இல்லாமல் ரேஸ் டிராக்கை விட்டு வெளியேறி, பாதுகாப்புச் சுவரில் முட்டிக் கொண்டு நின்றது. இந்த விபத்தில் நரேன் கார்த்திகேயனின் இடது காலில் அடிபட... வலியால் துடித்தார் நரேன். மெக்கானிக்குகள் ஒழுங்காக டயரை மாற்றாமல் விட்டதே விபத்துக்குக் காரணம் என்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே பட்டன், வெட்டல், ஷூமேக்கர் ஆகியோரின் முதல் மூன்று இடங்களுக்கான போட்டா போட்டி உச்சத்தில் சென்று கொண்டு இருந்தது. 34-வது லேப்பின்போது ஷூமேக்கரின் மெர்சிடீஸ் காரின் வேகம் படிப்படியாகக் குறைய... பின்னால் வந்தவர்கள் எல்லோரும் முன்னேற... ஆறாம் இடத்துக்குப் பின்தங்கினார் ஷூமேக்கர்.

விரட்டும் ஹாமில்ட்டன்.. மிரட்டும் அலான்சோ!

ரேஸின் கடைசியான 44-வது லேப்பில், யாரும் முந்த முடியாதபடி முதல் இடத்தில் சென்று கொண்டு இருந்த மெக்லாரன் அணியின் ஜென்சன் பட்டன், வெற்றிக் கோட்டை முதலில் தொட்டு வெற்றி பெற்றார். ஜென்சன் பட்டன் பெல்ஜியத்தில் பெறும் முதல் வெற்றி என்பதோடு, இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற சீன ரேஸ் வெற்றிக்குப் பிறகு, இதுதான் பட்டனின் இரண்டாவது வெற்றி. 10-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய செபாஸ்ட்டியன் வெட்டல், பல சோதனைகளைக் கடந்து பெல்ஜியம் ரேஸில் இரண்டாம் இடம் பிடித்தார். லோட்டஸ் ரெனோ அணியின் கிமி ராய்க்கோனன் மூன்றாம் இடம் பிடித்தார். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த மைக்கேல் ஷூமேக்கர் ஏழாவதாக ரேஸை முடித்தார்.

இத்தாலி!

ஃபார்முலா-1 போட்டியின் 13-வது ரேஸ், இத்தாலியின் மோன்ஸா நகரில் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற்றது. மோன்ஸாவில் உள்ள ஆட்டோட்ரோமா ரேஸ் டிராக்தான் உலகின் அதிவேகமான ரேஸ் டிராக். இதனால், இதை மேஜிக் டிராக் என்று சொல்வார்கள். அதிகபட்ச வேகமாக மணிக்கு 350 கி.மீ வேகம் வரை கார்கள் பறக்கும். ஓவர்டேக் செய்ய சாதகமான ரேஸ் டிராக் இது. இதில், செப்டம்பர் 8-ம் தேதி தகுதிச் சுற்று ரேஸ் நடைபெற்றது. மெக்லாரன் மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன், ஜென்சன் பட்டன் ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களில் இருந்து ரேஸைத் துவக்க தகுதி பெற்றனர். பெராரியின் ஃபிலிப் மாஸா மூன்றாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

ரேஸ் துவங்கியதுமே இரண்டாம் இடத்தில் இருந்த ஜென்சன் பட்டனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார் ஃபெராரியின் ஃபிலிப் மாஸா. முதல் இடத்தில் இருந்த லூயிஸ் ஹாமில்ட்டனையும் மாஸா துரத்த ஆரம்பிக்க... முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடினார் லூயிஸ். இதற்கிடையே பிட் லேனில் ஆரம்பித்து ரேஸ் டிராக்கில் அலான்சோவுக்கு வழிவிடாமல் தொடர்ந்து தடுத்து ரேஸ் ஓட்டிக்கொண்டு இருந்தார் செபாஸ்ட்டியன் வெட்டல். இத்தாலியில் ஃபெராரி ரசிகர்களால் நிரம்பி வழிந்ததால், அலான்சோவுக்கு ஆதரவாகக் குரல்கள் கிளம்ப, செபாஸ்ட்டியன் வெட்டல் கண்டுகொள்வதாக இல்லை. வெட்டல் தனது காரால் அலான்சோவின் காரை இடிக்க முயல, இடியில் இருந்து தப்பிக்க முயன்ற அலான்சோ, 250 கி.மீ வேகத்தில் ரேஸ் டிராக்கை விட்டு மண் தரையில் இறங்கி, புழுதியைக் கிளப்பிக் கொண்டு மீண்டும் ரேஸ் டிராக்கில் வீறு கொண்டு பறந்தார்.

விரட்டும் ஹாமில்ட்டன்.. மிரட்டும் அலான்சோ!

மேஜிக் டிராக் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், 12-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய செர்ஜியே பெரேஸ், மணிக்கு 300 முதல் 350 கி.மீ வேகம் வரை பறந்து முதல் மூன்று இடங்களுக்குள் வந்தார். தொடர்ந்து அவர் முதல் இடத்தில் சென்றுகொண்டு இருந்த ஹாமில்ட்டனுக்கே டஃப் ஃபைட் கொடுத்தார்.

இதற்கிடையே 32-வது லேப்பின்போது, காரின் எரிபொருள் செயல்பாட்டில் ஏதோ பிரச்னை கிளம்ப... ரேஸ் டிராக்கைவிட்டு வெளியேறினார் ஜென்சன் பட்டன். அலான்சோவை முன்னேறவிடாமல் தடுத்த வெட்டலுக்கு, பெனால்ட்டியாக பிட் லேனுக்குத் திரும்பிவிட்டு மீண்டும் ரேஸ் டிராக்குக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனால், ஆறாம் இடத்தில் இருந்த வெட்டல் ஒன்பதாவது இடத்துக்குப் பின் தங்கினார். 47-வது லேப்பின்போது ஆல்டனேட்டர் பிரச்னையால் ரேஸில் இருந்து வெளியேறினார் வெட்டல்.

ரேஸின் இறுதியான 53-வது லேப்பில், வெற்றிக் கோட்டை முதலில் தொட்டு வெற்றி பெற்றார் மெக்லாரன் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன். இத்தாலியில் ஹாமில்ட்டன் பெற்ற முதல் வெற்றி என்பதோடு, ஃபார்முலா-1 ரேஸில் ஹாமில்ட்டனின் 28-வது வெற்றி இது. இந்த ரேஸில் 12-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய செர்ஜியே பெரேஸ், தனது அதிரடி வேகத்தால் இரண்டாவது இடம் பிடித்தார். இத்தாலியின் ஃபெராரி ரசிகர்களை ஏமாற்றாமல் மூன்றாவது இடத்தில் ரேஸை முடித்தார் ஃபெர்னாண்டோ அலான்சோ.

இதுவரை 13 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ 179 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். மெக்லாரன் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன் 142 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், லோட்டஸ் ரெனோ அணியின் கிமி ராய்க்கோனன் 141 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன், சிங்கப்பூரில் ஃபார்முலா-1 ரேஸின் 14-வது சுற்று செப்டம்பர் 23-ம் தேதி நடந்து முடிந்திருக்கும்!

>>சார்லஸ்