Published:Updated:

தீப்பிடிக்க... தீப்பிடிக்க...

நேஷனல் ரேஸ்!

தீப்பிடிக்க... தீப்பிடிக்க...

நேஷனல் ரேஸ்!

Published:Updated:
 ##~##

தினைந்தாவது ஜே.கே. டயர் நேஷனல் ரேஸிங் சாம்பியன்ஷிப்பின் நான்காவது சுற்று, சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெற்றது. சென்னை ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருக்க... இந்த ரேஸுக்கு  எதிர்பார்ப்பு அதிகம். ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், செம த்ரில்லிங்காக நடந்து முடிந்தது. ரேஸ் டிராக்கில் உண்மையிலேயே கார் தீப்பிடித்து எரியும் அளவுக்கு சூடு பறந்தது.

 இந்தியன்  டூரிங் கார்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் ரேஸில், வெற்றி பெற்றவர் டைகர் ஸ்போர்ட் இந்தியா சார்பில் களமிறங்கிய கோவையைச் சேர்ந்த அர்ஜுன் பாலு. புள்ளி பட்டியலில் இப்போதுவரை முதல் இடத்தில் இருப்பவரும் இவரே! பிக்  பூட்ஸ் ரேஸிங்கின் லீலா கிருஷ்ணனும், பெர்ஃபாமென்ஸ் ரேஸிங்கின் சித்தார்த் கிஷோரும் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்தனர்.

தீப்பிடிக்க... தீப்பிடிக்க...

மறுநாள் பிற்பகல் நடந்த இரண்டாவது ரேஸ், 'ரேஸுன்னா... இதுதாண்டா ரேஸ்’ என ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும் அளவுக்கு அவ்வளவு விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருந்தது. வெற்றியை நோக்கி அர்ஜுன் பாலு முன்னேற... இரண்டாம் இடத்துக்கான போட்டி லீலா கிருஷ்ணனுக்கும், ராஜ் விர்தனுக்கும் இடையே கடுமையாக இருந்தது. ஆனால், எட்டாவது லேப்பில் இரண்டாம் இடம் நோக்கி முன்னேறிய ராஜ்விர்தனின் கார், அவரின் உயிருக்கே ஆபத்தைக் கொண்டுவரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்ஜின் சூடு தாங்காமல் கார் தீப்பிடித்து எரிய, டிராக்கை விட்டு லாவகமாக புல் தரையில் காரை இறக்கி, பத்திரமாக காரை விட்டு வெளியேறினார் ராஜ்விர்தன். அந்த ரேஸ், எட்டாவது லேப் உடன் முடிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. முதல் ரேஸில் வெற்றி பெற்ற அதே மூன்று பேர் இந்த ரேஸிலும் வெற்றி பெற்றனர்.

தீப்பிடிக்க... தீப்பிடிக்க...

எல்.ஜி.பி. பார்முலா-4

முதல் ரேஸில், டார்க் டான் ரேஸிங்கைச் சேர்ந்த அஷ்வின் சுந்தருக்கும், மார்ஸ் ரேஸிங் சரண் விக்ரமுக்கும் கடுமையான போட்டி நிலவிய போதும், ஒரு சில லேப்களிலேயே மிகச் சுலபமாக லீடு எடுத்தார் அஷ்வின் சுந்தர். அதன் பின், கடைசி வரை அவரது ஆதிக்கம் இருந்தது. அஷ்வினும் விக்ரமும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க, மீக்கோ ரேஸிங்கின் விஷ்ணு பிரசாத் மூன்றாம் இடம் பிடித்தார்.

அன்று நடந்த இரண்டாம் ரேஸிலும், அஷ்வின் வெற்றி பெறுவார் என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்க, போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அஷ்வினின் கார் கியர் பாக்ஸ் மக்கர் செய்தது. அதை சரியாகப் பயன்படுத்தி லீடு எடுத்து, மூன்றாம் இடத்திலிருந்து ரேஸை ஆரம்பித்த சரண் விக்ரம், முதல் இடம் பெற்றார். எனினும், கடைசி வரை போராடிய அஷ்வினுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. மூன்றம் இடம் பிடித்தவர் டார்க் டான் ரேஸிங்கின் சரோஷ் ஹட்டாரியா.

மறுநாள் நடந்த மூன்றாவது ரேஸிலும், வெற்றி பெற்றவர் பட்டியலில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. முதல் ரேஸைப் போலவே இந்த ரேஸிலும் அஷ்வினும் விக்ரமும் முதல் இரண்டு இடங்களைப் பெற, மூன்றாம் இடத்துக்கான போட்டி கடுமையாக இருந்தது. ரேஸின் ஆரம்பத்தில் இருந்தே விஷ்ணுவுக்கும் சரோஷ் ஹட்டாரியாவுக்கும் இடையே போட்டி இருந்தபோதிலும், இறுதியில் சரோஷ் மூன்றாம் இடம் பிடித்தார்.

தீப்பிடிக்க... தீப்பிடிக்க...

போலோ கப்

போலோ கப்பை பொறுத்தவரை, தன் முதல் இடத்தை யாருக்கும் விட்டுத் தர முடியாது என பிடிவாதமாக  இருப்பவர் மும்பையின் அமேயா வால்வாக்கர். அந்த பிடிவாதம் தந்த தெம்பில், இந்த தடவையும் அசால்ட்டாக வெற்றி பெற்றார் வால்வாக்கர். மும்பையின் ரஹில் நூரனியும்,கோவாவைச் சேர்ந்த அவ்டும்பர் ஹெடேயும் முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தைப் பிடித்தனர்.

பிறகு நடந்த இரண்டாவது ரேஸில், ரிவர்ஸ் கிரிட் ஃபார்மட்டில் வால்வாக்கர் எட்டாவது இடத்தில் இருந்து ரேஸை தொடங்க வேண்டியிருந்தது. இந்த ரேஸில் ஆறாம் இடமே பிடிக்க முடிந்தாலும், சிறந்த லேப் டைமிங்கைப் பதிவு செய்து, தன் திறமையை நிரூபித்தார் வால்வாக்கர். சென்னையின் சந்தீப் குமார் வெற்றி பெற்ற இந்த ரேஸில், மும்பையின் சவுரவ் இரண்டாம் இடத்தையும், இந்த சாம்பியன்ஷிப்பின் ஒரே வெளிநாட்டு டிரைவரான மெக்சிக்கோவின் டியகோ மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இந்தியன் ஜூனியர் டூரிங் கார்ஸ்

முந்தைய ரவுண்டில் வெற்றி பெற்ற ஃபஹாத் குட்டியின் மீதே அனைவரின் கண்களும் இருக்க, இந்த ரவுண்டின் இரண்டு ரேஸ்களிலும் வெற்றி பெற்று ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்தார் சென்னையின் ஃபெரோஸ்கான். முதல் ரேஸில், எரம் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த கேரளாவின் தில்ஜித் இரண்டாம் இடம் பிடிக்க, மூன்றாவதாக வந்தவர் மெகா ரேஸிங்கின் ஸ்ரீராம்.

இரண்டாவது ரேஸில் தில்ஜித்தை மூன்றாவது இடத்துக்குத் தள்ளிவிட்டு, இரண்டாம் இடம் பிடித்தார் மொட்டோரேவ் இந்தியாவின் இம்மானுவேல் கிளார்க்!

தீப்பிடிக்க... தீப்பிடிக்க...