Published:Updated:

புல்லட் பிரதர்ஸ்!

புல்லட் பிரதர்ஸ்!

புல்லட் பிரதர்ஸ்!

புல்லட் பிரதர்ஸ்!

Published:Updated:

கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து நம் வாசகர், 'எங்க ஊர்ல செமத்தியான ரீ-டிசைன் வொர்க் ஷாப் இருக்குதுங்க பாஸ். மிஸ் பண்ணிடாதீங்க’ என மோட்டார் விகடனுக்குச் செய்தி சொல்ல, அடுத்த நாள் பிற்பகலில் அன்னூரில் ஆஜரானேன். அவிநாசி செல்லும் சாலையில் இருக்கும் 'அசோகன் ஆட்டோ ஒர்க்ஸ்’தான் வாசகர் சொல்லியிருந்த அந்த வொர்க் ஷாப். அதன் உரிமையாளர் அசோகனிடம் பேச ஆரம்பித்தபோது, அத்தனை நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியுமாக ஒரு லைஃப் ஸ்டோரி கிடைத்தது. ஆம், அந்த வொர்க் ஷாப்பில் அசோகனோடு உழைப்பது அவரது உடன்பிறந்த மூன்று தம்பிகள். ''இங்கு புல்லட், ஜாவா போன்ற பைக்குகள் எவ்வளவு மோசமான நிலையில் கொண்டுபோய்ச் சேர்த்தாலும், அதைப் புத்தம் புது பைக்காக மாற்றும் கலையில் வல்லவர்கள்!'' என்கிறார்கள் கிளாஸிக் பைக் பிரியர்கள்.

புல்லட் பிரதர்ஸ்!

இனி அசோகன் பேசட்டும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ##~##

''புல்லட்டுக்கு ஒர்க் பண்ற திருப்தி வேற எதுலேயும் கிடைக்குறதில்லைங்க. அன்னூர் சுற்று வட்டாரத்துல சுமாரா ஐநூறு புல்லட் இருக்குமுங்க. பெரும்பாலான ஆளுங்க எங்ககிட்டதான் சர்வீஸுக்கு வர்றாங்க. கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி பக்கமெல்லாம் இருந்து ரீ-டிசைன் வேலைக்கும், ஃபுல் சர்வீஸுக்கும் கொண்டு வர்றாங்க. குறிப்பா, காலேஜ் பசங்க நிறைய பேரு இப்போ புல்லட்டை விரும்புறாங்க. அதுவும் அந்த காலத்து ஸ்டாண்டர்டு மாடல் சத்தம் வர்ற மாதிரி புல்லட்டை ரெடி பண்ணித் தரச் சொல்றாங்க. டபுள் சீட் போடுறது, அலாய் வீல் மாட்டுறது, இப்போ இருக்கிற மாடலை 62 மாடலுக்கு மாத்துறதுன்னும் பண்ணித் தரச் சொல்லிக் கேட்பாங்க. பாடி முழுக்க துரு ஏறிப் போய் காயலான் கடைக்குக்கூட ஆகாத பைக்கை எடுத்து முழுக்க மாத்திடுவோம். முழு வேலையையும் முடிக்க சுமார் எழுபதாயிரம் வரைக்கும் ஆகுமுன்னு வெச்சுங்க!

புல்லட்டுகளையும் சேர்த்து மொத்தம் குறைஞ்சது இருநூறு வண்டிங்க நம்ம ஷெட்டுக்கு வருதுங்க. அண்ணன் தம்பிங்க நாலு பேரும் வேலைங்களைப் பகிர்ந்துக்குவோம். கோவை, ஈரோடு சென்னையில இருந்து எல்லா ஸ்பேர்ஸும் வாங்கிக்குவோம். ஜாவா, யெஸ்டி வண்டிகளுக்கு மட்டும் மைசூருக்குப் போக வேண்டியிருக்கும். எவ்வளவு மோசமா வண்டி வந்து நின்னாலும் சரி, சர்வீஸ் பண்ணாம அனுப்புனதா சரித்திரமே இல்லைங்க. நாலு பேருல யாரோ ஒருத்தர் உட்கார்ந்து வேலையை முடிச்சுப் போடுவோம்!

புல்லட் பிரதர்ஸ்!
புல்லட் பிரதர்ஸ்!

கோயமுத்தூர் இளைஞர்களுக்கு புல்லட்டோட சைலன்சர், சீட், பெட்ரோல் டேங்க், லைட்ஸ் இதையெல்லாம் மிரட்டலா டிசைன் பண்ணிப் போடுறதுல ஆர்வம் அதிகம். இங்கே அன்னூர், அவினாசி, சத்தியமங்கலம் மாதிரியான ஏரியாவுல இருந்து வர்ற விவசாயிங்க ஒரிஜினாலிட்டியை எதிர்பார்க்கிறாங்க. பெயின்டிங்ல ஆரம்பிச்சு சின்ன லைட் வரைக்கும் எல்லாமே ஒரிஜினலா வேணுங்கிறதுல உறுதியா இருப்பாங்க. எங்களுக்கு கேரளா, கர்நாடகான்னு ஆரம்பிச்சு சட்டீஸ்கர் வரைக்கும் கஸ்டமருங்க இருக்கிறாங்க. கேரளக்காரங்க இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ்ல ரொம்ப கவனமா இருந்து அதை சூப்பரா டியூன் பண்ணித் தரச் சொல்லி கேட்கிறாங்க. இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு ரகமுங்க!

ஒரு உண்மை தெரியுமா? ஐ.டி கம்பெனியில வேலை பார்க்கிற நிறைய பேரு இப்போ புல்லட் ஓட்டத்தான் ஆசைப்படுறாங்க. செகண்ட் ஹேண்ட் புல்லட்டுங்களை எங்கெல்லாமோ அலைஞ்சு திரிஞ்சு வாங்கிட்டு வந்து, நம்மகிட்டே கொடுத்து ஒரிஜினல் ஸ்பேர்ஸ் போட்டு ரெடி பண்ணித் தரச் சொல்லி அவங்க காட்டுற ஈடுபாட்டைப் பார்க்கிறப்ப அவ்வளவு சந்தோஷமா இருக்குது. காரணம், இத்தனை நாளும் பெருமைக்காக புல்லட்டை வெச்சிருக்கிற பெரிய குடும்பத்து ஆளுங்களால புல்லட்டுங்க அழியாம இருக்குதுன்னு நினைச்சோம், ஆனா, புல்லட்டைத் தேடித் தேடி வாங்குற இந்த பிள்ளைங்களால புல்லட்டுங்க மறுபடியும் சந்தையில சக்கப் போடு போடுதுங்க!''- அசோகன் சொல்லும்போது, அவர் குரலில் மட்டுமல்ல; முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

புல்லட் பிரதர்ஸ்!