Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ ரெனோ டஸ்ட்டர்

ரீடர்ஸ் ரிவியூ ரெனோ டஸ்ட்டர்

ரீடர்ஸ் ரிவியூ ரெனோ டஸ்ட்டர்

ரீடர்ஸ் ரிவியூ ரெனோ டஸ்ட்டர்

Published:Updated:
ரீடர்ஸ் ரிவியூ ரெனோ டஸ்ட்டர்
 ##~##

நான் பிசினஸ் மேன். என்னிடம் ஏற்கெனவே ஹூண்டாய் சான்ட்ரோ, ஆக்ஸன்ட், செவர்லே ஸ்பார்க், ஸ்விஃப்ட் டிசையர் ஆகிய கார்கள் இருக்கின்றன. தொழில் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்கள் அதிகம். மேலும், அடிக்கடி கரடுமுரடான பாதைகளிலும் செல்ல வேண்டியது இருக்கும். அதனால், எனக்கு ஏற்ற எஸ்யூவி அல்லது எம்யூவி காரைத் தேடிக்கொண்டு இருந்தேன். குறைந்தபட்சம் தினசரி 100 கி.மீ ஆவது பயணம் செய்வேன். பெட்ரோல் விற்கும் விலைக்கு பெட்ரோல் கார் எனக்குக் கட்டுப்படி ஆகாது. அதனால், என் பிசினஸ் தேவைகளுக்கும், குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்களுக்கும் ஏற்ற டீசல் கார் வாங்க முடிவு செய்தேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டொயோட்டா இனோவா அல்லது மிட்சுபிஷி பஜேரோ என முடிவு செய்து இருந்தேன். இதில், பஜேரோ எனக்கு மிகவும் பிடித்த கார். அதன் தோற்றம், கையாளுமை, சொகுசு என என்னை மிகவும் வசீகரிக்கும் கார். ஆனால், அதன் விலை 25 லட்சத்துக்கும் அதிகம்.

பஜேரோவுடன் ஒப்பிடும் போது இனோவா விலை குறைவு; சிறந்த காரும்கூட! ஆனால், புக் செய்துவிட்டுக் காத்திருக்க வேண்டும். இரண்டில் எதை வாங்குவது என மனம் அலைபாய்ந்தபோது, பஜேரோ எனத் தீர்மானித்து விட்டேன். புக் செய்துவிடலாம் என்ற முடிவில் இருந்த போது தான், 'ரெனோ டஸ்ட்டர் அறிமுகமாகி இருக்கிறது. பார்க்க கம்பீரமாக இருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு வரலாம்’ என என் நண்பர் செந்தில்குமார் அழைத்தார். இதை பஜேரோவுடன் ஒப்பிட முடியாது என்றாலும், டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாமே என, கோவையில் இருக்கும் ரெனோவின் டீலரான ஆனைமலை ஏஜென்ஸீஸ் ஷோ ரூமுக்கு நானும் நண்பரும் சென்றோம்.

ரீடர்ஸ் ரிவியூ ரெனோ டஸ்ட்டர்
ரீடர்ஸ் ரிவியூ ரெனோ டஸ்ட்டர்

முதல் பார்வையிலேயே இதன் கம்பீரம் எனக்குப் பிடித்துப் போனது. மேலும், 25 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும் காரில் உள்ள அத்தனை சொகுசு வசதிகளும், ரெனோ டஸ்ட்டரில் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

டஸ்ட்டரில் பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின்கள் இருந்தாலும், டீசல் இன்ஜினில் 85 bhp, 110 bhp என இரண்டு ஆப்ஷன்கள் இருந்தன. என் தேவைகளையும் விருப்பங்களையும் கேட்ட ஷோ ரூமின் பொது மேலாளர், 85 bhp இன்ஜினை எனக்குப் பரிந்துரைத்தார். டஸ்ட்டரை ஏதாவது மலைப் பாதையில்தான் டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும் என என் விருப்பத்தைச் சொன்னதும், மருதமலை வரை சென்று வருமாறு அனுப்பி வைத்தார்.

நகருக்குள் ஓட்டும்போதும், நெடுஞ்சாலையில் ஓட்டும்போதும் எந்தச் சிரமத்தையும் நான் உணரவில்லை. அதேபோல், சின்னச் சின்ன மேடு பள்ளங்களில் அலுங்கல் குலுங்கல் இல்லாமல் சென்றது டஸ்ட்டர். மலைப் பாதையிலும் எந்தச் சுணக்கமும் இல்லாமல் ஏறி இறங்கியது. டிரைவிங் அனுபவமும் மிகச் சிறப்பாக இருந்தது. அதனால், காரை மீண்டும் ஷோ ரூமில் கொண்டு விடும்போதே ரெனோ டஸ்ட்டரை புக் செய்து விட்டேன். நான் வாங்கிய ஸிஙீலி வேரியன்ட்டின் கோவை ஆன் ரோடு விலை 10.45 லட்சம்தான்.

ரீடர்ஸ் ரிவியூ ரெனோ டஸ்ட்டர்

கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி காரை டெலிவரி எடுத்தேன். இரு தினங்களுக்குப் பிறகு, கோவையில் இருந்து தஞ்சாவூர் வரை சென்று திரும்பினேன். அப்போதுதான் இந்த காரின் மேலும் பல சாதக பாதகங்களையும் உணர முடிந்தது. மிகச் சிறப்பான ஒரு பயண அனுபவத்தைத் தந்தது டஸ்டர். காலையில் 7.30 மணிக்கு தஞ்சாவூர் புறப்பட்டு மாலை நான்கு மணிக்கு கோவை திரும்பிவிட்டேன். வீட்டில் நான் தஞ்சாவூர் சென்று வந்தேன் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை. ஏனென்றால், பயணக் களைப்பே இல்லாமல் இருந்தேன். டயர்களின் அளவு பெரிது. அதேபோல், அகலமும் அதிகம். அதனால், மிகச் சிறப்பான ரோடு கிரிப் கிடைக்கிறது. நெடுஞ்சாலையில் ஒரு லிட்டர் டீசலுக்குக் கிட்டத்தட்ட 19.2 கி.மீ மைலேஜ் தருகிறது. நகருக்குள் எனக்கு 17 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கிறது. இதைச் சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஆனால், அதுதான் உண்மை.

காரின் வீல் ஆர்ச்சுகள் கம்பீரமாக இருக்கின்றன. கிரவுண்ட் கிளியரன்ஸ் தாராளமாக உள்ளது. அதேபோல், இன்ஜின் சத்தமும் பெட்ரோல் கார் போல மிகக் குறைவாகவே கேட்கிறது. டிரைவர் சீட்டை நமக்கேற்றபடி அட்ஜஸ்ட் செய்து உட்கார்ந்தால், டிரைவிங் பொசிஷன் மிகச் சிறப்பாக இருக்கிறது. பின் பக்க இருக்கைகளில் நல்ல இட வசதி. அதனால், நீண்ட தூரப் பயணங்களில் முதுகு, கால் வலி ஏற்படவில்லை.

சரி, இதன் குறைபாடுகள்? சேஃப்டி லாக் சிஸ்டம் எனக்குப் பிடிக்கவில்லை. காரணம், இப்போது வெளிவரும் பல கார்களில், கார் புறப்பட்ட சில விநாடிகளில் தானாகவே சென்டர் லாக் ஆகிவிடும். டஸ்ட்டரிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், அப்படி லாக் ஆன பிறகும் உள்ளே இருந்து முன் பக்கக் கதவுகளைத் திறக்க முடியும். 'எமெர்ஜென்ஸி எக்ஸிட்’ என்று காரணம் சொல்லப்பட்டாலும், முன் பக்கம் குழந்தைகளை அமர வைத்துச் செல்லும் நம் நாட்டில் இது ஆபத்தாகப்படுகிறது. இதை டிரைவர் சைடு கதவுக்கு மட்டுமாவது கொடுத்திருக்கலாம்.

அதேபோல், இவ்வளவு பெரிய காரில் 35 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் மட்டுமே பொருத்தி இருப்பது கேட்கவும், பார்க்கவும் நன்றாகவே இல்லை. ஹாரன் சத்தம் பைக்கில் இருப்பதுபோல கேட்கிறது. மேலும், ரூஃப் லைட் வெளிச்சம் காருக்குள் முழுமையாகப் பரவவில்லை. முன் பக்க இருக்கைகளின் லெக் ஸ்பேஸில் சின்ன எல்இடி லைட்டுகள் இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருக்கும். இருட்டில் துழாவ வேண்டி இருக்கிறது. எல்லாம் சரி, காரின் முன் பக்கம் தண்ணீர் பாட்டில் வைக்க ஏன் எந்த இடமும் ஒதுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. டோர் பாக்கெட்டில் பாட்டில் வைக்க கொடுத்துள்ள இடத்தில், அரை லிட்டர் பாட்டில் மட்டுமே வைக்க முடியும். சின்னச் சின்ன கப் ஹோல்டர்கள், டோர் பாக்கெட்டுகள், க்ளோவ் பாக்ஸ் என இருந்தாலும், நீண்ட தூரப் பயணங்களின்போது முன் பக்கம் பெரிய தண்ணீர் பாட்டில் வைக்க முடியாத குறை சிரமத்தை ஏற்படுத்துகிறது.

ரீடர்ஸ் ரிவியூ ரெனோ டஸ்ட்டர்