Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - யமஹா R 15 2.0

ரீடர்ஸ் ரிவியூ - யமஹா R 15 2.0

ரீடர்ஸ் ரிவியூ - யமஹா R 15 2.0

ரீடர்ஸ் ரிவியூ - யமஹா R 15 2.0

Published:Updated:
ரீடர்ஸ் ரிவியூ - யமஹா R 15 2.0
 ##~##

பைக் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். என் நண்பர்கள் வட்டாரத்தில் விதவிதமான பைக்குகள் இருக்கின்றன. அதில், டிவிஎஸ் அப்பாச்சி அதிகம்! பைக் வாங்கினால் அப்பாச்சிதான் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், நாளைடைவில் அப்பாச்சியின் நடமாட்டம் நகருக்குள் அதிகமாக இருக்கவே, மனம் மாறிவிட்டேன். அப்போது என் நண்பர்கள் வட்டாரத்தில் யமஹா ஆர்15 பைக் வந்து சேர்ந்தது. அதைக் கண்ட உடனேயே... இதுதான் நமக்கான பைக் என்று முடிவு செய்துவிட்டேன். என் நண்பர்களிடம் யமஹா ஆர்-15 பைக் இருந்தாலும், அதை நான் ஓட்டிப் பார்க்க விரும்பியதே இல்லை. காரணம், சொந்தமாக பைக் வாங்கிய பிறகுதான் யமஹா ஆர்15 பைக்கை ஓட்ட வேண்டும் என்று சபதமே எடுத்திருந்தேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிப்ளமோ படித்து முடித்தபோது, வீட்டில் யமஹா பைக் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டேன். அதற்கு வீட்டில், குறைவான பட்ஜெட்டில் பைக் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். ஆனால், நான் பைக் வாங்கினால் யமஹா மட்டும்தான். வேறு எந்த பைக்கும் வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். பிறகு ஒப்புக்கொண்டு, 'யமஹா பைக் வாங்கினால், நாங்கள் வேறு எந்தச் செலவும் செய்யமாட்டோம். பைக் வாங்கித் தருவதுடன் சரி’ என்ற கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டேன். நான் எப்போதுமே தனித்தன்மையோடு தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவேன். அதனால்தான், பிடிவாதம் பிடித்து இந்த யமஹா ஆர்15 2.0 பைக்கை வாங்கினேன். திருச்சியில் இந்த பைக் குறைவாக இருந்தாலும், என்னுடைய ஏரியாவில் நான் மட்டும்தான் யமஹா ஆர்15 2.0 வைத்து இருக்கிறேன். நான் ஒரு பைக் ரேஸர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. சென்னையில் கல்லூரியில் சேர்ந்ததும் ரேஸ் டிராக்குக்குச் செல்வதுதான் என் முதல் வேலையாக இருக்கும்.

ரீடர்ஸ் ரிவியூ - யமஹா R 15 2.0

டீலர் ஷிப் அனுபவம்

யமஹா ஆர்-15 வாங்கத் தயாரானதும், முதலில் அதைப் பற்றி விசாரித்தேன். பைக் வெள்ளைக் கலராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று நினைத்து, திருச்சி ஜெமினி ஷோ ரூமுக்குச் சென்றேன். ஆனால், ஷோ ரூமில் இருந்த வெள்ளைக் கலர் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டதால், ஒரு வாரம் கழித்து வரச் சொன்னவர்கள், 'வெள்ளைக் கலர் பைக் ஒன்று இருக்கிறது. ஆனால், அதன் பாடியில் சின்ன ஸ்க்ராட்ச் இருக்கிறது. வேண்டுமென்றால் அதை மாற்றித் தருகிறோம். வாங்கிக் கொள்கிறீர்களா’ என்று கேட்டார்கள். 'புதிய பைக் வாங்கப் போகிறோம். ஏன் இப்படி சமரசம் செய்து கொள்ள வேண்டும்?’ எனத் தீர்மானித்து, சிகப்பு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

காலையில் 8.30 மணிக்குச் சென்றவன், மாலை 6.30 மணிக்கு பைக்கை கையோடு டெலிவரி எடுத்துக் கொண்டுதான் வெளியே வந்தேன். அதுவரை அங்கே இருந்த மற்ற பைக்குகளை வேடிக்கை பார்க்க... அவற்றை விசாரிக்க என்று இருந்தேன். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் மிகப் பொறுமையாக, அங்கிருந்த அனைவருமே பதில் சொன்னார்கள். அவர்கள் பேசிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பிடித்தது

இளைஞர்களைக் கவரும் இதன் வடிவம்தான் மிகப் பெரிய ப்ளஸ் என்பேன். பைக்கின் ஸ்டைல் ஓர் முக்கியமான அம்சம். 135 கி.மீ வேகத்தில் டபுள்ஸ் அடித்தால்கூட சின்ன சத்தமோ, எந்தத் தடுமாற்றமோ இல்லை. செம ஸ்மூத்! மற்ற சில பைக்குகளில் 60 கி.மீ வேகத்தில் சென்றாலே சத்தம் வர ஆரம்பித்து விடும்.

பிடிக்காதது

எவ்வளவு வசதிகள் இருந்தாலும், யமஹா ஆர்15 பைக்கில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம், இதன் இன்ஜின் இன்னும் பழைய மாதிரியே இருப்பதுதான். 150 சிசி இன்ஜின் அளவை இன்னும் கொஞ்சம் உயர்த்தி இருக்கலாம். இப்போது இருக்கும் டிரெண்டுக்கு ஏற்றது போல இன்ஜினையும் மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்.

X Factor

என் நண்பர்கள் வட்டத்தில் நான்தான் யமஹா 2.0 பைக் வைத்து இருப்பவன். அதுவே ஒரு கெத்துதான். ரோட்டில் செல்லும்போது என் பைக்கைத் திரும்பிப் பார்க்காமல் செல்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பைக்கை பார்க்கிங் செய்யும் இடங்களில் பைக் பற்றிய விசாரணைக் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஓய்ந்து போய் விட்டேன்.

ரீடர்ஸ் ரிவியூ - யமஹா R 15 2.0

தொகுப்பு: ச.மஞ்சுளா