Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
 ##~##

சுபாஷ்குமார், கள்ளக்குறிச்சி. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டார் கிளினிக்

நான் 2006 மாடல் ஹூண்டாய் சான்ட்ரோ கார் வைத்திருக்கிறேன். டயர் அடிக்கடி பஞ்சர் ஆகிறது. அதனால், ட்யூப் லெஸ் டயர் பொருத்தலாமா? ட்யூப்லெஸ் டயர் பொருத்தினால், ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? 

மோட்டார் கிளினிக்

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பழைய மாடல் கார் என்பதால், டயரை மட்டும் மாற்றுவது சரியான முடிவாக இருக்காது. வீல்களும் அரித்துப் போயிருக்கும். இதில், ட்யூப்லெஸ் டயர்களைப் பொருத்தும்போது, காற்று லீக் ஆகலாம். அதனால், வீல்களையும் சேர்த்து மாற்றுவதுதான் நல்லது. புதிதாக டயர் வாங்கும் போது, 6 முதல் 8 மாதத்துக்குள் தயாரிக்கப் பட்டவையாக வாங்குவது நல்லது.

 நிரஞ்சன், மதுரை.

மோட்டார் கிளினிக்

நான், மனைவி, 5 வயது மகள் என சின்னக் குடும்பம் எங்களுடையது. என் மனைவி தினமும் அலுவலகத்துக்குச் சென்று வர, வார இறுதி நாட்களில் உறவினர் வீடு, சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வர கார் வேண்டும். பெட்ரோல் கார் வாங்குவதா அல்லது டீசல் கார் வாங்குவதா எனக் குழப்பமாக இருக்கிறது?

மோட்டார் கிளினிக்

நீங்கள் சிட்டிக்குள்தான் அதிகம் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதால், பெட்ரோல் காரை வாங்குவதே நல்லது. ஹூண்டாய் ஐ10, மாருதி வேகன்-ஆர் போன்ற கார்களின் விலை, டீசல் கார்களைவிட குறைவாக இருக்கும். மேலும், நீண்ட காலப் பயன்பாட்டின்போது, மெயின்டனன்ஸ் செலவுகளும் அதிகமாக இருக்காது!

 ஏ.ஜெயலிங்கம், திருநெல்வேலி.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் யமஹா FZ16 பைக் வைத்திருக்கிறேன். இந்த பைக் லிட்டருக்கு 35 கி.மீதான் மைலேஜ் தருகிறது. ஆனால், மோட்டார் விகடனில் நகருக்குள் 41.4 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 46.5 கி.மீ-யும் மைலேஜ் தரும் என எழுதி இருக்கிறீர்கள். என்னுடைய பைக்கில் ஏதாவது பிரச்னையா? ஏன் அதிக மைலேஜ் கிடைக்கவில்லை?

மோட்டார் கிளினிக்

மைலேஜ் என்பது ஒருவரின் ரைடிங் ஸ்டைலுக்கு ஏற்றபடி மாறுபடும். அது மட்டுமல்லாமல், சாலைகளின் தன்மை, பைக்கில் பயணம் செய்பவர்களின் எடை, இன்ஜின் கண்டிஷனைப் பொருத்தும் மாறுபடும். மேலும், மைலேஜ் அதிகம் கிடைக்க, வாரத்துக்கு ஒருமுறை டயரில் சரியான அளவு காற்று இருக்கிறதா என செக் செய்வது அவசியம். அதேபோல், சரியான இடைவெளிகளில் பைக்கை சர்வீஸ் செய்து விடுங்கள். கூடுமானவரை தரமான பெட்ரோல் கிடைக்கும் பங்க்காகத் தேர்ந்தெடுத்து அதில் மட்டுமே பெட்ரோல் போடுங்கள். முக்கியமாக, விர்ர்விர்ர்ரெர்னு இன்ஜினை டார்ச்சர் செய்து ஓட்டக் கூடாது. சரியான வேகத்தில் கியர்களை மாற்ற வேண்டும். கிளட்ச்சை கியர் மாற்றும்போது மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். யமஹா FZ 16 பைக்கில் ஓப்பன் டைப் செயின் என்பதால், மாதம் ஒருமுறை செயினை அட்ஜஸ்ட் செய்வதையும் வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் செய்தால், மைலேஜில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும்!

 ஜான் மனோகர், மதுரை.

மோட்டார் கிளினிக்

நான் டொயோட்டா ஃபார்ச்சூனர் வாங்கலாம் என நினைக்கிறேன். ஆனால், ஃபார்ச்சூனரில் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, அதிர்வுகள் அதிகம் தெரிகிறது. இதனால், காரை வாங்கிவிட்டு அதன்

மோட்டார் கிளினிக்

சஸ்பென்ஷனில் சில மாற்றங்கள் செய்யலாம் என யோசிக்கிறேன். சஸ்பென்ஷனில் மாற்றங்கள் செய்ய முடியுமா?

மோட்டார் கிளினிக்

புது காரை வாங்கிவிட்டு அதன் பாகங்களில் நீங்கள் எந்த மாற்றத்தைச் செய்தாலும், வாரன்ட்டி கேன்சல் ஆகிவிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். வாரன்ட்டி பிரச்னை இல்லை என்றால், உங்கள் விருப்பப்படி சஸ்பென்ஷனில் மாற்றங்கள் செய்யலாம். ஜப்பானின் டெய்ன் (TEIN) எனும் சஸ்பென்ஷன் பாகங்கள், ஆஃப்ட்டர் மார்க்கெட்டில் பிரபலம். இதை வாங்கிப் பொருத்தலாம்.

 கே.வி.எஸ்.சஜீத், கோவை.

மோட்டார் கிளினிக்

நான் ஹோண்டா ஷைன் பைக்கை, கடந்த 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். இதுவரை 65,000 கி.மீ ஓட்டி இருக்கிறேன். இப்போது ஓட்டும்போதே அடிக்கடி இன்ஜின் ஆஃப் ஆகிவிடுகிறது. இன்ஜின் ஆயிலையும் மாற்றிப் பார்த்துவிட்டேன். இந்தப் பிரச்னை தீர்வதாக இல்லை. மெக்கானிக்கிடம் காண்பித்தும் பிரச்னை தீரவில்லை. என்ன செய்யலாம்?

மோட்டார் கிளினிக்

இன்ஜின் ஓவர் ஹீட் ஆனால், கம்ப்ரஷன் லீக் ஆகி இன்ஜின் ஆஃப் ஆகும். அதேபோல், இன்ஜின் ஆயிலின் தன்மை குறைவதுதான் ஓவர் ஹீட் ஆக முக்கிய காரணம். அதனால், அடர்த்தியான அதாவது 20W50 கிரேடு இன்ஜின் ஆயிலைப் பயன்படுத்திப் பாருங்கள். மீண்டும் ஓவர் ஹீட் பிரச்னை தொடர்ந்தால், இன்ஜின் ஓவர் ஹாலிங் செய்ய வேண்டும்.

ஆர்.செல்வராஜ், தருமபுரி.

மோட்டார் கிளினிக்

நான் மாருதி ஜென் ரசிகன். பழைய கார் மார்க்கெட்டில் 2001 மாடல் மாருதி ஜென் காரைத் தேடிக் கண்டுபிடித்தேன். 1000 சிசி இன்ஜின் கொண்ட இந்த கார், 50,000 கி.மீ ஓடியிருக்கிறது. இன்ஜின் நல்ல கண்டிஷனில் இருக்கிறது. ஆனால், பாடி முழுவதுமாக துருப் பிடித்திருக்கிறது. சஸ்பென்ஷன், ஏ.சி, டயர் உள்ளிட்ட பல பாகங்களை மாற்ற வேண்டும். துருப்பிடித்த பாடி பார்ட்ஸை மாற்றிவிட்டு, முழுவதுமாக பெயின்ட் அடிக்க வேண்டும். சூப்பர் கண்டிஷனில் புது கார் போல பளபளப்பாக்க எவ்வளவு செலவாகும்?

மோட்டார் கிளினிக்

யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் உள்ள கார் மாருதி ஜென். குறைந்த பராமரிப்புச் செலவு, அதிக மைலேஜ் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. இது 1 லட்சம் கி.மீ வரை இன்ஜின் உழைக்கும். இன்ஜினை ட்யூன் செய்தால், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 18 கி.மீ வரை மைலேஜ் தரும். இன்ஜினில் வேலைகள் இல்லை என்றாலும், டிங்கரிங் மற்றும் பெயின்ட்டிங் செய்யவே 50,000 ரூபாய் செலவாகும். பின்பு சஸ்பென்ஷன், ஏ.சி, டயர், உள்பக்க பாகங்கள், சீட் ஆகியவற்றை மாற்றிவிட்டு, காரைப் பளபளவென மாற்ற குறைந்தது 50,000 ரூபாய் செலவாகும். ஒட்டுமொத்தமாக 1 லட்சம் ரூபாய் செலவழித்தால், உங்கள் ஜென் புத்தம் புது காராக மாறும்!

வெங்கடேசன், விருதுநகர்.

மோட்டார் கிளினிக்

நான் 2009-ம் ஆண்டு மாடல் பல்ஸர் 220 பைக் வைத்திருக்கிறேன். இப்போது புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் பல்ஸர் 200 என்எஸ் பைக் வாங்கலாம் என நினைக்கிறேன். என்னுடைய சாய்ஸ் சரியா?

மோட்டார் கிளினிக்

இதுவரை வந்த பல்ஸர் பைக்குகளிலேயே பல்ஸர் 200 என்எஸ், பெர்ஃபாமென்ஸ் அளவில் சிறந்த பைக். ஆனால், பழைய பல்ஸரில் இருந்ததுபோல ரைடிங் பொசிஷன் சிறப்பாக இல்லை. உயரமும் அதிகம். நீங்கள் 5.10 அடிக்கு மேல் உயரமானவர் என்றால், பல்ஸர் 200 என்எஸ் சரியான சாய்ஸாக இருக்கும்!