Published:Updated:

மற்றும் பலர்!

மற்றும் பலர்!

மற்றும் பலர்!

மற்றும் பலர்!

Published:Updated:
மற்றும் பலர்!
 ##~##

ன்னதான் நம் நாட்டின் பொருளாதாரம் அடி வாங்கி வந்தாலும், வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு நம் கார் சந்தை மீது இருக்கும் அபார நம்பிக்கை சற்றும் குறையவில்லை. அதனால், நமது கார் சந்தையைக் குறி வைத்து மேலும் பல கார் நிறுவனங்கள், இந்தியப் பயணத்துக்காக ஆயத்தமாகி வருகின்றன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடி, ஸ்கோடா என்று தன் பிராண்டுகளை நம் நாட்டில் விற்பனை செய்து வரும் ஃபோக்ஸ்வாகன், இப்போது தனது ஸ்பேனிஷ் காரான ஸீட்டையும் நம் நாட்டுக்குக் கொண்டு வர இருக்கிறது. ஸீட்டிடம் (Seat) 'இபிசா’ என்ற ஹேட்ச்பேக், Exeo செடான், மற்றும் அல்ஹம்ப்ரா (MPV)  போன்ற கார்கள் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட கார்கள்தான். இபிசா ஹேட்ச் என்பது, நம்முடைய போலோதான். நுவோ மை! பெயர்தான் வித்தியாசமாக இருக்கிறதே தவிர, இது ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வாகன் அப். ஸீட்டிடம் நல்ல கார்கள் உண்டு. ஆனால், இந்தியாவுக்கு வந்தால் விற்பனை சூடு பிடிக்க சில காலம் ஆகலாம். ஒரே மாதிரி பல கார் சாய்ஸ் இருக்கும்போது, வாங்குபவர்கள் புது பிராண்டை அணுகத் தயங்குவார்கள். அது ஸீட்டுக்குப் பெரிய சவாலாக இருக்கும். அதனால், அது விளம்பரத்துக்குப் பெரிய பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

மற்றும் பலர்!

நம் நாட்டுக்கு வர இருக்கும் அடுத்த கார் நிறுவனம் - மஹிந்திரா வாங்கியிருக்கும் சாங்யாங் மோட்டார்ஸ். கூடிய விரைவில் தனது 'ரெக்ஸ்டன் கீ’ மாடலை அது இங்கே விற்பனை செய்ய இருக்கிறது. இது, தற்போது இந்தியாவில் டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. பென்ஸில் இருந்து பெறப்பட்ட 2.7 லிட்டர் டீசல் இன்ஜின், இதற்கு சக்தியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவிலயே அசெம்பிள் செய்யப்படும். கேப்டிவா மற்றும் பார்ச்சூனருடன் நேரடியாகப் போட்டி போடும். பார்ச்சூனரை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். புதிய பூமியில் புதிய வியூகத்தை வகுக்க சாங்யாங்குக்கு மஹிந்திராவின் வழிகாட்டுதல் இருக்கும் என்றாலும், சாங்யாங்கின் இந்தியப் பயணம் அத்தனை சுலபமானதாக இருக்காது.

மற்றும் பலர்!

ரெனோ போலவே, பிரான்ஸ் நாட்டில் இருந்து இன்னொரு பிராண்ட் வருகிறது. ஆம், அது பெழோ (Peugeot). ஏற்கெனவே குஜராத்தில் தன்னுடைய தொழிற்சாலையை நிர்மாணித்துவரும் பெழோ, இப்போது சங்கடமான ஒரு சூழ்நிலையில் இருக்கிறது. ஆம், அதற்கு மூவாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட, இந்தியாவுக்கான அனைத்துத் திட்டங்களும் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இப்போது பெழோ  தன்னுடைய 301 அல்லது 508 செடானை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.  இவை முழுக்க இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றே தெரிகிறது. எனவே, விலை அதிகமாக இருக்கும்.

நிஸான் தன் பங்குக்கு டட்சன் (Datsun) என்ற பிராண்டைக் களமிறக்கத் தயாராகி வருகிறது.  டட்சன், முழுக்க முழுக்க சின்ன கார்களையே விற்பனை செய்யும். இவற்றின் விலைகள் 2 முதல் 4 லட்ச ரூபாய்க்குள்  இருக்கும். இது தவிர, ஒரு என்ட்ரி லெவல் செடான் ஒன்றும் டட்சன் தயாராக வைத்திருப்பதாகத் தகவல். இது ரஷ்ய காரான லடா கிராண்டேவின் மறுபதிப்பு. அதாவது, ரீ-பேட்ஜிங். இந்த செடான், ஸ்விஃப்ட் டிசையர் மற்றும் எட்டியோஸ் உடன் போட்டிக்கு நிற்கும். ஆனால் இது 2014- வாக்கில்தான் விற்பனைக்கு வருமாம்.  

இவை தவிர, ஃபியட் தனது ஜீப் பிராண்டை இங்கே விற்பனை செய்ய ஆர்வமாக இருக்கிறது. அமெரிக்காவில் ஹிட் அடித்த பிராண்ட் ஜீப். இதனுடைய இரண்டு சக்தி வாய்ந்த எஸ்யூவிகளான கிராண்ட் செரோகி மற்றும் ராங்ளர் ஆகியவை ஆஃப் ரோடு ஓட்டுதலில் பெயர் பெற்றவை. இந்த பிராண்டுகள் வெகுவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்.

இத்தனை பிராண்டுகள் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கும்போது, நம் நாட்டுக்குள் படையெடுத்து வர மேலும் பல நிறுவனங்கள் திட்டம் வகுத்துக் கொண்டு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!