Published:Updated:

ஹாயா... பயணிக்கலாம்!

SML ISUZU எக்ஸிக்யூட்டிவ் கோச்

ஹாயா... பயணிக்கலாம்!

SML ISUZU எக்ஸிக்யூட்டிவ் கோச்

Published:Updated:
ஹாயா... பயணிக்கலாம்!
 ##~##

ஸ்வராஜ் மஸ்டா... கமர்ஷியல் மார்க்கெட்டில் இந்தப் பெயர் செம பாப்புலர். இவ்வளவு நாளாக வெளிநாட்டைச் சேர்ந்த மஸ்டா நிறுவனத்தோடு கூட்டணி போட்டு இருந்த ஸ்வராஜ் நிறுவனம், இப்போது ஜப்பானைச் சேர்ந்த இஸுசூ நிறுவனத்தோடு இணைந்திருக்கிறது. இப்போது 'எஸ்எம்எல் இஸுசூ’ எனப் பெயர் மாற்றி இருக்கிறார்கள். கூட்டணியில் மாற்றம் ஏற்பட்ட உடன், இதுவரை ஒப்பந்த அடிப்படையில் பாடி பில்டு செய்யப்பட்டு வந்த பயணிகள் வாகனத்தை, கார் தயாரிப்பதுபோல சொந்தமாக பில்டு செய்து 'எக்ஸிக்யூட்டிவ் கோச்’ என்ற பெயரில் ரீ-லான்ச் செய்திருக்கிறது எஸ்எம்எல் இஸ¨சூ நிறுவனம்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்படி இருக்கிறது எக்ஸிக்யூட்டிவ் கோச்? 20 ஆண்டுகளாக சுற்றுலா வாகனம் ஓட்டி வரும் பலராம், மோட்டார் விகடன் குழுவோடு இந்த டெஸ்ட் டிரைவில் இணைந்து கொண்டார்.

டிசைன்

தூரத்தில் இருந்து பார்த்தால், ஏற்கெனவே பார்த்த பழைய கமர்ஷியல் வேன் போலவே இருக்கிறது எக்ஸிக்யூட்டிவ் கோச். ஆனால், கொஞ்சம் உற்றுப் பார்த்தால்தான் டிசைனில் என்னென்ன புதுமைகளைச் செய்து இருக்கிறார்கள் என்பது தெரியும். வேன் என்றாலும், ஏரோடைனமிக்காக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. நீண்டிருக்கும் ஹெட் லைட்ஸ், வால்வோ பஸ்களில் இருப்பதுபோல மிகப் பெரிய விண்ட் ஸ்கிரீன், 'ப’ வடிவ ஏர் வென்ட் என டிசைன் ஈர்க்கிறது. பின் பக்க டெயில் விளக்குகளும் புதுமையாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. கமர்ஷியல் வாகனம்தானே என தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல், இந்த வாகனம் டிசைன் செய்யப்பட்டுள்ளது என்பதற்குச் சாட்சியே இதன் பில்டு குவாலிட்டிதான். எந்த இடத்திலும் பேனல்களுக்கு இடையே இடைவெளிகள் இல்லை.

ஹாயா... பயணிக்கலாம்!

உள்ளே...

எக்ஸிக்யூட்டிவ் கோச் வாகனத்தின் பலமே உள்பக்க வடிவமைப்புதான். இந்த மாதிரியான கமர்ஷியல் வேனில், நாம் என்னெவெல்லாம் எதிர்பார்ப்போமோ அது அத்தனையும் இருக்கின்றன. எல்சிடி டிவி, ரூஃப் ஏ.சி, ஒவ்வொருவரும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள தனியாக ஏ.சி வென்ட், புஷ்பேக் சீட், நகர்த்தக் கூடிய ஹேண்டில், தரமான ஃப்ளோர்மேட், பாட்டில் ஹோல்டர் என பல சிறப்பம்சங்கள் உள்ளன. பயணிகள் தனியாகப் பயன்படுத்திக் கொள்ள ரீடிங் விளக்குகளும் உண்டு.

ஹாயா... பயணிக்கலாம்!

வெளிப்பக்கத்தைப் போலவே சீட்டுகளின் அமைப்பு மற்றும் தரம் சிறப்பாக இருக்கிறது. வால்வோ பஸ்களில் இருப்பதுபோல் பட்டனைத் தட்டினால்தான் கதவு திறக்கும். எமர்ஜென்ஸி என்றால், கண்ணாடிகளை உடைக்க சுத்தியல் ஒன்றும் உண்டு. டிரைவர் சீட் பொசிஷன் சிறப்பாக இருக்கிறது. பெடல்கள் கால்களுக்குச் சரியாக எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்ஜின் சத்தம் வேனுக்குள் மிக அதிகமாகக் கேட்கிறது. மோசமான சவுண்ட் ப்ரூஃப்பிங்தான் இதற்குக் காரணம். 100 கி.மீ வேகத்தைத் தொட்டு விட்டால், ஏதோ ராக்கெட் கிளம்புவதுபோல வேனுக்குள் சத்தம் கிளம்புகிறது.

இன்ஜின்...

4 சிலிண்டர், 3500 சிசி டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிசி அதிகம் என்றாலும் பவர் குறைவுதான். அதிகபட்சமாக 3000 ஆர்பிஎம்-ல் 102 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. பயணிகள் 13 பேரும் வாகனத்துக்குள் உட்கார்ந்துவிட்டால், இந்த பவர் பத்தாது. இதனால், நெடுஞ்சாலையில் கார்களை எல்லாம் ஓவர்டேக் செய்கிறேன் என ஆர்வக் கோளாறாகி ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும். கியர்களை மாற்றுவதற்கு அதிக சிரத்தை எடுக்க வேண்டியிருக்கிறது.

வாகனம் மிகவும் உயரமாக இருப்பதோடு, டயர்களுக்கு முன்னும் பின்னும் எக்ஸ்ட்ரா பாடி அதிகமாக இருப்பதால், ஓட்டும்போது நிலைத்தன்மை இல்லாதது போன்ற உணர்வு ஏற்படுகிறது. லேன் மாறுவதற்கு அதிகமாக யோசித்து, வேகத்தைக் குறைத்த பிறகுதான் மாற வேண்டியிருக்கிறது. இதனால், டிரைவர் கொஞ்சம் அசந்தாலும் வேன் ஸ்டெபிளிட்டியை இழந்துவிடும். இவை அனைத்துமே வாகனத்தை ஓட்டுபவருக்கு ஏற்படும் சிரமங்கள்தான்.

ஹாயா... பயணிக்கலாம்!

வாகனத்தில் உட்காருபவர்களைப் பொறுத்தவரை ராஜாதான்! சஸ்பென்ஷன் செட்டிங் சிறப்பாக இருப்பதால், அலுங்கல் குலுங்கல்களை வேனுக்குள் அதிகம் உணர முடியவில்லை.

வேன் ஓட்டுவதில் அனுபவசாலியான பலராம், ''சக்தி வாய்ந்த இன்ஜின், விசாலமான கேபின், வேனுக்குள் இருப்பவர்கள் எல்லா பக்கமும் முழுமையாக பார்த்துக் கொள்வது போன்ற கண்ணாடிகளின் அமைப்பு என வேனை ஓட்டுவதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது. நகருக்குள் ஓட்டுவதற்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், இன்ஜினின் சூடு டிரைவரின் கால்களுக்கு வருகிறது. நீண்ட தூரம் பயணிக்கும்போது டிரைவருக்கு இந்தச் சூடு சிரமத்தை ஏற்படுத்தும். மற்றபடி, பெயருக்கேற்றபடி விசாலமான, வசதியான வேன் எக்ஸிக்யூட்டீவ் கோச்!'' என்றார்.

ஹாயா... பயணிக்கலாம்!

பயன்பாட்டுக்கான கமர்ஷியல் வாகனம் என்பதை மனதில் வைத்து, சிறப்பாக எக்ஸிக்யூட்டிவ் கோச்சை டிசைன் செய்திருக்கிறார்கள். ஆனால், பயணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பதுதான் எக்ஸிக்யூட்டிவ் கோச்சின் குறையே! டிரைவர் கொஞ்சம்கூட அசராமல் வாகனத்தை ஓட்டினால், பயணிகள் ஹாயாகப் பயணிக்கச் சிறந்த வாகனம், எஸ்எம்எல் இஸுசூவின் எக்ஸிக்யூட்டிவ் கோச்!