Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

திரும்ப அழைக்கிறது  டொயோட்டா!  

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரோலா மற்றும் கேம்ரி கார்களில், பவர் விண்டோஸ் மாஸ்டர் சுவிட்சுகளில் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வருவதை அடுத்து, அதை மாற்ற முடிவு செய்திருக்கிறது டொயோட்டா. 2008-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை தயாரிக்கப்பட்ட கரோலா ஆல்டிஸ் மற்றும் 2006-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2008 ஜூலை வரை தயாரிக்கப்பட்ட கேம்ரி கார்களைத் திரும்ப அழைத்து, பிரச்னையைச் சரி செய்து தர முடிவெடுத்திருக்கிறது டொயோட்டா. உலக அளவில் இதே பிரச்னை காரணமாக, சுமார் 74 லட்சம் கார்களை டொயோட்டா திரும்ப அழைக்க இருக்கிறது! நீங்கள் இந்த இரண்டு வகை கார்களை வைத்திருந்தால், டொயோட்டா டீலரைத் தொடர்பு கொள்ளவும்! 

கார், பைக்குகளின் விலை உயர்ந்தது!  

 ##~##

கிட்டத்தட்ட எல்லா ஆட்டோமொபைல் நிறுவனங்களுமே தங்களது பெரும்பாலான வாகனங்களின் விலையை அக்டோபர் மாதம் முதல் உயர்த்திவிட்டன. சமீபத்தில் டீசல் விலை உயர்த்தப்பட்டதால், போக்குவரத்து வாகனங்களின் வாடகை உயர்வு என்பது காரணமாகச் சொல்லப்படுகிறது. ரெனோ, டஸ்ட்டர் காரின் விலையை 40 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. 5 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை  தனது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது மாருதி. செவர்லே, எட்டாயிரம் முதல் பதினெட்டாயிரம் வரை உயர்த்தி இருக்கிறது. ஃபோக்ஸ்வாகன், போலோ மற்றும் வென்ட்டோ கார்களின் விலையை 20 ஆயிரம் வரை உயர்த்தி இருக்கிறது. ஸ்கோடா, ஃபேபியாவின் விலையை நான்காயிரம் வரையும், ரேபிட் பெட்ரோல் விலையை ஐந்தாயிரமும், டீசல் விலையை 20 ஆயிரமும் உயர்த்தி இருக்கிறது. ஸ்கோடா யெட்டியின் விலை 30 ஆயிரம் உயர்ந்திருக்கிறது.

ஹோண்டா, ஆடி, நிஸான் ஆகிய நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையை உயர்த்திவிட்டன. ஹோண்டா, ஆயிரம் ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை தனது கார்களின் விலையைக் கூட்டியுள்ளது. ஆடி, க்யூ-3 காரின் விலையை 26 ஆயிரம் முதல் 63 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி இருக்கிறது.

பைக்குகளின் விலையைப் பொறுத்தவரை, 400 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை சில நிறுவனங்களின் பைக்குகளின் விலை மட்டுமே உயர்ந்து உள்ளது!

மோட்டார் நியூஸ்

வருகிறது பவர்ஃபுல் பல்ஸர் 375 சிசி பைக்!

 பஜாஜ் நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதிக்குள், 375 சிசி திறன் கொண்ட பவர்ஃபுல் பல்ஸரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. கேடிஎம் நிறுவனத்தில் 45 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் பஜாஜ் நிறுவனம், கேடிஎம் 375 மற்றும் பல்ஸர் 375 இரண்டு பைக்குகளையும் ஒரு சேர விற்பனைக்குக் கொண்டு வருகிறது. பல்ஸர் 200 என்எஸ், கேடிஎம் டியூக் 200 ஆகிய இரண்டு பைக்குகளும் ஏற்கெனவே இதேபோல் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பல்ஸர், கேடிஎம் 375 - இரண்டு பைக்குகளும் 35 தீலீஜீ சக்தி கொண்டவையாக இருக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கி.மீ வேகத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையைப் பொறுத்தவரை, கவாஸாகி நின்ஜாவை விட குறைவாக, 2 முதல் 2.5 லட்ச ரூபாய்க்குள் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது!

 பெண்களே தயாரிக்கும் யமஹா ரே!

மோட்டார் நியூஸ்

இந்தியாவிலேயே முதன் முறையாக அசெம்பிளி லைனில் முழுக்க முழுக்க பெண்களைப் பணியில் அமர்த்தியிருக்கிறது யமஹா. 'ரே’ என்ற பெயரில் பெண்கள் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் யமஹா நிறுவனம், ஸ்கூட்டர் தயாரிப்பையும் பெண்களிடமே கொடுத்திருக்கிறது. உத்திரப் பிரதேச மாநிலம் சுராஜ்பூரில் உள்ள யமஹா தொழிற்சாலையில், ரே ஸ்கூட்டரை அசெம்பிள் செய்யும் பணிக்கு மட்டும் புதிதாக 200 பெண்களை பணி அமர்த்தியிருக்கிறது யமஹா!

யமஹா ரே ஸ்கூட்டரின் சென்னை ஆன் ரோடு விலை ரூ. 53,000. 

மோட்டார் நியூஸ்

விற்பனைக்கு வந்தது ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ் லிஃப்ட்!

ஏற்கெனவே விற்பனையில் சக்கைப் போடு போடும் ஃபோர்டு ஃபிகோ, இப்போது புதிய அவதாரத்தில் களமிறங்கி உள்ளது. வெளிப்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடனும், உள்புறத்தில் ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல், புதிய சீட் டிசைனுடனும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஃபிகோவிலும் பின் பக்கம் பவர் விண்டோஸ் இல்லை. இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை (ஆன் ரோடு) பெட்ரோல் மாடலின் விலை, ரூபாய் 4.67 லட்சத்தில் இருந்தும், டீசல் மாடலின் விலை ரூபாய் 5.80 லட்சத்தில் இருந்தும் தொடங்குகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism