Published:Updated:

தேசிய பைக் ரேஸ்

சென்னை ராஸி யார்?

ந்தியன் நேஷனல் ரேஸிங் சாம்பியன் ஷிப்பின் நான்காவது சுற்று, செப்டம்பர் 29 மற்றும் 30 தேதிகளில், இருங்காட்டுக் கோட்டை ரேஸ் டிராக்கில் நடந்தது. ஹோண்டா, யமஹா டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள் நடத்திய ஒன் மேக் ரேஸ்களின் ஹை லைட்ஸ் மட்டும் இங்கே..!

ஹோண்டா - ஒன் மேக்

ஹோண்டா சிபிஆர் 250 ஆர் ரேஸின் சர்ப்ரைஸ் பேக்கேஜ், நேஷனல் சூப்பர் பைக் சாம்பியன் ரஜினி. ஷார்ட் சர்க்கியூட்டில் ஆறு லேப்புகள் கொண்டதாக நடத்தப்பட்ட இந்தப் பிரிவு ரேஸ்களில், முதல் ரேஸில் முதல் இடத்தையும், அடுத்த ரேஸில் இரண்டாம் இடத்தையும் பிடித்தார் மோட்டோ ரெவ் இந்தியா அணியின் ரஜினி. அதே அணிக்காகக் களமிறங்கிய கௌதம், முதல் ரேஸில் மூன்றாவதாக வந்தாலும், இரண்டாவது ரேஸில் முதல் இடம் பிடித்து தன் வெற்றியைப் பதிவு செய்தார்.

அடுத்து நடந்த சிபிஆர் 150 ஆர் ரேஸில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த சுமித் லூகாஸ் டோப்போ முதல் இடம் பிடித்தார்.

தேசிய பைக் ரேஸ்

டிவிஎஸ் - ஒன் மேக்

 ##~##

அப்பாச்சி 180 ஆர்டிஆர் பைக்கில், புதியவர்களுக்கான நோ வைஸ், அனுபவம் கொண்டவர்களுக்கான ஓப்பன் என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. நோ வைஸ் பிரிவின் முதல் ரேஸில் சென்னையின் அப்துல் வஹாப் முதல் இடம் பிடித்தார். இரண்டாவது ரேஸில் வஹாபை பின்னால் தள்ளிவிட்டு வெற்றி பெற்றவர் சிதம்பரத்தைச் சேர்ந்த இண்டேகாப் அலாம்.

ஓப்பன் பிரிவில் சென்னைவாசிகளின் ஆதிக்கம்தான். முதல் ரேஸில் விவேக் மணி வெற்றி பெற, இரண்டாம் ரேஸில் வெற்றி பெற்றவர் ராஜேஷ் ரத்தினக்குமார். இவர் சிபிஆர் 150 ஆர் பிரிவிலும் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யமஹா - ஒன் மேக்

நோ வைஸ் பிரிவின் முதல் ரேஸில் சென்னையின் ரமேஷ்குமார் வெற்றி பெற்றார். இரண்டாம் இடம் பிடித்தவர் இண்டேகாப் அலாம், இரண்டாவது ரேஸிலும் இருவருக்குமிடையேயான போட்டி கடுமையாக இருந்த போதிலும், இறுதியில் போராடி முதல் இடம் பிடித்தார் அலாம்.

ஓப்பன் பிரிவின் இரண்டு ரேஸ்களிலும் முதல் இடம் பிடித்தவர் சென்னை ரேஸரான ஆல்வின் ஜெபாஸ். முதல் ரேஸில் மூன்றாம் இடம் பிடித்த ஷ்யாம் ஷங்கர், எவ்வளவு போராடியும் அடுத்த ரேஸில் அவரால் இரண்டாவது இடமே பிடிக்க முடிந்தது.

-மோ.அருண்ரூப பிரசாந்த் >> ஆ.முத்துக்குமார்