Published:Updated:

ஹோண்டா பிரியோ - ரீடர்ஸ் ரிவியூ

ஹோண்டா பிரியோ - ரீடர்ஸ் ரிவியூ

ஹோண்டா பிரியோ - ரீடர்ஸ் ரிவியூ
 ##~##

நான் தென்னக ரயில்வே துறைப் பணியில் இருக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆட்டோமொபைல் மீது அளப்பரிய ஆர்வம் உண்டு. என்னிடம் ஏற்கெனவே உள்ள பஜாஜ் அவென்ஜர் பைக்கைத்தான் கார் போல பாவித்து ஓட்டி வந்தேன். அவ்வப்போது நண்பர்கள் புதிதாக வாங்கும் காரை டெஸ்ட் டிரைவ் செய்து, அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்வதில் அதீத ஆர்வம். இதனால், எனக்குச் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை, படிப்படியாக வளர்ந்து, வாங்கியே தீருவது என முடிவு எடுக்க வைத்துவிட்டது. எங்கள் குடும்பத்தில் கார் வாங்கும் முதல் ஆள் என்பதால், என் ஆசைக்கும் ஆர்வத்துக்கும் பஞ்சமே இல்லை! 

சிறந்த ஹேட்ச்பேக் பெட்ரோல் கார் வாங்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட காலக் கனவு. அதற்கான நேரம் கூடிவந்த போது, மார்க்கெட்டில் ஏராளமான ஹேட்ச்பேக் கார்கள். எதைப் பார்ப்பது, எதைத் தேர்ந்தெடுப்பது என நிறைய தடுமாறிப் போனேன்! அதனால் எனக்கு நானே சில வழிகாட்டுதல்களை ஏற்படுத்திக் கொண்டேன். அதில் முதல் பாய்ன்ட், சாலையில் அதிகமாகத் தென்படும் கார்களைத் தவிர்க்க வேண்டும். அடுத்தது, ஐந்து லட்சம்தான்  பட்ஜெட்! அதற்குள் சிறந்த காரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நான் தேர்ந்தெடுக்கும் கார், தனித் தன்மையுடன் இருக்க வேண்டும்.

ஹோண்டா பிரியோ - ரீடர்ஸ் ரிவியூ

கொஞ்சம்கூடச் சலிக்காமல் சென்னையில் இருக்கும் எல்லா பிராண்ட் கார் ஷோ ரூம்களுக்கும் ஏறி இறங்கினேன். பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், காரில் என்னென்ன வசதிகள் உள்ளன, எந்த காருக்கு என்ன ஆஃபர், விலை - இப்படி இரண்டு மாதங்கள் எல்லா கோணங்களிலும் அலசி ஆராய்ந்தேன். அதன் பிறகு ஃபியட் கிராண்டே புன்ட்டோ, மாருதி ஸ்விஃப்ட், ஹோண்டா பிரியோ, ஃபோர்டு ஃபிகோ ஆகியவற்றை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன்.

ஸ்விஃப்ட் VXi வேரியன்ட் அல்லது பிரியோ S MT வேரியன்ட் ஆகிய இரண்டில் ஒன்றை வாங்கலாம் என நினைத்தேன். காரணம், நான் டெஸ்ட் செய்த கார்களில் ஹோண்டா பிரியோ தவிர மற்ற அனைத்து கார்களிலும் ஒரு விதமான இறுக்கத்தையும் அசௌகரியத்தையும் உணர்ந்தேன். ஸ்விஃப்ட் VXi வேரியன்ட்டின் விலை 5.9 லட்சம். ஆனால், பிரியோ ஷி விஜி வேரியன்ட்டின் விலை 5 லட்சம் மட்டுமே!

ஹோண்டா பிரியோ - ரீடர்ஸ் ரிவியூ
ஹோண்டா பிரியோ - ரீடர்ஸ் ரிவியூ

இது மட்டுமல்லாமல், ஸ்விஃப்ட் VXi  வேரியன்ட்டில் ஆடியோ சிஸ்டம் இல்லை. ஆனால், பிரியோ S MT -ல் எஃப்.எம், யூஎஸ்பி ஆக்ஸ்-இன் உடன் கூடிய ஆடியோ சிஸ்டம் இருக்கிறது. மேலும், இதில் ஆடியோ சிஸ்டத்தை ஸ்டீயரிங்கில் உள்ள பட்டன்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

ஸ்விஃப்ட்டும் ஃபிகோவும் சென்னை நகரில் திரும்பிய பக்கம் எல்லாம் திரிகின்றன. ஃபியட் புன்ட்டோ தரமான கார்தான். ஆனால், அது என்னுடைய பட்ஜெட்டில் வரவில்லை. இதில், ஹோண்டா பிரியோ மட்டும் சாலையில் அரிதாகக் காணக் கூடிய காராக இருந்தது. மேலும், ஹோண்டாவின் இமேஜ், தரம் போன்றவற்றில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது.

ஹோண்டா பிரியோ - ரீடர்ஸ் ரிவியூ

சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் இருக்கும் ஒலிம்பியா ஹோண்டாவுக்கு போன் செய்தேன். சொன்னது போலவே சரியாக டெஸ்ட் டிரைவ் காருடன் என் வீட்டில் ஆஜரானார் ஒலிம்பியா நிறுவனத்தின் சேல்ஸ்மேன். டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தபோது, இதன் தாராளமான இட வசதியும், சாலையைத் தெளிவாகப் பார்க்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள டிரைவர் இருக்கையும் என்னைக் கவர்ந்தன. ஓட்டுனர் இருக்கை சரியாக எனக்கேற்ற பொசிஷனில் இருந்தது என்னை மிகவும் சௌகரியமாக உணர வைததது. ஹோண்டா ஜாஸ் காரில் உள்ள இன்ஜின்தான் இதிலும் என்பதால், சக்திக்குப் பஞ்சமில்லை. நகருக்குள் கட் அடித்து ஓட்டுவதற்கு மிகச் சுலபமாகவும் வசதியாகவும் இருந்தது பிரியோ.

பிரியோ, வெளியே பார்ப்பதற்குச் சின்ன காராகத் தோன்றினாலும், இதன் உள்பக்கம் எப்படி இவ்வளவு இட வசதியுடன் இருக்கிறது என வியந்து போனேன். இத்தனை சிறப்பம்சங்களையும் உணர்ந்த பின்புதான், பிரியோவை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதன் உள் கட்டமைப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. இதுவரை 920 கி.மீ வரை ஓட்டியுள்ளேன். எந்த விதமான அசௌகரியத்தையும் நான் உணர்ந்தது இல்லை. இது நகரத்துக்குள் 12.3 கி.மீ மைலேஜும், நெடுஞ்சாலையில் 17 கி.மீ மைலேஜும் கொடுக்கிறது.

மைனஸ்

இதன் பூட் ஸ்பேஸ் மிகவும் குறைவு. ஒரு தோல் பையை வைக்க வேண்டுமென்றால்கூட நீளவாக்கில் மட்டுமே வைக்க முடிகிறது. மேலும், பிரியோவின் ஹாரன் சத்தம் இன்னும் சற்று கூடுதலாகவும், அதே சமயம் சீரான ஓசையுடனும் இருந்திருக்கலாம். பிரியோவின் இந்த வேரியன்ட்டில் டிரைவர் இருக்கையை உயர்த்திக் கொள்ள முடியாது. ஆனால், இதே செக்மென்ட்டில் உள்ள ஃபிகோவில் இந்த வசதி இருக்கிறது. அதேபோல், பக்கவாட்டுக் கண்ணாடிகளுக்கு ஆட்டோமெட்டிக் அட்ஜஸ்ட் இல்லை. கிளட்ச் ஸ்மூத்தாக இல்லை. இன்னும் சற்று இம்ப்ரூவ் செய்திருக்கலாம்.

ஹோண்டா பிரியோ - ரீடர்ஸ் ரிவியூ

மிகப் பெரிய லக்ஸ¨ரி கார்களை ஓட்டும்போது ஏற்படும் திருப்தி, எனக்கு இதில் கிடைக்கிறது. மேலும், இதில் ஸ்டீயரிங் மிகவும் ஸ்மூத்தாக உள்ளது. இதுவரை நான் ஓட்டிய பல கார்களை அடிப்படையாக வைத்து இதைக் கூறுகிறேன். ஆனால், சின்னச் சின்னக் குறைபாடுகளை ஹோண்டா தீர்த்துவிட்டால், ஹோண்டாவும் பட்ஜெட் கார்தான் என அனைத்துத் தரப்பினரும் நம்புவார்கள்!

- ஆ.முத்துக்குமார்