Published:Updated:

''டிரைவர்களை வி.ஐ.பி.க்களாக வரவேற்போம்!

வி.ஐ.பி. பேட்டி

 ##~##

ன்று நமது நாட்டில் விற்பனையாகும் டிரக்குகளில் எண்பது சதவிகிதம் டாடா மற்றும் அசோக் லேலாண்டு டிரக்குகள் தான். 2020-ம் ஆண்டுக்குள் டிரக்குகளுக்கான தேவை ஆண்டுக்கு ஐந்து லட்சத்தைத் தாண்டும் என்பதால், இந்தியாவைத் தாண்டி இருக்கும் பல கம்பெனிகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது டிரக் மார்கெட்டில் கடை திறந்து விட்டன. 

வால்வோ, மான் ஆகிய கம்பெனிகள் பெரிய சத்தத்தோடு இந்தச் சந்தைக்குள் படையெடுத்து வந்தன என்றாலும், டாடா மற்றும் அசோக் லேலாண்டு ஆகியவற்றோடு இந்த டிரக்குகளால் மல்லுக் கட்ட முடியவில்லை. மஹிந்திராவோடு இணைந்து அமெரிக்க நேவிஸ்டர், டாடா மற்றும் அசோக் லேலாண்டு ஆகியவற்றோடு போட்டி போட களம் இறங்கி இருக்கும் இந்தச் சமயத்தில், புலியின் வேகத்தோடு பாய்ந்து வந்திருக்கிறது டைம்லரின் பாரத் பென்ஸ்.

'சொல்லி அடிப்பதில் கில்லி’ என்று பெயரெடுத்திருப்பவர் டைம்லர் இந்தியா கமர்ஷியல் நிறுவனத்தின் தலைவர் மார்க் லிஸ்டோசெயா.

''டிரைவர்களை வி.ஐ.பி.க்களாக வரவேற்போம்!

'17 மாதங்களில் 17 டிரக்குகள்’ என்ற தாரக மந்திரத்தோடு தடதடக்கும் லிஸ்டோசெயா, எடுத்த எடுப்பிலேயே மூன்று டிரக்குகளை அறிமுகப்படுத்திவிட்டு, தனது மார்க்கெட்டிங் படையெடுப்பு எப்படி இருக்கும் என்பதை விவரிக்க ஆரம்பித்தார்.

''இன்று எரிபொருள் விலைதான் முக்கியமான விஷயம். ஒரு டிரக்கை இயக்குவதற்குச் செலவாகும் பணத்தின் பெரும் பகுதி எரிபொருளுக்காகத்தான் செலவிடப்படுகிறது. இங்குதான் இன்று நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கும் மூன்று டிரக்குகளுமே ஸ்கோர் செய்கின்றன. இங்கு விற்பனையில் இருக்கும் டிரக்குகளைக் காட்டிலும் டிரைவருக்கான வசதி மற்றும் சொகுசு ஆகியவற்றில் பல படிகள் எங்கள் டிரக்குகள் முன்னணியில் இருந்தாலும், எங்கள் டிரக்குகள் போட்டியாளர்களைவிட கொஞ்சம்தான் விலை அதிகம். எங்கள் டிரக்குகள் பாதுகாப்பில் சிறந்தது. அது, தன்னுடைய முதலாளியையோ, அல்லது ஓட்டுநரையோ எத்தகைய சூழ்நிலையிலும் கைவிடாது. அதுமட்டுமல்ல... பொதுவாக கார் மற்றும் பைக்குகளில் செல்பவர்களுக்கு டிரக்குகளைப் பார்த்தால் ''ஐயோ... நந்தி போகுதே'' என்றுதான் அலுத்துக் கொள்வார்கள். இதை ஓட்டுவது சுலபம் என்பதால், எங்கள் டிரக்குகள் நிச்சயம் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தாது.

''டிரைவர்களை வி.ஐ.பி.க்களாக வரவேற்போம்!

கார் வாங்கப் போகும் ஒரு வாடிக்கையாளருக்குக் கொடுக்கப்படும் மரியாதை என்றுமே டிரக் வாங்கப் போகும் ஒருவருக்குக் கிடைப்பதில்லை. இந்த எண்ணத்தை நாங்கள் அடித்து சுக்குநூறு ஆக்க இருக்கிறோம். கார் ஷோரும் போலவே எங்கள் ஷோரூம்கள் வசதியாகவும் பெரிதாவும் குளிரூட்டப்பட்டும் இருக்கும். எங்களுடைய டிரக்குகளை வாங்குகிறவர் ஒரு சாதாரண டிரைவராக இருந்தாலும், அவரை ஒரு விஐபி போலத்தான் உபசரித்து அவர் வாங்க வந்திருக்கும் டிரக் பற்றிய விபரங்களை மட்டும் சொல்லாமல், அதை சுலபமாக கடனில் வாங்கவும் உதவி செய்வோம். டிரக்கை விற்பனை செய்ததோடு எங்கள் கடமை முடிந்ததாக கருதாமல், அவர் எப்போது சர்வீஸுக்காக வந்தாலும் அவரை ஒரு விருந்தினர் மாதிரி பாவிக்க எல்லா சர்வீஸ் சென்டர்களிலும் ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்!'' என்றவர், சற்று யோசித்துவிட்டு ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்.

''சாதாரண லாரி டிரைவராக இருந்து பல வருஷம் கஷ்டப்பட்டு கொஞ்சம் காசு சேர்த்த பிறகு, சொந்தமாக லாரி வாங்கி ஓட்டலாம்னு நினைக்கிற டிரைவர்கள் இங்க நிறைய பேர் இருக்காங்க. கஷ்டப்படும் அவர்கள் லாபப் படணும். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைக்கும் அவர்கள் களைப்படையக் கூடாது. அப்போதுதான் விபத்துக்களைத் தவிர்க்க முடியும். அதனால் அவர்கள் பயணம் வசதியானதாகவும் இருக்கணும். இதை எல்லாம் நிறைவேற்றுவதுதான் பாரத் பென்ஸின் லட்சியம்!'' என்றார் உறுதி நிறைந்த குரலில்!

-ஆரோக்கியவேல்