Published:Updated:

மார்க்கெட் பிளான் மாருதி சுஸூகி

மார்க்கெட் பிளான் மாருதி சுஸூகி

மார்க்கெட் பிளான் மாருதி சுஸூகி

மார்க்கெட் பிளான் மாருதி சுஸூகி

Published:Updated:
 ##~##

ந்தியாவின் நம்பர் ஒன் கார் தயாரிப்பாளர் மாருதி சுஸ¨கி. இந்த நிறுவனத்துக்கு இது சவாலான காலகட்டம். இந்தியாவில் விற்பனையாகும் பத்து கார்களில் ஐந்து, மாருதியின் தயாரிப்புகள்தான். ஆனால், இப்போது தொழிலாளர் பிரச்னை, சின்ன கார்களைத் தவிர மிட் சைஸ் மற்றும் பிரீமியம் கிளாஸ் கார்கள் விற்பனையில் சறுக்கல், ஜெர்மன் கார்களின் வருகையும் போட்டியும் அதிகரித்திருப்பதுடன் மக்கள் ஸ்டைலான, சொகுசான கார்களை நோக்கிப் பறக்கும் வேகம், மாருதியை நெருக்கடியில் தள்ளி இருக்கிறது. கடந்த 12 மாதங்களில் மாருதியின் மார்க்கெட் ஷேர் தடாலடியாக ஐந்து சதவிகிதம் குறைந்திருப்பதே இதற்குப் பெரிய சாட்சி. 

இந்தியாவில் 1981-ம் ஆண்டு, இந்திய அரசுடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் தனது  கணக்கைத் துவங்கியது ஜப்பானின் சுஸ¨கி நிறுவனம். இந்தியாவில் முதலில் கடை திறந்த வெளிநாட்டு நிறுவனம் என்பதால், இந்திய மார்க்கெட்டைக் கரைத்துக் குடித்துவிட்டது மாருதி சுஸ¨கி. அதனால்தான், இந்தியாவில் மட்டுமே இதுவரை 1 கோடி கார்களை விற்பனை செய்திருக்கிறது அது. கடந்த ஆண்டு மட்டும் 11 லட்சம் கார்களுக்கும் மேல் விற்பனை செய்துள்ளது மாருதி. குறைந்த விலை, அதிக மைலேஜ் - இவை இரண்டும்தான் இந்தியர்களின் முதல் முக்கியத் தேவை என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றபடி கார்களை விற்பனை செய்து வருவதே விற்பனை உயர்வுக்குக் காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்க்கெட் பிளான் மாருதி சுஸூகி

டெல்லி அருகே குர்காவுன் மற்றும் மற்றும் மானேசரில் மாருதி தொழிற்சாலைகள் இருக்கின்றன. இரண்டு தொழிற்சாலைகளையும் சேர்த்து ஆண்டுக்கு 15 லட்சம் கார்களைத் தயாரிக்கிறது மாருதி சுஸ¨கி. 2013-ம் ஆண்டு இறுதிக்குள் ஆண்டுக்கு 17.50 லட்சம் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு இருக்கிறது. தற்போது மொத்தம் 15 மாடல் கார்களும், 150 வேரியன்ட்டுகளும் விற்பனையில் இருக்கின்றன.

இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமாக இருந்தாலும், போட்டியாளர்களின் வருகை மாருதிக்குப் பெரிய

மார்க்கெட் பிளான் மாருதி சுஸூகி

பயத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. ஹூண்டாய், ஹோண்டா, டொயோட்டா, ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா, ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், டாடா என இந்தியாவில் இருக்கும் அத்தனை நிறுவனங்களுமே மாருதியின் மார்க்கெட் ஷேரைப் பங்கு போடுவது எப்படி என்றுதான் திட்டம் தீட்டுகின்றன. மாருதியின் கார்களை அடிப்படையாக வைத்தே மற்ற நிறுவனங்களின் கார்கள் உருவாக்கப்படுகின்றன.

இப்போது இந்திய மார்க்கெட், ஹேட்ச்பேக் கார்களை விட்டுவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக யுட்டிலிட்டி மற்றும் பிரீமியம் கார்கள் பக்கம் திரும்புவதும் மாருதிக்குச் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், யுட்டிலிட்டி மார்க்கெட்டில் முன்னிலையில் இருக்கும் மஹிந்திராவைக் கட்டம் கட்ட காய் நகர்த்துகிறது மாருதி.

தொழிலாளர் பிரச்னைக்குத் தீர்வு கண்டு வரும் அதே நேரத்தில், கார்களின் விற்பனையைக் கூட்டவும், புதிய கார்களை அறிமுகப்படுத்துவதிலும் வேகத்தைக் கூட்டியிருக்கிறது அது. 2013-ம் ஆண்டின் முதல் காராக அப்டேட்டட் மாருதி எஸ்எக்ஸ்-4 அடி எடுத்துவைக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து எஸ்எக்ஸ்-4 கிராஸ்-ஓவர் காரும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

2014-ம் ஆண்டு, இந்தியாவில் முழுக்க முழுக்கத் தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா கார் விற்பனைக்கு வரும். தற்போது 26 - 28 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் கிராண்ட் விட்டாரா, இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் விலை 12-14 லட்சமாகக் குறைந்துவிடும். விலை குறைந்தால், கிராண்ட் விட்டாரா நேரடியாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி-500 காரோடு போட்டி போடும். ஏற்கெனவே மாருதி எர்டிகா, மஹிந்திராவின் ஸைலோ மற்றும் குவான்ட்டோவின் விற்பனையைப் பங்கு போட, ஸ்கார்ப்பியோவுக்குப் போட்டியாக புதிய எஸ்யூவி காரை 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்துகிறது மாருதி.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஙீகி என்கிற குறியீட்டு எண்ணுடன் கான்செப்ட்டாக காட்சியளித்த அந்த கார்தான் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் போட்டியாளர். புதிய கார்களோடு ஸ்விஃப்ட், ஏ-ஸ்டார், வேகன் ஆர் போன்றவற்றிலும் புதிய மாடல்களைக் கொண்டு வர இருக்கிறது மாருதி.

மாருதியின் அதிரடி ஆட்டத்தை இனி பார்க்கலாம்!

- சார்லஸ்