Published:Updated:

AUDI Q5 - சாஃப்ட் ரோடரா? ஆஃப் ரோடரா?

AUDI Q5 - சாஃப்ட் ரோடரா? ஆஃப் ரோடரா?

AUDI Q5 - சாஃப்ட் ரோடரா? ஆஃப் ரோடரா?

AUDI Q5 - சாஃப்ட் ரோடரா? ஆஃப் ரோடரா?

Published:Updated:
 ##~##

டி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்ற சொகுசு/பிரீமியம் பிராண்ட் என்று வந்து விட்டாலே, ஒவ்வொரு கார் நிறுவனமும் ஏதாவது ஒரு விதத்தில் மாறுபட வேண்டும் என மெனக்கெடும். சிறப்பம்சங்கள், சொகுசு வசதிகள், கையாளுமை... இப்படி ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கும். இதில், ஆடியின் தனித்தன்மை என்பது 'குவாட்ரோ’(QUATTRO) எனப்படும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் தான்! 

2 வீல் டிரைவ் சிஸ்டம் என்பது, பொதுவாக கார்களில் மட்டுமே இருக்கும். 4-வீல் டிரைவ் சிஸ்டம் எஸ்யூவி/எம்யூவி போன்ற பெரிய கார்களில் இருக்கும். எஸ்யூவி/எம்யூவிகளில் காரை ஓட்டுவது போன்ற ஹேண்ட்லிங் வேண்டும் என்பதற்காக, இப்போது 'சாஃப்ட் ரோடர்’ என்ற புது வகையை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதாவது, காடு மேடுகளில், மணல் பரப்புகளில் ஏறி இறங்குவதற்கான சக்தியைக் குறைத்துவிட்டு, அதே சமயம் 4-வீல் டிரைவ் சிஸ்டத்தையும் பொருத்தி இருப்பார்கள். கார் போன்ற டைனமிக்ஸ் கொண்ட 4 வீல் டிரைவ் எஸ்யூவி கார்கள்தான் சாஃப்ட் ரோடர்கள்.

AUDI Q5  - சாஃப்ட் ரோடரா? ஆஃப் ரோடரா?

ஆனால், ஆடி அப்படி இல்லை. ஆடி 4-வீல் டிரைவ் சிஸ்டத்தில் சமரசம் செய்து கொள்ளாது. 'குவாட்ரோ சிஸ்டத்தின் சிறப்பை வந்து ஓட்டிப் பாருங்கள்’ என்று நம்மிடம் க்யூ-5 காரைக் கொடுத்து, காடு மேடுகளில் டெஸ்ட் டிரைவ் செய்ய வைத்தது ஆடி நிறுவனம். க்யூ-5 காரில் 3 லிட்டர் டிடிஐ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

முதலில், கடற்கரை மணலில் ஆடி க்யூ-5 காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். குவாட்ரோவை ஆன் செய்துவிட்டு மணலில் ஓட்டினால், சாதாரண சாலையில் செல்வது போல எந்தத் திக்கல் திணறலும் இல்லாமல் பயணம் செய்தது ஆடி. நாம் இதுவரை டெஸ்ட் செய்த கார்களில், இது போன்று ஈஸியாக எந்த காரிலும் கடற்கரை மணலில் ஓட்டியதில்லை. பொதுவாக, கடற்கரை மணலில் ஓட்டும்போது முன் பக்க வீல்களில் இருந்து ஸ்டீயரிங்குக்கு ஃபீட் பேக் கிடைக்காது. வீல் ஸ்கிட் ஆகும். ஆனால், இது போன்ற எந்தச் சிக்கலும் ஆடி க்யூ-5 காரில் இல்லை. கார் முழுமையாக நம்முடைய கன்ட்ரோலில் இருந்தது.

AUDI Q5  - சாஃப்ட் ரோடரா? ஆஃப் ரோடரா?

அடுத்ததாக, சேறாக இருந்த பாதையில் காரை ஓட்டிப் பார்த்தோம். க்யூ-5 காரின் டயர்கள், சேற்றில் செல்வதற்கு ஏற்றவை இல்லை என்பதை காரை எடுத்த உடனே உணர முடிந்தது. அதிகமாக ஸ்கிட் ஆனது க்யூ-5. அடுத்ததாக, சற்று ஆழமான சேறு நிரம்பிய பகுதிக்கு காரை எடுத்துச் சென்றோம். ஒரு சின்ன குட்டையில் காரை இறக்கிய உடன், கீழே தேய்வதுபோல சத்தம் கொடுத்தது க்யூ-5. எஸ்யூவி காராகவே இருந்தாலும், நாம் முன்பு சொன்னது போலவேதான் ஒரு சாஃப்ட் ரோடர்தான் என்பதை நிரூபிக்கத் துவங்கியது.

AUDI Q5  - சாஃப்ட் ரோடரா? ஆஃப் ரோடரா?

கரடு முரடான பாதைகளில் தொடர்ந்து பயணித்தபோது, பெர்ஃபாமென்ஸ் குறைந்ததை உணர முடிந்தது. சாதாரண சாலைகளில் ஓட்டும்போது இருந்த காரின் பெர்ஃபாமென்ஸுக்கும், சேற்றில் ஓட்டியபோது இருந்த பெர்ஃபாமென்ஸுக்கும் நிறையே வித்தியாசம்!

ஆடி க்யூ-5 காரை எடுத்துக்கொண்டு கடற்கரை மணலில் சுற்றலாம். ஆனால், ஆழமான தண்ணீர் பகுதிக்குள் சென்று 'சீன்’ காட்டலாம் என நினைத்தால்... 50 லட்ச ரூபாய் க்யூ-5 காரை இழுக்க, இன்னொரு ஜீப்பைக் கொண்டுவர வேண்டும்!

சுரேன், பொன்.காசிராஜன்